Pimple Removal Remedy at Home in Tamil
இன்றைய கால கட்டத்தில் நன்மைகளும், தீமைகளும் சேர்ந்தே தான் நடக்கிறது. அதாவது நமது அறிவியலின் அபரிவிதமான வளர்ச்சியால் பல வகையான நன்மைகள் நடக்கின்றது. அதே சமயத்தில் அறிவியலின் அபரிவிதமான வளர்ச்சியால் பல வகையான தீமைகளும் நடக்கின்றன. அதிலும் குறிப்பாக இன்றைய சூழலில் அறிவியலின் கண்டுபிடிப்புகள் நமக்கு தீமைகளை தான் அளிக்கின்றன. உதாரணமாக அறிவியலின் மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பான வாகனங்களினால் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றது. இந்த சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக நமது உடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் பலவகையான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
அப்படி நமது சருமத்திற்கு ஏற்படும் பல வகையான பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த பருக்கள். இந்த பருக்களை போக்குவதற்கு நாம் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியை சென்று அடைவதில்லை. அதனால் தான் இன்றைய பதிவில் உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி உங்கள் முகத்தில் உள்ள பருக்களை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
Best Home Remedy for Pimples in Tamil:
இயற்கையான மற்றும் எளிமையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி உங்கள் முகத்தில் உள்ள பருக்களை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம்.
இந்த குறிப்பினை பற்றி விரிவாக காண்பதற்கு முன்னால் இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- தேன் – 1 டேபிள் ஸ்பூன்
- உளுந்து மாவு – 1 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
- பாதாம் – 3
- ரோஸ் வாட்டர் – 1 டேபிள் ஸ்பூன்
முகத்தில் ஒரு பருக்கள் கூட வரக்கூடாது என்றால் அதற்கு முதலில் இதை செய்யனும்
மிக்சி ஜாரை எடுத்து கொள்ளுங்கள்:
முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 3 பாதாமை சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.
பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் நன்கு சலித்து சேர்த்து கொள்ளுங்கள்.
மஞ்சள் தூளை கலக்கவும்:
அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை கலந்து கொள்ளுங்கள். மஞ்சள் ஒரு சிறந்த அழற்சி நிவாரணி அதனால் இது பருக்களுக்கு எதிராக நன்கு செயல்படும்.
தேனை சேர்க்கவும்:
அடுத்து நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் தேனை அதில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பருக்களினால் ஏற்பட்ட கருமை இருந்த இடமே தெரியாமல் மறைய வேண்டுமா இதை ட்ரை பண்ணுங்க போதும்
உளுந்து மாவினை கலந்து கொள்ளவும்:
பிறகு 1 டேபிள் ஸ்பூன் உளுந்து மாவினை அதில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
எலுமிச்சை சாற்றினை சேர்த்து கொள்ளவும்:
அதனுடனே நாம் எடுத்து வைத்திருந்த 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினையும் கலந்து கொள்ளுங்கள்.
ரோஸ் வாட்டரை கலந்து கொள்ளுங்கள்:
இறுதியாக அதில் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரை கலந்து உங்கள் முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து நன்கு குளிர்ச்சியான நீரை பயன்படுத்தி உங்களின் முகத்தை கழுவி கொள்ளுங்கள்.
இதனை தினமும் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் ஒரே வாரத்தில் உங்களின் முகத்தில் இருந்த பருக்கள் மறைய ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |