அரிசி ஊறவைத்த தண்ணீர் முடி வளர்ச்சிக்கும், முகம் பொலிவு பெற முடியும் தெரியுமா உங்களுக்கு

Advertisement

Rice Water Tips in Tamil..! 

ஹலோ வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் இனிமையான நேயர்களே… இன்றைய பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவல் ஒன்றை பற்றி பார்க்கப்போகிறோம். நாம் எப்பொழுதும் அரிசி கழுவிய தண்ணீரை கீழே ஊற்றி விடுவோம். ஆனால் அந்த தண்ணீரில் பல நன்மைகள் இருக்கிறது. அரிசி கழுவிய தண்ணீரால்  முடி மற்றும் முகத்தை அழகாக வைக்க பயன்படுகிறது. இந்த அரிசி கழுவிய தண்ணீரில் உள்ள பயன்களை தெரிந்து கொண்டால் இனிமேல் நீங்கள் இதை கீழே ஊற்ற மாட்டீர்கள்… வாங்க நண்பர்களே அரிசி கழுவிய நீரில் உங்களுக்காக சில டிப்ஸ் பற்றி பார்க்கலாம்…

அரிசி ஊறவைத்த நீரை முடிக்கு பயன்படுத்துவதன் நன்மைகள்:

பெண்களுக்கு  நீளமான அடர்த்தியான மற்றும் அழகான முடி வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் எல்லாம் நீண்ட அடர்த்தியான மற்றும் கருமையான முடி வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர்களாக இருந்தனர்.

அதற்கு மிக முக்கியமான காரணம் அரிசி கழுவிய தண்ணீர் மட்டும் தான். அரிசி ஊறவைத்த தண்ணீரை தலைமுடியில் ஊற்றி குளிப்பதன் மூலம் நல்ல பலன் அளிக்கிறது.

இந்த அரிசி கழுவிய தண்ணீரை முடியில் தேய்த்து குளிப்பதால் முடி நன்றாக வளரும். அதுமட்டுமின்றி முடி அடர்த்தியாக மற்றும் கருமையாக வளர்வதற்கும் உதவுகிறது. தலைமுடிக்கு அரிசி தண்ணீரை பயன்படுத்துவதன் மூலம் ஏராளமான நன்மைகளைப் பெற முடியும்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ பொடுகு தொல்லை நீங்க இயற்கை வழிகள்

  1. இந்த அரிசி கழுவிய தண்ணீரில் உள்ள சத்துக்கள் தலைமுடியின் சிதைவுகளை சரிசெய்கிறது.
  2. அரிசி கழுவிய தண்ணீர் தலைமுடியை வலிமையானதாக மாற்றுகிறது.
  3. இது தலைமுடியை மென்மையாக வைப்பதற்கு உதவுகிறது.
  4. கூந்தலில் ஏற்படக்கூடிய வறட்சியை தடுக்கிறது.

பயன்படுத்தும் முறை:

  1. நீங்கள் எப்பொழுதும்  பயன்படுத்தும் ஷாம்பை வைத்து  தலையை அலசி விட வேண்டும். பின்னர், அரிசி தண்ணீரை தலையில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, உச்சந் தலையில் இருந்து நுனி வரை நன்கு மசாஜ் செய்யவும்.
  2. 20 நிமிடங்கள் வரையிலும் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு வெறும் சுத்தமான தண்ணீரால் தலையை அலசினால் மட்டும் போதும். அலசும் போதே வித்தியாசத்தை நீங்களே பார்க்கலாம்.
15 நாளில் கொட்டிய முடி வளர இத மட்டும் செய்ங்க

அரிசி ஊறவைத்த நீரை முகத்திற்கு பயன்படுத்துவதன் நன்மைகள்:

இந்த அரிசி கழுவிய நீரை சருமத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் நல்ல பலனை கொடுக்கிறது என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது. இந்த அரிசி கழுவிய நீரில் இயற்கையாகவே சருமத்தை பாதுகாக்கும் தன்மையை கொண்டுள்ளது.

  1. இந்த அரிசி கழுவிய நீரை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தினமும் இப்படி செய்து வருவதால் முகத்தை பொலிவாக வைக்க உதவுகிறது.
  2. மேலும், இது சருமத்தில் ஏற்படக்கூடிய பருக்களை போக்குகிறது. முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குகிறது.
  3. இது சருமம் பளபளப்பாக இருக்க உதவுகிறது.
  4. இந்த அரிசி தண்ணீரில் ஒரு காட்டன் துணியால் நனைத்து முகத்தை துடைத்து வந்தால் முகம் நல்ல பொலிவுடன் இருக்கும்.
  5. தினமும் இந்த அரிசி கழுவிய நீரை முகத்தில் கழுவி வருவதால் சரும பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
இதுபோன்று ஆண்கள் அழகு அதிகரிக்க அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000..!
Advertisement