வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தலை முடி அடர்த்தியாகவும், பொடுகு இல்லாமலும் வளர இந்த இரண்டு பொருள் மட்டும் போதும்…! தடவி குளித்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!

Updated On: October 16, 2023 1:09 PM
Follow Us:
vendhayam hair pack benefits in tamil
---Advertisement---
Advertisement

Podugu Poga Tips in Tamil | Thalai Mudi Treatment in Tamil வாழ்க்கை 

தலை முடி பிரச்சனையில் நிறைய உள்ளது அதில் முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் பொடுகு பிரச்சனை தான் அதிகமாக இருக்கும். அதனை சரி செய்ய நிறைய ஷாம்புக்களை போட்டு குளித்து இருப்போம் அதில் ஒரு மாற்றமும் இருக்காது. அதன் பின் இயற்கை முறையில் நிறைய ட்ரை பண்ணிருப்போம்.

ஆனால் அதனை சரியாக பின் பற்ற முடியாமல் பாதியில் விட்டு விடுவோம். ஆனால் நாம் இயற்கை முறையில் மருந்து சாப்பிடால் கூட அதனை தொடர்ந்து செய்ய வேண்டும், அப்போது தான் அதற்கு நல்ல பலனை பார்க்க முடியும். சரி வாங்க   இன்று இந்த இரண்டு பொருளை மட்டும் வைத்து தலையில் இருக்கும் பொடுகை விரட்டவும், தலை முடி கொட்டாமல் வளரவும் என்ன செய்வது என்று பதிவை முழுவதையும் படித்து தெரிந்துகொள்வோம்..!

Thalai Mudi Treatment in Tamil:

தேவையான பொருட்கள்: 

  • வெந்தயம்
  • தண்ணீர்
  • இஞ்சி

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

செய்முறை:

ஸ்டேப்: 1

முதலில் தலைக்கும் தேய்க்கும் அளவிற்கு வெந்தயம் எடுத்துக்கொள்ளவும். அதனை முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.

அதில் கொஞ்சம் அதிகமாகவே தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.

ஸ்டேப்: 2

மறுநாள் காலையில் தண்ணீர் ஊற வைத்த உடனே அதில் இருக்கும் தண்ணீரை கீழ் ஊற்றி விடுவோம். ஆனால் அந்த தண்ணீரில் தான் சத்துக்கள் அதிகம் உள்ளது ஆகவே தண்ணீரையும் அப்படியே எடுத்துக்கொள்ளவும்.

ஒரே வாரத்தில் நரை முடி கருப்பாகவும் அதிசயம்..! இந்த எண்ணெய் மட்டும் தடவி பாருங்கள்..! 

ஸ்டேப்: 3

 Thalai Mudi Treatment in Tamil

பிறகு ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் ஊறவைத்த வெந்தயம் மற்றும் அதனுடைய தண்ணீர் இரண்டையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

தண்ணீர் கொஞ்சமாக இருந்தால் தான் அது மாவாக இருக்கும் இல்லையென்றால் அது சிறிய சிறிய வெந்தயமாக இருக்கும் தலைக்கு தேய்க்கும் போது அப்படியே சிக்கி கொள்ளவும். ஆகவே தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இப்போது அது ஒரு பேஸ்ட் போல் இருக்கும். அதனை ஒரு கிணத்தில் ஊற்றி வைக்கவும்.

ஸ்டேப்: 4

பின்பு ஒரு இஞ்சி துண்டை எடுக்கவும். அதனை துருவி தண்ணீர் வரும் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும்.

 podugu poga enna seivathu

இப்போது சீவிவைத்த இஞ்சிகளை எடுத்து கைகளை கொண்டு பிழிந்து சாறை எடுத்துக்கொள்ளவும். தலை முடிக்கு ஏற்ற அளவு அல்லது வெந்தயத்திற்கு ஏற்ற அளவு எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 5

இப்போது வெந்தய பேஸ்ட் மற்றும் இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பயன்படுத்துவது:

இந்த பேஸ்ட் தலை முடியின் வேர்வரை அப்ளை செய்யவும். கொஞ்ச கொஞ்சமாக முடியை எடுத்து அதில் இந்த பேஸ்டை தடவி 20 நிமிடம் அப்படியே ஊறவைக்கவும்.

தலைக்கு முடி மிருதுவாக இருக்க வேண்டும் என்றால் தலை முடி முழுவதும் தடவிக்கொள்ளலாம். நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 நரைமுடி பிரச்சனையா இனி கவலை வேண்டாம் இந்த ஹேர் டையை ட்ரை பண்ணுங்க..!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை