இளநரை பிரச்சனையா? இளநரைக்கு உடனடி தீர்வு!!!

Advertisement

Natural Remedies for Premature Grey Hair in Tamil!!!

இளநரை வருகிறது என்றால் உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று தான் அர்த்தம். இளநரை வர உடல் ரீதியாக பல காரணங்கள் இருக்கின்றன. சிலருக்கு பாரம்பரியமாகவே இளநரை வரலாம். சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்துகின்றது இந்த இளநரை. வயதானால் தான் நரைமுடி வரும் என்னும் காலம் சென்று குழந்தைகளுக்கு கூட இளநரை வரும் காலம் வந்துவிட்டது.  இளநரையானது அழகற்ற வயதான தோற்றத்தை காண்பிக்கின்றது என்று பலரும் அதிக கவலைப்படுகின்றன. இளநரையை போக்க பல முயற்சிகளை செய்தும் பலன் இல்லையா?

நாம் இந்த பதிவில் பார்க்க இருப்பது இயற்கையான முறையில் இளநரைக்கு தீர்வு காணும் மூலிகை எண்ணெய் தயாரிப்பது என்பதனை பற்றித்தான்! இந்த பதிவு உங்கள் இளநரை பிரச்சனையை நிரந்தரமாக போக்க கட்டாயம் உதவும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

இளநரையை போக்கும் மூலிகை எண்ணெய் தயாரிப்பது எப்படி?

natural remedies for premature grey hair in tamil

தேவையான பொருட்கள் :

  • கருப்பு எள் – 3 டேபிள் ஸ்பூன்
  • கரிசலாங்கண்ணி பொடி – 1 டேபிள் ஸ்பூன்
  • நெல்லிக்காய் பொடி – 1/2 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் – 250ml
  • செம்பருத்தி பொடி – 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

ஸ்டேப் 1:

இதனை செய்ய  இரும்பு சட்டி அல்லது ஸ்டீல் சட்டியினை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஸ்டேப் 2:

natural remedies for premature grey hair in tamil

சட்டியினை அடுப்பில் வைத்து சட்டி காய்ந்ததும் தேங்காய் எண்ணெயினை ஊற்ற வேண்டும்.

ஸ்டேப் 3:

natural remedies for premature grey hair in tamil

எண்ணெய் நன்கு கொதித்த பின்னர் அதனுடன் கரிசலாங்கண்ணி பொடி, நெல்லிக்காய் பொடி, செம்பருத்தி பொடி சேர்க்க வேண்டும்.

ஸ்டேப் 4:

பின் அதனை கலந்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்க வேண்டும்.

ஸ்டேப் 5:

பிறகு அதனுடன் கருப்பு எள்ளையும் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பின் அடுப்பை off செய்துவிட வேண்டும்.

இளநரையைத் தடுக்கும் நெல்லிக்காய் எண்ணெய்..!

ஸ்டேப் 6:

natural remedies for premature grey hair in tamil

அடுப்பில் இருந்து இறக்கிய எண்ணெயினை 2 நாள்கள் அப்படியே வைத்து விட வேண்டும்.

ஸ்டேப் 7:

natural remedies for premature grey hair in tamil

  • 2 நாட்களுக்கு பிறகு எண்ணெயினை வடிகட்டி ஒரு பாட்டிலில் மாற்றிக்கொள்ள வேண்டும்.
  • 6 மாதங்கள் வரை இந்த எண்ணெயினை பயன்படுத்தலாம். எண்ணெயினை நீங்கள் தினசரி பயன்படுத்தலாம் அல்லது வாரத்தில் 3 முறை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

எண்ணெயினை உபயோகிப்பது எப்படி?

  • இந்த எண்ணெயினை பயன்படுத்தும் முன் லேசாக சூடு செய்து மிதமான சூட்டில் தலையில் தேய்த்து லேசாக மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்வதால் தலையில் இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்.
  • எண்ணெயினை இரவில் தலையில் தேய்த்து காலையில் ஹெர்பல் ஷாம்பு அல்லது சீயக்காய் பயன்படுத்தி நன்கு தலையை வாஷ் செய்ய வேண்டும்.
  • வாரத்தில் 3 மூன்று முறை இதனை பயன்படுத்துவதால் இளநரையானது விரைவில் மறைய தொடங்கும்.

👉10 நிமிடத்தில் இளநரை, முது நரையை கருப்பாக மாற்ற இதை Try பண்ணுங்க..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

 

Advertisement