2 நாட்களில் மருக்கள் மறைய இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

Advertisement

Marukkal Maraiya Tips 

இன்றைய அழகு குறிப்பு பதிவில் மருக்கள் மறைய என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம். பொதுவாக ஆண் மற்றும் பெண் இருவருக்குமே முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதுபோல முகத்தில் பருக்கள் வந்தாலே அது போவதற்கு சில நாட்கள் ஆகும். அதுவே முகத்தில் மருக்கள் வந்தால் என்ன செய்வது. முகத்தின் அழகே கெட்டுவிடும். அந்த வகையில் மருக்களை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரி செய்யலாம். அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மருக்கள் மறைய டிப்ஸ் -1 

poondu matrum aamanakku

 1. பூண்டு – 5
 2. ஆமணக்கு எண்ணெய் – சிறிதளவு

ஸ்டேப் -1 

 • முதலில் தோல் உரித்த பூண்டு எடுத்து கொள்ள வேண்டும். பின் அதை மிக்சியில் போட்டு மைபோல நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப் -2 

 • பின் அதில் சிறிதளவு ஆமணக்கு எண்ணெய் சேர்த்து குழைத்து கொள்ள வேண்டும்.
 • பின் இதை மருக்கள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். இதுபோல தொடர்ந்து செய்து வந்தால் மருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விடும்.
முகத்தில் மரு வந்து அழகை கெடுக்கிறதா..! இனி இந்த மாதிரி செய்யுங்க..!

மருக்கள் மறைய டிப்ஸ் -2 

மருக்கள் மறைய டிப்ஸ்

 1. சின்ன வெங்காயம் – 4
 2. பூண்டு – 4
 3. இஞ்சி – 1 சிறிய துண்டு
 4. மஞ்சள்த் தூள் – 1/2 ஸ்பூன்

ஸ்டேப் – 1

முதலில் ஒரு மிக்சியில் நாம் எடுத்து வைத்துள்ள பூண்டு, வெங்காயம் மற்றும் இஞ்சி இவை மூன்றையும் போட்டு மைபோல நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள் ⇒ ஒரே இரவில் முகப்பருக்கள் நீங்கி அழகான முகம் பெற குறிப்புகள் |

ஸ்டேப் -2 

பின் அரைத்த பேஸ்டை ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப் -3 

மருக்கள் மறைய டிப்ஸ்

 • நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த பேஸ்டை, இரவு தூங்கும் முன் மருக்கள் இருக்கும் இடத்தில் தடவி கொள்ளுங்கள்.

ஸ்டேப் -4 

பின் காலை எழுந்ததும் அந்த இடத்தை கழுவி கொள்ளுங்கள். இது போல தொடர்ந்து செய்து வந்தால் மருக்கள் தாங்கவே உதிர்ந்து விடும்.

முகத்தில் உள்ள மரு உதிர எளிமையான வீட்டு வைத்தியம்..!

மருக்கள் மறைய டிப்ஸ் -3 

மருக்கள் மறைய டிப்ஸ் 1

 1. பூண்டு –
 2. எலுமிச்சை சாறு
 3. பேக்கிங் சோடா – சிறிதளவு

ஸ்டேப் -1 

 • தோல் உரித்த பூண்டு எடுத்து கொள்ளுங்கள். அதை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப் -2 

எலுமிச்சை சாறு 

 • பின் அதில் இருந்து சாறை மட்டும் பிழிந்து எடுத்து கொள்ள வேண்டும். பின் இந்த பூண்டு சாறில் எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கொள்ள வேண்டும்.

ஸ்டேப் -3 

 • பின் இதை இரவு தூங்கும் முன் மருக்கள் இருக்கும் இடத்தில் தடவி கொள்ள வேண்டும். பின் காலையில் எழுந்ததும் அதை கழுவி கொள்ளுங்கள்.
 • இதுபோல வாரத்திற்கு 2 முறை அல்லது தொடர்ந்து செய்து வந்தால் மருக்கள் இருந் இடம் தெரியாமல் மறைந்து விடும்.
சருமத்தில் உள்ள மருக்கள் மறைய இயற்கை வைத்தியம் !!!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement