நரை முடி வராமல் தடுக்க
ஹாய் நண்பர்களே..! இன்றைய காலத்தில் அனைவருக்கும் இருக்கின்ற ஒரு பிரச்சனை தான் நரை முடி. எவ்வளவு தான் முடிக்காக நாம் செலவு செய்து வந்தாலும் நரை முடி வந்துவிடுகிறது என்று புலம்பும் நபர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு இன்றைய அழகு குறிப்பு பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் வீட்டில் இருந்தே உங்களுடைய முடிகளை பராமரிக்கலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த பதிவு உதவியானதாக இருக்கும். மேலும் நரை முடி வராமல் முடி என்றென்றும் கருப்பாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று என்பதற்கு பதிவை முழுவதமாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள் ⇒ அரிசி கழுவிய தண்ணீரை இப்படி ஒரு முறை பயன்படுத்தினால் நீங்களே ஆச்சரியபடும் அளவிற்கு முடி வளரும்
நரை முடி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்:
நரை முடி வராமல் இருப்பதற்கு முதலில் நீங்கள் ஒரு Hair பேக்கை தயார் செய்ய வேண்டும். அதை பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தேவையான பொருட்கள்:
- வெந்தயம்- 2 ஸ்பூன்
- கருஞ்சீரகம்- 1 ஸ்பூன்
- சின்ன வெங்காயம்- 3
- தயிர்- 2 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
- கருவேப்பிலை – ஒரு கையளவு
ஸ்டேப்- 1
முதலில் நீங்கள் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை எடுத்துக்கொண்டு அதை தண்ணீரில் போட்டு ஊற வைத்து விடுங்கள். குறைந்தது 3 மணி நேரம் நன்றாக ஊற வேண்டும்.
ஸ்டேப்- 2
அதன் பிறகு 3 மணி நேரம் கழித்து ஊற வைத்த பொருட்கள் மற்றும் எடுத்து வைத்துள்ள கருவேப்பிலை இரண்டையும் மிக்சி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 3
இப்போது மிக்சியில் உள்ள பொருட்களுடன் எடுத்து வைத்துள்ள சின்ன வெங்காயம் மற்றும் தயிர் இந்த இரண்டையும் சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளுங்கள். ஒரு பேஸ்ட் போல் அரைப்படவுடன் அதனை ஒரு பாத்திரத்தில் தனியாக வைத்து விடுங்கள்.
ஸ்டேப்- 4
அடுத்ததாக ஒரு காட்டன் துணியை எடுத்துக் கொண்டு அந்த துணியில் அரைத்து வைத்துள்ள பேஸ்டை சேர்த்து வடி கட்டி வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 5
கடைசியாக நீங்கள் வடி கட்டி வைத்து இருக்கும் பேஸ்ட்டுடன் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இப்போது உங்களுடைய முடிக்கு Hair பேக் தயார்.
ஸ்டேப்- 6
அதன் பிறகு நீங்கள் தயார் செய்த Hair பேக்கை உங்களுடைய முடியில் அப்ளை செய்து அதன் 15 நிமிடம் கழித்து வழக்கம் போல் தலை குளித்து விடுங்கள்.
இது மாதிரி செய்யும் போது உங்களுடைய முடி என்றென்றும் கருப்பாக நரை முடி வராமல் அடர்த்தியாக வளரும்.
இதையும் படியுங்கள்⇒ நீங்களே ஆச்சிரியப்படும் அளவிற்கு அடர்த்தியான முடி வேண்டுமா.! அப்போ இதை செய்யுங்கள்.!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |