Scalp Strengthening Pack at Home in Tamil
நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவின் மூலம் உங்கள் முடியை வலிமையாக எப்படி வளர வைப்பது என்று ஒரு ஐடியா சொல்லி கொடுக்கப்போகிறோம்..! முடி உதிர்வதற்கு அதிகமாக உள்ள காரணம் என்னவென்றால் உடலுக்கு தேவையான சத்துக்கள் இல்லாமல் இருப்பது தான். முதலில் உடலுக்கு தேவையான சத்துக்கள் தரும் காய்கறிகள், கீரைகள் மற்றும் அதிக சத்துக்கள் உள்ள பொருட்களை வாங்கி சாப்பிட வேண்டும். முடி வளர்வதற்கு முடி வலிமையாக இருப்பதை விட வேர் வலிமையாக இருப்பது தான் நல்லது. அதற்கு என்ன செய்வது என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம் வாங்க..!
Scalp Strengthening Pack at Home in Tamil:
கொய்யா இலை:
கொய்யா இலையில் இருக்ககூடிய ஆன்டி பாக்டீரியா, ஆன்டி மைக்ரோபியல் நம்முடைய முடி உதிர்வதை தடுத்துவிடும். இதில் இருக்கும் வைட்டமின் பி, வைட்டமின் சி முடி உதிர்வை தடுக்கும். முடி வளர்ச்சியை அதிகப்படுத்த இந்த கொய்யா இலை உதவி செய்யும்.
சின்ன வெங்காயம்:
சின்ன வெங்காயத்தில் நிறைய சல்பர் உள்ளது. இது கொலாஜன் அளவை அதிகப்படுத்தும். இதனால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் புதிய முடி வளர்ச்சி அதிகமாகும்.
செய்முறை:
கொய்யா இலையை எடுத்துக்கொள்ளவும். அதனை எடுத்து சுத்தமாக கழுவிக்கொள்ளவும். அடுத்து அதனை ஒரு கடாயில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் கொய்யா இலையை போட்டு கொதிக்கவிடவும்.
அதன் பின் தண்ணீர் நிறம் மாறியவுடன் அந்த தண்ணீரை எடுத்து மிக்சி ஜாரில் ஊற்றிக்கொள்ளவும்.
அடுத்து அந்த தண்ணீருடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். அடுத்து அரைத்த பொருட்களை சேர்த்து ஒரு துணியை வைத்து வடிகட்டி கொள்ளவேண்டும்.
ஆச்சரியமாக இருக்கா ஒரே ஒரு பொருளை வைத்து முடியை எப்படி வேகமாக வளரச்செய்வது என்று…
பயன்படுத்தும் முறை:
இந்த ஹேர் பேக் தண்ணீராக இருக்கும். அதேபோல் இந்த ஹேர் பேக் பயன்படுத்தும் போது தலையில் எண்ணெய் அப்ளை செய்யவேண்டும். அது முதல் நாள் இரவே அப்ளை செய்ய வேண்டும். அதன் பின் காலையில் இந்த ஹேர் பேக் பயன்படுத்திகொள்ளவும்.
பின் ஷாம்பு சீயக்காய் எது வேண்டுமானாலும் பயன்படுத்தி தலையை அலசி கொள்ள வேண்டும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு தலை முடி வளர கருவேப்பிலை ஒன்று போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |