பருக்கள் நீங்க
அனைவருக்கும் உடலில் இருக்கும் பிரச்சனைகளில் முகப்பருவும் ஒன்று. ஒரு பரு முகத்தில் வந்தாலே அதை அப்படியே விட்டால் கூட சரி ஆகிடும். நீங்கள் செய்கின்ற தவறு அந்த பருவை கிள்ளுவது. பருக்களை கிள்ளினால் மறுமுறை பருக்கள் வந்து கொண்டே இருக்கும். இன்னொன்று முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். நான் இந்த இது மாதிரியெல்லாம் செய்கின்றேன் ஆனாலும் என் முகத்தில் பருக்கள் இருக்கிறது என்று கவலைப்படுகிறீர்களா.! கவலையை விடுங்கள் இந்த பதிவில் அதற்கான தீர்வை சொல்கிறேன். இதை ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா முகப்பரு இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
முகத்தில் ஐஸ்கட்டி:
ஒரு சின்ன ஐஸ் கட்டி எடுத்து அதை ஒரு காட்டன் துணியில் வைத்து முகத்தில் பருக்கள் உள்ள இடத்தில் அழுத்தி எடுங்கள். இது போல் செய்வதினால் பருக்கள் இருந்த இடத்தில் வலி இருந்தால் நீங்கிவிடும்.
Tea Tree Oil For Face in Tamil:
டீ ட்ரீ ஆயில் சிறிதளவு எடுத்து பருக்கள் உள்ள இடத்தில் அப்ளை செய்யவும். 20 நிமிடம் கழித்து ஒரு காட்டன் துணியால் துடைத்து விடுங்கள்.
இதையும் படியுங்கள் ⇒ முகத்தில் இருக்கும் பருக்கள் 3 நாட்களில் மறைய இந்த இலை மட்டும் போதும்..!
எலுமிச்சைப்பழம் | தேன்:
ஒரு கிண்ணத்தில் எலும்பிச்சை சாறு சிறிதளவு, தேன் 2 சொட்டு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் இந்த கலவையை பரு உள்ள இடத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து சுத்தமான காட்டன் துணியால் துடைத்து விடுங்கள்.
உருளைக்கிழங்கு முகத்தில்:
பாதி உருளைக்கிழங்கு எடுத்து சீவி சாறாக எடுத்து கொள்ளவும். உருளைக்கிழங்கு சாறுடன் சிறிதளவு பட்டை தூள் சேர்த்து கலந்து கொண்டு பரு உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் கழித்து காட்டன் துணியால் துடைத்து விடுங்கள்.
கற்றாழை ஜெல்:
ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல், புதினா இலைகளின் சாற்றை எடுத்து கொண்டு இரண்டையும் மிக்ஸ் செய்யவும். இந்த கலவையை பரு உள்ள இடத்தில் தடவி இரவு முழுவதும் அப்ளை செய்து கிளையில் முகத்தை கழுவி விடுங்கள்.
உங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு இடத்தில் பருக்கள் இருந்தால் ஒரு நாள் மட்டும் செய்தலே மறு நாள் பருக்கள் மறைத்து விடும். அதுவே உங்களுக்கு முகம் முழுவதும் பருக்கள் இருந்தால் ஒரு வாரம் தொடந்து அப்ளை செய்யுங்கள்.
இதையும் படியுங்கள் ⇒ உங்கள் முகத்தில் இருக்கும் பருக்களில் இந்த தவறை செய்தால் பருக்கள் வந்து கொண்டே இருக்கும்
இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |