Natural Home Made Hair Dye in Tamil
நரை முடியானது தலையில் எப்போதும் குறைவாக தான் இருக்கும். ஆனால் இப்போது அதிகமாக இருக்கும். அதுவும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக உள்ளது. ஏன் இந்த இளநரை வருகிறது என்று தெரியுமா..? உடலுக்கு தேவையான சத்துக்கள் குறைவாக உள்ளதால் தான் இந்த நரை ஏற்படுகிறது. மேலும் நாம் அதனை தவிர்க்க உடலுக்கு சத்துக்களை அளிக்கும் கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் என்று சாப்பிட்டு வந்தால் இந்த நரை முடி வருவதை தவிர்க்க முடியும்..! சரி வாங்க தற்போது இள நரையை எப்படி கருமையாக இயற்கை முறையில் மாற்றுவது என்று பார்க்கலாம்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Natural Home Made Hair Dye in Tamil:
முதலில் நாம் 3 பொருளை எடுத்துக்கொள்ள போகிறோம். அதில் ஒன்று தான் செம்பருத்தி பூ, செம்பருத்தி இலை, கரிசலாங்கன்னி இலை இது அனைத்துமே ஒரு கை பிடி அளவு எடுத்துக்கொள்ளவும். அதனை கழுவி மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
இப்போது அரைத்த பொருட்களை வைத்து வடிகட்டி சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் கடாயை வைத்து அதில் வடிகட்டி வைத்த சாறை ஊற்றி அதனை மிதமான தீயில் வைத்து அதனை பாதி அளவாக கொதிக்கவிடவும்.
பாதி அளவு வந்தவுடன் அதில் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி சேர்த்துக் கொள்ளவும். அடுத்து அதனை ஒரு முறை கலந்துவிட்டு அதனுடன் 2 ஸ்பூன் அளவிற்கு மருதாணி பொடி சேர்த்து கட்டியாக மாறாமல் பேஸ்ட் போல் கலந்து விட்டுக்கொள்ளவும்.
இதை காலையில் அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் இதனை இரவே செய்து வைக்கவும். இதனை காலையில் எடுத்து பார்த்தால் மருதாணி பொடி நெல்லிக்காய் பொடி நிறம் மாறிவிடும்.
அதன் பின் கட்டியாக ஒரு பேஸ்ட் போல் இருக்கும். அதில் 2 ஸ்பூன் அளவு மருதாணி பொடி சேர்த்தீர்கள் என்றால் 5 ஸ்பூன் அளவு அவரி பொடி சேர்க்கவேண்டும். அடுத்து அதனுடன் ஒரு எலுமிச்சை பழ ஜூஸ் சேர்த்துக் கொள்ளவும். அடுத்து அதில் 1 பிஞ் அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
இது அனைத்தையும் பேஸ்ட் போல் கலந்துகொள்ள தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். தலையில் அப்ளை செய்யும் போது ஒழுகாமல் இருக்கும் அளவிற்கு கலந்துகொள்ளவும்.
மேல் சேர்க்கப்பட்ட அனைத்துமே இயற்கை முறையில் விற்கும் பொருட்களை வாங்கி சேர்த்துக் கொள்ளவும். அதேபோல் இந்த பொருள் அனைத்தும் உங்களுக்கு எந்த வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.
நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முடி வளர வேண்டுமா..? அப்போ இந்த எண்ணெயை தடவுங்க..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |