ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக | Night Face Pack For Skin Whitening in Tamil

Advertisement

முகம் வெள்ளையாக இயற்கை வழிகள் | Night Skin Care Routine in Tamil

முகத்தை நன்றாக பராமரிக்க எல்லோருக்கும் ஆசையாக தான் இருக்கும். ஆனால் சருமத்தை பராமரிக்க எல்லோருக்கும் நேரம் உள்ளதா என்ற கேள்விக்கு பலரிடம் பதில் கிடையாது. முக அழகை பராமரிப்பதற்கும் உடலுக்கு ஓய்வு கொடுப்பதற்கும் சரியான நேரம் என்றால் அது இரவு நேரம் தான். இயற்கை முறையில் பார்த்தால் இரவு நேரம் தான் சரும அழகை பராமரிக்க சரியான நேரம். முகத்திற்கு ஈரப்பதம் கொடுப்பதற்கு, இளமையை தக்க வைத்து கொள்ள என அனைத்து விதத்திலும் உங்களுக்கு உதவியாக இருக்கும். ஒரே இரவில் உங்கள் சருமத்தை ஜொலிக்க வைப்பதற்கான சூப்பரான டிப்ஸை இந்த தொகுப்பில் கொடுத்துள்ளோம் அதை அனைவரும் படித்து பயன் பெறுங்கள்.

டிப்ஸ்: 1

Night Skin Care Routine in Tamil

 • எந்த பேஸ் பேக் போடுவதாக இருந்தாலும் அதற்கு முதலில் முகத்தில் உள்ள கிரீம், அழுக்கு போன்றவற்றை நீக்கி கொள்வது அவசியம்.
 • இதற்கு நீங்கள் தேங்காய் எண்ணெய், Baby Oil போன்றவற்றை முகத்தில் தடவி Circular Motion-ல் மசாஜ் செய்து கொள்ளுங்கள்.
 • பின் நீங்கள் பயன்படுத்தும் Cleanser வைத்து முகத்தை கழுவி கொள்ளுங்கள். முகத்தை துடைக்கும் போது பொறுமையாக துடைக்கவும்.

டிப்ஸ்: 2

Night Face Pack For Skin Whitening in Tamil

 • ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் காபி தூள், 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை, சிறிதளவு தேங்காய் எண்ணெய் அல்லது Almond oil சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.
 • பின் இதை முகத்தில் தடவி 2 நிமிடம் மசாஜ் செய்யவும். இரண்டு நிமிடம் கழித்து முகத்தை தூய நீரினால் கழுவி விடவும். முகத்தை கழுவி விட்டு ஒரு காட்டன் துணியால் முகத்தை துடைத்து கொள்ளவும்.

டிப்ஸ்: 3

night skin care in tamil

 • ஒரு சிறிய பாத்திரத்தில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் தயிர், 1 டேபிள் ஸ்பூன் தேன் சிறிதளவு லெமன் சாறு சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
 • பின் இதை முகத்தில் தடவி 15 நிமிடம் காயவைக்கவும். 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவி விடவும். இதை நீங்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம்.

டிப்ஸ்: 4

night skin care routine home remedies in tamil

 • முட்டையில் உள்ள வெள்ளை கருவை முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் கழுவி விடுங்கள்.
 • இந்த வாசனை பிடிக்காதவர்கள் இரண்டு மணி நேரம் மட்டும் முகத்தில் வைத்து விட்டு பின்னர் கழுவி விடலாம். இதை நீங்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம்.

டிப்ஸ்: 5

night skin care routine home remedies in tamil

 • ஒரு சிலருக்கு முகப்பரு மற்றும் பரு மறைந்த வடுக்கள் இருக்கும் அதை நீக்குவதற்கும், Dark Circle நீங்குவதற்கும் கிரீன் டீ மற்றும் உருளைக்கிழங்கு சாறு இரண்டையும் சம அளவு எடுத்து கொள்ளவும்.
 • பின் இதில் ஒரு காட்டன் துணியை நினைத்து முகத்தில் தடவி காலையில் கழுவி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கும்.

டிப்ஸ்: 6

night skin care routine home remedies in tamil

 • உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பல விதத்திலும் நன்மை தரக்கூடியது தக்காளி. கோடைகாலத்தில் உபயோகப்படுத்த ஏற்ற அழகு குறிப்பு தக்காளி.
 • தக்காளியை இரண்டாக நறுக்கி, அதை காய்ச்சாத பாலில் நினைத்து முகத்தில் தடவி வந்தால் சருமத்திற்கு நல்ல பொலிவை கொடுக்கும்.
அழகை அதிகரிக்க இரவில் செய்யக்கூடிய எளிய அழகு குறிப்புகள்..!

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement