முக சுருக்கம் மறைய
முக சுருக்கம் வந்து விட்டாலே வயதான தோற்றம் வந்துவிடும். நம்மளுடைய வயது குறைவாக இருக்கும். ஆனால் இந்த முக சுருக்கம் ஏற்பட்டு வயதை அதிகமாக காட்டும். வயதானால் முக சுருக்கம் ஏற்படுவது இயற்கை. ஆனால் இளமை வயதிலே முகம் சுருக்கம் சிலருக்கு ஏற்படுகிறது. இதனை மறைப்பதற்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்யலாம். அது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
பாதாம் பேஸ் பேக்:
பாதாமை ஊற வைத்து தோலை உரித்துவிட்டு பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். கேரட்டையும் தோல் சீவி அரைத்து கொள்ளவும். அடுத்து கற்றாழை தோல் சீவி உள்பகுதியில் இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ளவும்.
இந்த மூன்று பொருட்களையும் மறுபடியும் ஒரு தடவை மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ளவும். இந்த பேக்கை இரவு தூங்குவதற்கு முன்பு முகம் முழுவதும் அப்ளை செய்து காலையில் எழுந்து முகத்தை கழுவி விடலாம்.
இல்லையென்றால், பகல் நேரத்திலே இந்த பேக்கை அப்ளை செய்தாலும் ஒரு 4 மணி நேரம் முகத்தில் வைத்து பிறகு முகத்தை கழுவி விடலாம்.
இந்த பேக்கை தொடர்ந்து அப்ளை செய்து வந்தால் முகம் சுருக்கம் நீங்கி, முகம் பளபளப்பாக இருக்கும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
ஆலிவ் விதை பேஸ் பேக்:
உங்கள் முகத்திற்கு தேவையான அளவு ஆளி விதை எடுத்து ஊற வைத்து கொள்ளவும். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடு வந்ததும் அதில் ஊற வைத்த ஆளி விதையை சேர்க்கவும்.
கொஞ்சம் நேரம் கழித்ததும் கையில் எடுத்து பார்த்தால் ஜெல் போல கையில் பிசுபிசுப்பாக இருக்கும். அப்போது அடுப்பை அணைத்து விடவும். இந்த பேக் ஆறியதும் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து கலந்து விடவும்.
இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து ஒரு 3 மணி நேரம் வைத்து பிறகு முகத்தை கழுவ வேண்டும்.
இந்த பேக்கை வாரத்தில் 2 அல்லது 3 முறை அப்ளை செய்து வாருங்கள் முகத்தில் உள்ள சுருக்கம் நீங்கி முகம் பளபளப்பாக மாறும்.
மேல் கூறப்பட்டுள்ள இரண்டு பேக்கில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பயன்படுத்துங்கள். முக சுருக்கம் உள்ளவர்கள் மட்டும் தான் போட வேண்டும் என்றில்லை. முக சுருக்கம் இல்லாமல் இருந்தாலும் இந்த பேக்கை அப்ளை செய்தால் முக சுருக்கம் வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.
இதையும் படியுங்கள் ⇒ முகப்பரு, சரும வறட்சி, ஆயில் ஃபேஸ், முகம் வெள்ளையாக இவை அனைத்திற்கும் இந்த ஒரு பொருள் போதும்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |