Waxing Pack at Home in Tamil
பொதுவாக பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி தங்களின் சருமம் மிருதுவாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் அந்த ஆசைக்கு தடையாக இருப்பது அவர்களின் கை மற்றும் கால்களில் உள்ள முடிகள் தான். ஏனென்றால் கை மற்றும் கால்களில் உள்ள முடிகளால் சருமம் தனது அழகையும் பொலிவையும் இழந்துவிடும். அதனால் அதனை நீக்குவதற்காக நாமும் கடைகளில் விற்கப்படும் பல வாக்ஸிங் கிட்டை வாங்கி பயன்படுத்துவோம். அதனை பயன்படுத்துவதால் உங்களின் கை மற்றும் கால்களில் வலி மற்றும் எரிச்சல் ஏற்படும். அதனால் தான் இன்றைய பதிவில் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எந்தவொரு வலியும் இன்றி உங்களின் கை மற்றும் கால்களில் உள்ள முடியை நீக்க உதவும் குறிப்பினை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
Full Body Waxing Pack at Home in Tamil:
வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எந்தவொரு வலியும் இன்றி உங்களின் கை மற்றும் கால்களில் உள்ள முடியை நீக்க உதவும் குறிப்பினை பற்றி தான் விரிவாக காணலாம்.
அதற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் பார்க்கலாம்.
- எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
- சர்க்கரை – 2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
- வாசலின் – 1 டீஸ்பூன்
- கோதுமை மாவு – 1 டீஸ்பூன்
- தண்ணீர் – 1 கப்
கடாயை அடுப்பில் வைக்கவும்:
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் தண்ணீரை ஊற்றி லேசாக சூடுபடுத்தி கொள்ளவும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள்=> முகத்தில் உள்ள தேவையில்லாத முடியை எப்படி நீக்குவது.!
எலுமிச்சை சாற்றினை கலக்கவும்:
பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
சர்க்கரையை சேர்க்கவும்:
அடுத்து அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
மஞ்சள் தூளினை கலந்து கொள்ளவும்:
பிறகு அதனுடன் 1 டீஸ்பூன் மஞ்சள் தூளினை சேர்த்து கலந்து நன்கு கெட்டியாக மாறியவுடன் அதனை ஒரு கிண்ணத்தில் ஊற்றி கொள்ளவும்.
கோதுமை மாவினை சேர்த்து கலக்கவும்:
இறுதியாக அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் கோதுமை மாவினை சேர்த்து நன்கு பசைபோல் கலந்து கொள்ளவும்.
பின்னர் இதனை உங்களின் கை மற்றும் கால்களில் தடவி கொள்ளவும். பிறகு 15 – 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு காட்டன் துணியை நனைத்து உங்களின் கை மற்றும் கால்களில் நன்கு அழுத்தி துடைப்பதன் மூலம் கை மற்றும் கால்களில் உள்ள முடிகள் அனைத்தும் நீங்குவதை நீங்களே காணலாம்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள்=> வெயில் காலத்தில் வறண்டு காணப்படும் உங்களின் சருமத்தை 1 மணி நேரத்தில் மென்மையாக மாற்ற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |