கைகளில் கொள்ளாத அளவுக்கு முடி வளர்ச்சி அதிகமாக..! குப்பையில் எரியும் பொருள் போதும்

Advertisement

முடி வளர்ச்சி அதிகரிக்க

பொதுவாக பெண்களுக்கு அழகு சேர்ப்பது முகம் என்பதை விட அவர்களின் தலை முடித்தான் என்பார்கள். முடி அதிகம் உள்ள பெண்களை பார்த்தாலே நமக்கு பெரிய பொறாமை வந்து விடும். அதேபோல் மனதில் அதிகம் கவலையும் வந்து விடும். நமக்கு மட்டும் அது போன்ற முடி வளரவவே மாட்டேங்குது என்று தெரியவில்லை. தினமும் கண்ணாடியை பார்த்து நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொண்டிருப்போம். அந்த வகையில் தினமும் தோறும் நிறைய வகையான எண்ணெய்களை வாங்கி தலையில் தேய்த்து வந்தாலும் அதற்கு அந்த அளவிற்கு பலன்கள் கிடைக்கவில்லை அதேபோல் அதற்கு நிறைய விதமான பக்க விளைவுகளும் ஏற்படும்.

இயற்கை முறையில் நிறைய எண்ணெய்களை செய்து வந்தாலும் அதனை பின்பற்றுவதில்லை. கொஞ்சம் அலுப்புப்படாமல் இந்த குறிப்பை செய்து பாருங்கள் உங்களுக்கே தெரியும் அதனுடைய பலன்..!

முடி வளர்ச்சி எண்ணெய்:

தலை முடிக்கு முக்கியம் எண்ணெய் என்று யோசிப்பீர்கள் ஆனால் அது முற்றிலும் தவறு. தலை முடியை விட அதிகளவு சத்துக்கள் தான் தேவை. சத்துக்கள் இல்லையென்றால் முடி மெலிசாகத்தான் வளரும். இந்த குறிப்பை பயன்படுத்துங்கள் அதேபோல் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள் வாங்க இப்போது என்ன எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று தெரிந்துகொள்வோம்.

விளக்கெண்ணெய் என்றால் யாரும் தலைக்கு தேய்த்து குளிக்க மாட்டிர்கள் ஆனால் அது தவறு நல்லெண்ணெய் விட அதிகளவு முடி வளர்ச்சியை அதிகமாக்க கூடிய சக்தி விளக்கெண்ணெயில் தான் உள்ளது. சிலர் தேய்க்க மறுப்பார்கள் காரணம் இதில் குளிர்ச்சி தன்மை அதிகமாக இருக்கும் அதனால் மறுத்துவிடுவார்கள்.

விளக்கெண்ணெய் 1/2 கப், தேங்காய் எண்ணெய் 1/2 கப் இந்த இரண்டு எண்ணெய்யும் ஒரே பாட்டில் போட்டு கலந்து வைத்துக்கொள்ளவும் வாரத்திற்கு இரண்டு நாட்கள் கட்டாயம் இந்த எண்ணெய்யை தேய்த்து குளித்து வந்தால் முடி  உதிர்வும் இருக்காது அதேபோல் நன்றாக முடி வளரும்.

முடி வளர என்ன செய்ய வேண்டும்?

இதற்கு வீட்டில் இருக்கும் இரண்டு பொருட்கள் போதும் முக்கியமாக பிரியாணி இலை மற்றும் வெங்காய தோல் இரண்டண்டையும் எடுத்துக்கொண்டு ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வரை கொதிக்கவிடவும்.

கொதித்த பின் அந்த தண்ணீர் ஆறியதும் ஒரு ஸ்பிரே பாட்டில் நிரப்பி கொண்டு பிரிட்ஜியில் 7 நாட்கள் வரை வைத்துக்கொண்டு தலையில் அடித்துக்கொள்ளவும்.

இதனால் முடி எப்போதும் வறண்டது போல் காணப்படாது. அதுபோல் சொட்டை விழுந்த இடத்தில் அதனை தினமும் ஸ்பிரே செய்து வந்தால் அந்த இடத்தில் முடி வளர ஆரம்பிக்கும்.

வாரத்தில் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் வடித்த கஞ்சி 1/2 கப், தேங்காய் பால் 1/2 கப் போன்ற பொருட்களை கொண்டு  வாரம் வாரம் தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும்.

தலை தேய்த்து குளிக்கும் போது இப்படி தான் ஷாம்பு போடுகிறீர்களா..! அப்போ ஏன் முடி உதிராது.?

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami
Advertisement