நரைமுடியை கருப்பாக மாற்றுவதற்கு காசு கொடுத்து ஹேர் டை வாங்காதீங்க.! இந்த மாதிரி ஹேர் டை பயன்படுத்துங்க..!

Advertisement

Narai Mudi Karupaga Mara Tips in Tamil

வெள்ளை முடியை மறைப்பதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த டை மற்றும் எண்ணெய்களை பயன்படுத்தாமல் இயற்கையான முடியில் ஹேர் டை தயாரித்து பயன்படுத்துங்கள். முன்னோர்கள் காலத்தில் வயதானவர்களுக்கு வெள்ளை முடி ஏற்படும். இப்பொழுது அப்படியில்லை இளம் வயதினருக்கும் வெள்ளை முடி தோன்றுகிறது. இதற்கு காரணம் ஊட்டச்சத்து குறைபாடு தான். இதற்கு முதலில் சத்தான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். மேலும், நீங்கள் ஹேர் டை பயன்படுத்த வேண்டும் என்றால் இயற்கையான முறையில் ஹேர் டை தயாரித்து பயன்படுத்துங்கள். கடையில் விற்கும் ஹேர் டையை பயன்படுத்தி உங்களின் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்ளாதீர்கள்.

ஹேர் டை தயாரிக்க தேவையான பொருட்கள்:

  • ஹென்னா பவுடர்- 5 தேக்கரண்டி
  • தண்ணீர் -200 ML
  • டீத்தூள் – 2 தேக்கரண்டி

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஹேர் டை செய்முறை:

Narai Mudi Karupaga Mara Tips in Tamil

ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி 2 தேக்கரண்டி டீத்தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும். டீத்தூள் சாயம் இறங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு டீ கஷாயத்தை வடிக்கட்டி வைத்து கொள்ளவும்.

பிறகு ஒரு கடாய் எடுத்து அதில் 5 தேக்கரண்டி மருதாணி பவுடர், டீ கஷாயத்தை சேர்த்து கலந்து கொள்ளவும். பேஸ்ட் பதத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக டீ கஷாயத்தை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த ஹேர் டையை மேலே மூடி போட்டு கடாயிலே இரவு முழுவதும் அப்படியே வைத்திருக்க வேண்டும்.

அப்ளை செய்யும் முறை:

இரவு முழுவதும் ஊறிய ஹேர் பேக்கை மறுநாள் காலையில் தலையில் அப்ளை செய்யலாம். முடியில் எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் பிரஷாக இருக்க வேண்டும். டையை தலை முடி முழுவதும் படுமாறு அப்ளை செய்து கொள்ளுங்கள். 2 மணி நேரம் அப்படியே இருக்கட்டும். பின் எந்த ஷாம்பும் அப்ளை செய்யாமல் தலையை அலசி கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள் ⇒ 15 நாட்களில் முடி உதிர்வை நிறுத்தி, வளர்ச்சியை அதிகப்படுத்த வெந்தயம், கருவேப்பிலை மட்டும் போதும்

ஹேர் டை தயாரிக்க தேவையான பொருட்கள்:

  • அவுரி பொடி –4 தேக்கரண்டி
  • மருதாணி பொடி –5 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் அவுரி பொடி 4 தேக்கரண்டி, மருதாணி பொடி 5 தேக்கரண்டி, சிறிதளவு உப்பு, வெந்நீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

அப்ளை செய்யும் முறை:

Narai Mudi Karupaga Mara Tips in Tamil

இந்த அவுரி பேக்கை மிக்ஸ் செய்தவுடன் தலையில் அப்ளை செய்து 1 மணி நேரம் தலையில் ஊற வேண்டும். எந்த ஷாம்பும் அப்ளை செய்யாமல் வெறும் தண்ணீரில் மட்டும் தலையை அலசி கொள்ளவும்.

நீங்கள் மருதாணி ஹேர் டையை அப்ளை செய்த மறுநாள் அவுரி பேக்கை அப்ளை செய்யுங்கள். முடியின் வேரிலுருந்தே கருப்பாக மாறியிருப்பதை காண்பீர்கள்.

குறிப்பு:

சளி பிரச்சனை, சைனஸ், நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த பேக்கை பயன்படுத்த வேண்டாம்.

இதையும் படியுங்கள் ⇒ 5 நிமிடத்தில் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் நரை முடியை கருப்பாக மாற்றலாம்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement