Pimples on Face Removal Tips Home Remedies
ஆண்களுக்கும், பெண்களுக்கும் இருக்கின்ற பிரச்சனையில் முகப்பரு பெரிய பிரச்சனை. முகப்பரு வந்துவிட்டாலே அதனை எப்படி போக்குவது என்று கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துகிறோம். ஒரு பரு வந்தவுடனே அதனை கிள்ளி விடுவீர்கள், இல்லையென்றால் அதில் ஏதவாது செய்து போக வேண்டும் என்று நினைப்பீர்கள். முதலில் பரு வந்த பிறகு அதை ஏதும் Disturb செய்யாமல் இருந்தாலே அதுவாகவே போகிவிடும். அதனால் இந்த பதிவில் பரு வர காரணத்தையும், பரு வராமல் தடுக்கவும், பரு வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் இந்த பதவில் படித்து தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
பருக்கள் வர காரணம்:
முகப்பரு வருவதற்கு பல காரணங்கள் இருக்கிறது அது என்னென்ன என்று தெரிந்து கொள்வோம்.
- மரபியல் மாற்றம்
- பருவமடைதல்
- மன அழுத்தம்
- தூக்கமின்மை
- ஹார்மோன் மாற்றங்கள்
- பொடுகு பிரச்சனை
- பால் உணவு அதிகம் சாப்பிடுவது
- அதிக இனிப்பு உணவுகள் சாப்பிடுவது
போன்ற காரணங்களால் பருக்கள் ஏற்படுகிறது.
பருக்கள் வராமல் தடுப்பதற்கு:
முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும்:
ஒரு நாளைக்கு 2 முறை சோப்பை பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். அடிக்கடி முகத்தை தொட கூடாது. தலைமுடி முகத்தில் படாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
பரு மீது கை வைக்காமல் இருப்பது:
முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் மீது கை வைக்கவோ, கிள்ளவோ கூடாது. அப்படியே விடுவதன் மூலம் மறுபடியும் பருக்கள் வராமல் தடுக்கலாம்.
தண்ணீர் குடிக்க வேண்டும்:
தினமும் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகமாக சாப்பிட வேண்டும். மன அழுத்தத்தை தவிர்க்க யோகா செய்யுங்கள்.
இதையும் படியுங்கள் ⇒ முகம் பளபளப்பாக 7 நாட்கள் இந்த மாதிரி செய்தால் போதும்
பருக்களை நீக்க வீட்டு குறிப்புகள்:
கற்றாழை | பூண்டு
3 பல் பூண்டை தோல் உரித்து அதை பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். இந்த பேஸ்டுடன் 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் பரு உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவி கொள்ளலாம். முகத்தில் உள்ள பரு போகும் வரை இந்த பேக்கை அப்ளை செய்யவும்.
ஐஸ் கட்டி:

ஐஸ் கட்டியை எடுத்து பருக்கள் உள்ள இடத்தில் 2 அல்லது 3 மிடம் அப்படியே வைக்கவும், அல்லது மசாஜ் செய்யவும். ஒரு நாளைக்கு 2 முறை இந்த மாதிரி செய்யலாம்.
இதையும் படியுங்கள் ⇒ முக சுருக்கம் இல்லாமல், முகத்தை பளபளப்பாக வைத்திருக்க தயிரை எப்படி பயன்படுத்துவது..?
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |