அரிசி கழுவிய தண்ணீரை இப்படி ஒரு முறை பயன்படுத்தினால் நீங்களே ஆச்சரிப்படுவீர்கள்…!

rice water for hair growth tips in tamil

அரிசி கழுவிய தண்ணீர்

வணக்கம் அழகு குறிப்பு நண்பர்களே..! அனைவருக்கும் தன்னுடைய முடி வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அத்தகைய முடி வளர்ச்சிக்கு என்று நிறைய செலவு செய்து வருகின்றனர். ஆனால் நம்முடைய வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களில் ஏராளமான முடி வளர்ச்சிக்கு தேவையான பொருட்கள் இருக்கின்றன. ஆனால் அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. சிலர் பார்லருக்கு சென்று பணம் செலவு செய்து முடிக்கு அழகு சேர்த்து வருகின்றனர். இனி இது மாதிரி நீங்கள் செய்ய வேண்டியது இல்லை. நீங்கள் தினமும் சமையலுக்கு அரிசி கழுவிய பிறகு கீழே ஊற்றும் அந்த தண்ணீரை வைத்து உங்களுடைய முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

இதையும் படியுங்கள்⇒ ஒரு பொருள் போதும் உங்கள் வெள்ளை முடி மற்றும்                        செம்பட்டை முடியை கருமை ஆக்கிடும்

அரிசி கழுவிய தண்ணீர் முடி வளர்வது எப்படி.?

அரிசி கழுவிய தண்ணீரில் முடி வளர்ச்சிக்கு தேவையான பொருட்கள்:

  • அரிசி கழுவிய தண்ணீர் 
  • செம்பருத்தி பூ
  • கற்றாழை ஜெல்

இந்த மூன்று பொருட்களையும் வைத்து முடி வளர்ச்சிக்கு எப்படி உபயோகப்படுத்தவது என்று செய்முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்டேப்- 1

நீங்கள் இன்று அரிசி கழுவிய பிறகு அந்த தண்ணீரை வடிகட்டியால் வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி வைத்து விடுங்கள். ஏனென்றால் அந்த அரிசி கழுவிய தண்ணீர் புளிக்க வேண்டும். அதன் பிறகு தான் நீங்கள் உபயோகப்படுத்த முடியும். அதனால் முதல் நாள் அந்த தண்ணீரை மூடி வைத்து விட்டு மறுநாள் தான் நீங்கள் அதை பயன்படுத்த வேண்டும்.

ஸ்டேப்- 2

அடுத்ததாக அந்த தண்ணீருடன் எடுத்து வைத்துள்ள 10  செம்பருத்தி பூ, கற்றாழை ஜெல் இந்த இரண்டையும் சேர்த்து நன்றாக கரண்டியால் மசிய அரைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு உங்களுடைய தலையை சுத்தமான தண்ணீரில் அலசி கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3

தலையை அலசி முடித்த பிறகு நீங்கள் தயார் செய்த ஜெல்லை தலையின் மேல் இருந்து நுனி வரை மசாஜ் செய்ய வேண்டும். நன்றாக அந்த ஜெல்லை தேய்த்து அதன் பிறகு முடியை கொண்டை போட்டு கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 4

அதன் பிறகு நீங்கள் எப்போதும் சோப்பு போட்டு குளிப்பது போல் குளித்து விடுங்கள். நீங்கள் சோப்பு போட்டு குளிக்கும் அந்த 10 நிமிடம் நீங்கள் தயார் செய்த அந்த ஜெல் உங்கள் தலையில் அப்படியே இருக்கட்டும்.

ஸ்டேப்- 5

கடைசியாக முடிக்கு ஷாம்பு போடாமல் உங்களுடைய கையால் அந்த ஜெல்லை நன்றாக சுத்தமான தண்ணீரில் அலசி விடுங்கள். முடி காய்ந்து பிறகு உங்களுக்கே வித்தியாசம் நன்றாக தெரியும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil