ஸ்கின் கேர் Routine!!! முக ஆரோக்கியத்திற்கு தினசரி CTM செய்தல் மிக அவசியம்!

Advertisement

Skin Care Routine Steps at Home in Tamil

தற்போது பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருமே அழகுகலையில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தன்னை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் இருக்கும் ஒரு இயல்பான ஒன்றாகும். முகத்தின் அழகு மற்றும் ஆரோக்கியம் என்பது அனைவருக்கும் மிக முக்கியமான ஒன்று.

நாம் தினசரி வாழ்வில் அழுக்குகள், அசுத்தங்கள், மாசுக்கள் போன்ற பல கெடுதல்களை சந்திக்கின்றோம் . இதனால் முகத்தின் அழகு கெடுகிறது. எனவே முக பராமரிப்பு என்பது அன்றாட வாழ்வில் தினசரி அனைவரும் பின்பற்றக்கூடிய அவசியம் வந்துவிட்டது. முகத்தினை பராமரிக்க தினசரி CTM செய்தல் மிக மிக அவசியம். இது மிகவும் நம்பகமான அழகு வழக்கமாகும். அதனை பற்றி பின்வரும் பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

CTM என்றால் என்ன?

CTM என்பது முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் மாசுக்களை அடியோடு நீக்கி முகத்தினை சுத்தம்படுத்தும் முறையாகும். இதனை தான் நாம் CTM என்று சொல்கின்றோம்.

CTM  விளக்கம்
ஸ்டேப் 1 Cleansing (சுத்தப்படுத்துதல் )
ஸ்டேப் 2  Toning (டோனிங் )
ஸ்டேப் 2 Moisturising (ஈரப்பதமாக்குதல்)

 

போன்ற மூன்று செயல் முறைகளை உள்ளடக்கியது இந்த CTM முறை. இது நாம் முக பராமரிப்பிற்கு தினசரி எளிதில் செய்யக்கூடிய பயனுள்ள முறையாகும்.

👉காசு கொடுத்து Facial செய்யாமல் இந்த மாதிரி வீட்டிலேயே Facial செய்து பாருங்கள்..!

Cleansing milk for face how to use in tamil:

Cleansing milk for face how to use in tamil

  • Cleansing என்றால் தமிழில் சுத்திகரித்தல் என்று பொருள். முதலில் Cleanser-யை தேவைக்கேற்ப கையில் எடுத்துக்கொண்டு முகத்திற்கு சோப் போடுவது போன்று கிளன்சரை கொண்டு முகத்தினை சுத்தம் செய்ய வேண்டும்.
  • இப்படி முகத்தினை சுத்தம் செய்வதால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்கப்படுகிறது.
  • மேலும் முகத் துளைகளில் உள்ள ஆயில், அழுக்குகள், மாசுக்கள் போன்றவை அடியோடு அகற்றப்படுகிறது. இதனால் முகத்தில் பருக்கள் வருவது தடுக்கப்படுகிறது.
  • முகமானது அழுக்குகள் நீக்கப்பட்டு பார்ப்பதற்க்கு சுத்தமாகவும் பளபளப்பாகவும் மாறுகின்றது.
  • கிளன்சர் கொண்டு முகத்தினை கழுவும் முன் முதலில் உங்கள் கைகளை நன்கு கழுவி சுத்தம் செய்த பின்னரே கிளன்சிங்  செய்ய வேண்டும். அப்பொழுது தான் உங்கள் கைகளில் உள்ள அழுக்குகள் மேலும் உங்கள் முகத்தில் சேராமல் இருக்கும்.
  • Cleansing செய்யும் போது முகத்தினைஅழுத்தி தேய்க்காமல் லேசான மசாஜ் முறையில் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும்.
    முகத்தினை சுத்தமாக வைக்க நினைத்து அதிக முறை கிளன்சிங் செய்ய கூடாது.
  • ஒரு நாளைக்கு 2 முறை மட்டுமே செய்ய வேண்டும். காலை மற்றும் இரவு தூங்க செல்லும் முன் என்று இருமுறை மட்டுமே செய்ய வேண்டும்.
  • முக்கியமாக உங்கள் ஸ்கின் TYPE-க்கு ஏற்ற Cleanser-யை நீங்கள் தேர்வு செய்து பயன்படுத்துவது உங்கள் முகத்திற்க்கு மிகவும் நல்லது.

Cleanser types for skin types:

  • ஜெல் டைப் – ஆயில் ஸ்கின்/Normal ஸ்கின்/Acne skin
  • கீரிம் டைப் – Dry ஸ்கின்/ Sensitive ஸ்கின்
  • போம் டைப் (நுரை) – காம்பினேஷன் ஸ்கின்
    போன்ற டைப்களில் Cleanser கடைகளில் கிடைக்கின்றன. உங்களின் ஸ்கின் வகைக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள் நல்ல பலன் தரும்.

👉👉👉அக்குள் கருமை 5 நிமிடத்தில் சரியாக.. இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க..!

How to use Face toner in tamil:

How to use face toner in tamil

  • CLEANSER கொண்டு முகத்தினை சுத்தம் செய்த பின்னர் முகத்தில் உள்ள துளைகள் திறந்திருக்கும். அப்படியே நாம் முகத்திற்கு அழகு சாதன பொருள்களை பயன்படுத்துவதால் முகத்துளைகளில் நாம் பயன்படுத்திய அழகு சாதன பொருள்கள் சென்று தங்கிவிடும்.
  • இதனால் நமக்கு முகத்தில் அலர்ஜி, முகப்பருக்கள், அரிப்புகள் போன்ற பிரச்சனைகள் வர நேரிடும். இது போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க தான் Toner பயன்படுத்துகிறோம். இதனால் திறக்கப்பட்ட முகத்துளைகள் மூடப்படுகின்றன.
  • CLEANSER கொண்டு முகத்தினை சுத்தம் செய்த பின்னரே தான் இரண்டாது செயல் முறையாக ஸ்கின் டோனர் பயன்படுத்த வேண்டும். முதலில் ஸ்கின் Toner-யை தேவைக்கேற்ப எடுத்து காட்டனில் நனைத்து முகத்தில் மெதுவாக அப்ளை செய்து  toner-யை முகம் முழுவதும் செட் செய்ய வேண்டும்.
  • சாதாரணமாக முகத்தின் PH அளவு 4.5-5.5 வர இருக்க வேண்டும். TONER பயன்படுத்துவதால் முகத்தின் PH அளவு சரியான முறையில் பராமரிக்கப்படுகிறது. Spray வடிவிலும் toner கடைகளில் கிடைக்கின்றன அதன் மூலம் முகத்திற்கு Toner-யை Spray செய்துக்கொள்ளலாம்.

how to use toner in tamil

Toner Types for Face:

  • லோஷன் டைப்- Dry ஸ்கின்
  • ஜெல் டைப் – காம்பினேஷன் ஸ்கின்/ Normal ஸ்கின்
  • Liquid டைப் (திரவநிலை)- ஆயில் ஸ்கின்
    உங்களின் ஸ்கின் வகைக்கு ஏற்றவாறு டோனர்-யை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

👉👉👉7 நாட்களில் பாத வெடிப்பு நீங்க டிப்ஸ்..!

How to use moisturizer for dry skin in tamil:

How to use moisturizer for dry skin in tamil

  • Moisturising என்றால் ஈரப்பதமாக்குதல் என்று பொருள். Toner-யை முகத்தில் செட் செய்த பின்னர் Moisturiser கிரீம் முகத்திற்கு பயன்படுத்த வேண்டும். இதனால் முகத்தின் வறட்சி நீக்கப்படுகிறது. முகத்தின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுகிறது. இதனால் ஸ்கின் இளமையாகவும் க்ளோவாகவும் இருக்கும். Moisturiser முகப்பருக்களின் தழும்புகளை மறைத்து முகத்தினை காண்பிக்கிறது.

Moisturizer Types:

  • ஜெல் டைப் – காம்பினேஷன் மற்றும் ஆயில் ஸ்கின்
  • கிரீம் டைப் – Dry ஸ்கின்/Normal ஸ்கின்
    உங்களின் ஸ்கின் வகைக்கு ஏற்றவாறு Moisturiser தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். அப்போது தான் நல்ல பலன் கிடைக்கும். Moisturising ஒரு நாளைக்கு இருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இந்த ஸ்கின் கேர் Routine CTM முறையை தினசரி பயன்படுத்தி உங்கள் முகத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள். நன்றி 🙏.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami
Advertisement