முடி வளர்ச்சியை அதிகரிக்க
யாராக இருந்தாலும் சரி முடி நீளமாகவும் மற்றும் அடர்த்தியாகவும் எப்போது தான் நமக்கு வளரும் என்று அதை நினைத்து கொண்டிருப்பார்கள். சிலர் அப்படியே விடாமல் ஏதாவது முடிக்கு ட்ரை செய்து கொண்டிருப்பார்கள். ஏனென்றால் என்றாவது ஒரு நாள் முடி நமக்கு பிடித்த மாதிரி அடர்த்தியாக வளரும் என்ற நம்பிக்கையினை வளர்த்து கொள்வார்கள். அதிலும் சிலர் செயற்கையான முறையில் தயாரித்து கடைகளில் விற்கும் எண்ணெயினை முடிக்கு அப்ளை செய்து பார்ப்பார்கள். ஆனால் இது போன்ற எண்ணெய்கள் அனைத்தும் நமது முடிக்கு நன்மையும் கிடையாது மற்றும் அவை முடியை நன்றாக வளர செய்வதும் இல்லை. ஆகவே இயற்கையான முறையில் முடிக்கு எண்ணெய் தயாரித்து முடியை 2 மடங்கு எப்படி வளர செய்வது என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
முடி வளர என்ன செய்ய வேண்டும்:
நீங்கள் எதிர்பார்த்த மாதிரி 2 மடங்கு முடியை வளர செய்வதற்கு முதலில் எண்ணெய் எப்படி தயாரிப்பது என்று விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
- ஆளி விதை- 4 தேக்கரண்டி
- ஆலிவ் எண்ணெய்- 5 தேக்கரண்டி
இதையும் படியுங்கள்⇒ முகத்தில் உள்ள குழிகளை மறைக்க ஐஸ் கட்டி, கற்றாழை முதல் இன்னும் சில குறிப்புகள்
How to Make Hair Oil at Home For Hair Growth:
முடியின் வளர்ச்சிக்கு ஆளிவிதை:
ஆளிவிதை முடியின் வளர்ச்சிக்கு சிறந்த ஒரு பொருளாக இருக்கிறது. அதனால் 4 தேக்கரண்டி ஆளிவிதை எடுத்துக்கொண்டு அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பவுடர் போல அரைத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளுங்கள்.
கடாயில் ஆலிவ் எண்ணெயை சேர்த்தல்:
இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஆலிவ் எண்ணெய் 5 தேக்கரண்டி சேர்த்து நன்றாக எண்ணெயை சிறிது நேரம் கொதிக்க விடுங்கள்.
ஆலிவ் எண்ணெயுடன் ஆளிவிதை பவுடர் சேர்த்தல்:
சிறிது நேரம் கழித்த பிறகு அடுப்பில் இருக்கு எண்ணெயுடன் ஆளிவிதை பவுடர் 2 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.
கடைசியாக எண்ணெய் தயாரித்தல்:
அடுப்பில் எண்ணெயை நன்றாக கொதித்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு தயார் செய்த எண்ணெயை ஆற விடுங்கள். இப்போது உங்களுடைய முடிக்கு ஹேர் ஆயில் தயராகிவிட்டது.
இதையும் படியுங்கள்⇒ முகத்தில் எண்ணெய் வழிகிறது என்ற கவலை வேண்டாம்.! இந்த 6 -ல் ஏதவாது ஒன்றை பயன்படுத்தவும்
எண்ணெய் முடிக்கு அப்ளை செய்யும் முறை:
நீங்கள் தயார் செய்து வைத்துள்ள எண்ணெயை இரவு தூங்க செல்வதற்கு முன்பு தலையில் நன்றாக அப்ளை செய்து 10 நிமிடம் மசாஜ் செய்து அப்படியே விட்டு விடுங்கள்.
மறுநாள் காலையில் எழுந்து தலை குளித்து விடுங்கள். இது மாதிரி வாரம் 2 முறை செய்தால் போதும் 2 மடங்கு முடி அதிகமாக வளர்ந்து இருக்கும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |