What to Mix with Coconut Oil For Hair Growth
அனைவருக்கும் தலை முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகின்றனர். இதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தி முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டுமென்று நினைக்கின்றனர். சில இயற்கையான முறையில் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டுமென்று நினைக்கின்றனர். அதனால் இந்த பதிவில் இயற்கையான முறையில் அதுவும் தேங்காய் எண்ணெயை வைத்து முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்.அதை தானே தினமும் தலையில் தேய்க்கிறேன் என்று கேட்காதீர்கள். தேங்காய் எண்ணெயில் சில பொருட்களை கலந்து தேய்த்தால் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம். வாங்க அது என்னென்ன பொருட்கள் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
தேங்காய் எண்ணெய் மற்றும் கருவேப்பிலை:
ஒரு கைப்பிடி கருவேப்பிலை எடுத்து வெயிலில் காய வைத்து கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து 100 மில்லி லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் காய வைத்த கருவேப்பிலை சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெயில் கருவேப்பிலையின் நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து விடவும். பிறகு ஆறியதும் எண்ணெயை வடிக்கட்டி சக்கை இல்லாமல் எண்ணெயை மட்டும் எடுத்து கொள்ளவும். இந்த எண்ணெயை தலை முடி முழுவதும் மசாஜ் செய்யவும். 20 நிமிடம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும்.
தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் பாத வெடிப்பை சரி செய்யலாம்
தேங்காய் எண்ணெய் மற்றும் செம்பருத்தி பூக்கள்:
ஒரு கைப்பிடி செம்பருத்தி பூக்களை எடுத்து கழுவி விட்டு ஈரம் இல்லாமல் வெயிலில் காய வைத்து எடுத்து கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து டெஹக்கை எண்ணெய் சிறிதளவு ஊற்றி அதில் காய வைத்த செம்பருத்தி பூக்களை சேர்த்து கொதிக்க விடவும். பூக்களில் உள்ள சாயம் எண்ணெயில் இறங்கியதும் அடுப்பை அணைத்து கலவையை ஆற விடவும். பிறகு எண்ணெயை வடிக்கட்டி கொள்ளவும்.
இந்த எண்ணெயை தலை முடி முழுவதும் தடவி 1 மணி நேரம் கழித்து தலை தேய்த்து குளிக்கவும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் கலோஞ்சி விதைகள்:
கலோஞ்சி விதைகள் சிறிதளவு எடுத்து அரைத்து கொள்ளவும். அரைத்த கலோஞ்சி விதைகளை தேங்காய் எண்ணெயில் சேர்த்து மூன்று நாட்கள் ஊற விடவும். மூன்று நாட்கள் கழித்து பயன்படுத்தும் போது லேசாக சூடுபடுத்தி தலையில் தேய்த்து கொள்ளவும். சிறிது நேரம் கழித்து தலை தேய்த்து அலசி கொள்ளலாம்.
இந்த ஒரு பொருள் இருந்தால் 5 நிமிடத்தில் நரை முடியை கருப்பாக மாற்றலாம்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |