அம்மா கவிதைகள் | Amma Kavithai in Tamil

Amma Kavithai in Tamil

அம்மா கவிதைகள் | Amma Kavithai in Tamil

Amma Kavithai:- அனைத்து உயிரினங்களும் அதிகம் நேசிக்கும் ஒரு பந்தம் என்றால் அது அம்மா தான். அம்மாவை பிடிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. நமக்கு இந்த உலகத்தை காட்டியவரே அம்மா தான். உலகில் தனக்கென எந்த ஒரு தேவைகளையும் எதிர்பார்க்காமல் நம்மீது அதிக பாசத்தை காட்டக்கூடிய ஒரே ஜீவன் அம்மா தான். அம்மா என்கின்ற உறவுக்கு அடுத்து தான் இந்த உலகத்தில் மற்ற உறவுகள் எல்லாம். அம்மா என்ற உறவை பற்றி புகழ வார்த்தைகளே இல்லை. சரி இந்த பதிவில் அம்மா கவிதை வரிகள் மற்றும் அம்மா கவிதை படங்கள் மூலம் பதிவு செய்துள்ளோம். அவற்றில் இப்பொழுது ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாங்க…

newபிறந்தநாள் வாழ்த்துக்கள்

அம்மா கவிதை வரிகள்:

amma kavithai in tamil

அம்மா பற்றிய கவிதை:-

ஒவ்வொரு நாளும்
கவலைபடுவாள்
ஆனால் ஒரு நாளும்
தன்னை பற்றி
கவலை படமாட்டாள்
(அம்மா)

newஅன்னையர் தினம் வாழ்த்துக்கள் 2022
குழந்தை கவிதை

அம்மா கவிதை வரிகள்:

amma kavithai

பேசியும் புரியாத உறவுகளுக்கு மத்தியில்
பேசாமல் புரிந்து கொள்ளும் உறவு ‘அம்மா’.
கேட்டும் கொடுக்காத தெய்வங்களுக்கு மத்தியில்
கேட்காமல் கொடுக்கும் தெய்வம் ‘அம்மா’.

Amma Kavithai in Tamil:-

Amma Kavithai in Tamil

காயங்கள் ஆறிபோகும்…
கற்பனைகள் மாறிபோகும்…
கனவுகள் களைந்துபோகும்…
என்றுமே மாறாமல் இருப்பது
தாய் நம் மீது கொண்ட பாசமும்…
நாம் தாய் மீது கொண்ட பாசமும்…

Amma Kavithai in Tamil:-

Amma Kavithai in Tamil

அழகு கவிதை

 

உயிருக்குள் அடைக்காத்து
உதிரத்தை பாலாக்கி
பாசத்தில் தாலாட்டி
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து
நமக்காகவே
வாழும் அன்பு
தெய்வம் அன்னை..!

அம்மா கவிதை வரிகள் – Amma Kavithai:

Amma Kavithai

உலகில் தேடி தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை

அம்மா கவிதை வரிகள்:

Amma Kavithai in Tamil

காலம் முழுவதும்
உன்னை வயிற்றிலும்…
மடியிலும்…
தோளிலும்…
மார்பிலும்…
சுமப்பவள்…
தாய் மட்டுமே !!!
அவளை என்றும்
மனதில் சுமப்போம் !!!

Amma Kavithai in Tamil:

Amma Kavithai

இன்பம் துன்பம்
எது வந்த போதிலும்
தன் அருகில்
வைத்து அனைத்து
கொள்கிறது தாய்மை

அம்மா கவிதை:-

Amma Kavithai Tamil

நான் முதல்முறை
பார்த்த அழகிய
பெண்ணின் முக தரிசனம்
அம்மா

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil