Potato Face Pack in Tamil
முகம் வெள்ளையாக மாற வேண்டும் என்று நீங்கள் பல வகையான கிரீம்களை பயன்படுத்தி இருப்பீர்கள். அந்த கிரீம் முழுமையான பலனை தருமா என்று தெரியாமலேயே அதனை காசு கொடுத்து வாங்கி அப்ளை செய்து இருப்பீர்கள். ஆனால் உங்கள் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு பொருளை வைத்து முகத்தை நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு வெள்ளையாக மாற்ற முடியும் தெரியுமா..? இது பலருக்கும் தெரியாத ஒரு Face பேக். ஆகையால் இன்றைய பதிவில் வீட்டில் அதும் சமையலுக்கு பயன்படுத்தும் பொருளை வைத்து Face Pack தயார் செய்து அதனை எப்படி அப்ளை செய்வது என்பது பற்றி தெரிந்துக்கொண்டு நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு முகம் வெள்ளையாக மாறுவதை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ 10 நிமிடத்தில் இளநரை, முது நரையை கருப்பாக மாற்ற இதை Try பண்ணுங்க..!
முகம் வெள்ளையாக இயற்கை வழிகள்:
Face Pack தயார் செய்ய தேவையான பொருட்கள்:
- உருளைக்கிழங்கு- 1
- காய்ச்சாத பால்- 1 டம்ளர்
- காபித்தூள்- 1 ஸ்பூன்
ஃபேஸ் பேக் செய்வது எப்படி..?
ஸ்டேப்- 1
முதலில் 1 உருளைக்கிழங்கை எடுத்துக்கொண்டு அதனை நான்கு துண்டாக நறுக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு வேக விடுங்கள்.
ஸ்டேப்- 2
உருளைக்கிழங்கு நன்றாக வேக வேண்டும். அப்போது தான் ஃபேஸ் பேக் தயார் செய்வதற்கான பதம் கிடைக்கும். இப்போது உருளைக்கிழங்கு வெந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு கிழங்கை சிறிது நேரம் ஆற விடுங்கள்.
ஸ்டேப்- 3
உருளைக்கிழங்கு ஆறியவுடன் அதன் மேலே இருக்கும் தோலினை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 4
அடுத்தாக 1 டம்ளர் காய்ச்சாத பால் எடுத்துக்கொண்டு அதனை கிண்ணத்தில் இருக்கும் உருளைக்கிழங்குடன் ஊற்றி நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 5
கடைசியாக பால் கலந்து வைத்துள்ள உருளைக்கிழங்குடன் 1 ஸ்பூன் காபித்தூள் சேர்த்து மீண்டும் நன்றாக அதனை 5 நிமிடம் கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக் தயார்.
அப்ளை செய்யும் முறை:
நீங்கள் தயார் செய்த இந்த ஃபேஸ் பேக்கை வாரம் 2 அல்லது 3 முறை அப்ளை செய்தால் போதும். உங்களுடைய முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு முகம் வெள்ளையாக மாறிருக்கும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே
👉 https://bit.ly/3Bfc0Gl
பயன்கள்:
உருளைக்கிழங்கு மற்றும் பாலில் நிறைய சத்துக்கள் இருக்கிறது. அதனால் இதனை நாம் சாப்பாட்டில் மட்டும் சேர்த்து கொண்டிருப்போம். ஆனால் இது உடலிற்கு மட்டும் இல்லாமல் முகத்திற்கும் நல்ல பலனை தருகிறது.
இதோடு காபித்தூளும் சேர்ப்பதால் இந்த மூன்றும் சேர்ந்து முகத்தில் இருக்கும் பருக்களை நீக்கி முகம் மென்மையாக இருப்பதற்கும் மற்றும் முகம் வெள்ளையாக இருப்பதற்கும் பயன்படுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரே வாரத்தில் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர இந்த டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணுங்க..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |