வீட்டில் வைக்க வேண்டிய அதிர்ஷ்டம் தரும் செடிகள் எது என்று உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

அதிர்ஷ்டம் தரும் செடிகள்..!  

வணக்கம் பொதுநலம் பதிவின் அன்பான நேயர்களே… இன்று நம் ஆன்மிகம் பதிவில் வீட்டில் வைக்க வேண்டிய அதிர்ஷ்டம் தரும் செடிகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். அனைவருக்குமே புதிதாக மற்றும் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதுபோல வீட்டை சுற்றி அழகான செடிகள் வைக்க வேண்டும் என்கிற ஆசையும் இருக்கும். அப்படி வைக்கும் செடிகள் அதிர்ஷ்ட செடிகளாக இருந்தால் எப்படி இருக்கும். அந்தவகையில், நாம் இந்த பதிவில் அதிர்ஷ்ட செடிகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

வீட்டில் எந்த செடி வளர்த்தால் அதிர்ஷ்டம் வரும்: 

அனைவருமே தனது வீட்டை சுற்றி அழகான செடிகள் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி வைக்கப்படும் செடிகள் அதிர்ஷ்டம் கொண்டவைகளாக இருந்தால் நமக்கு நன்மைகள் தானே. அப்படி அதிர்ஷ்டம் தரும் செடிகளை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இதையும் பாருங்கள் ⇒ வீட்டில் வளர்க்க வேண்டிய வாஸ்து செடிகள்

நெல்லிச் செடி:

நெல்லிச் செடி

  • நெல்லி செடியில் லட்சுமி கடாட்சம் இருக்கும் என்று கூறுவார்கள்.
  • நாம் நம் வீட்டில் நெல்லி செடி வளர்ப்பதால் செல்வவளம் அதிகரித்து காணப்படும்.
  • வீட்டில் உள்ள கஷ்டம் நீங்கி செல்வம் பெருகும்.
  • இந்த நெல்லி மரத்தை குபேரன் சிவபெருமானிடம் வரமாக பெற்றதால் அவருக்கு செல்வம் சேர்ந்தது.
  • அதனால் இந்த நெல்லி மரத்தை வீட்டில் வளர்ப்பதால் செல்வம் பெருகும் என்று கூறுவார்கள்.

கற்பூரவள்ளி செடி:

கற்பூரவள்ளி செடி

  • இந்த கற்பூரவள்ளி செடியை சின்ன தொட்டியில் வைத்து வளர்த்து வந்தால் வீட்டில் இருக்கும் கஷ்டம் நீங்கும்.
  • அதுமட்டுமின்றி இது பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
  • இந்த கற்பூரவள்ளி செடியை கிழக்கு பக்கம் பார்த்து வைத்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

முல்லை செடி: 

முல்லை செடி

  • முல்லை செடி குருவின் அம்சம் என்று கூறுவார்கள். இந்த முல்லை செடி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
  • இந்த செடியை நம் வீட்டின் வடக்கு திசையில் வைப்பது மிகவும் நல்லது.
  • இதனால் நம் வீட்டில் உள்ள கஷ்டம் நீங்கி செல்வவளம் உண்டாகும்.
  • முல்லை செடி வளர்ப்பதால் குருவின் நன்மை கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.

ஆடாதோடை செடி:

ஆடாதோடை செடி

  • இந்த ஆடாதோடை செடியில் அதிகளவு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.
  • இந்த ஆடாதோடை செடியை வீட்டில் வளர்த்து வருவதால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.
  • ஆடாதோடை செடியை வீட்டின் முன் புறத்தில் வைத்து வளர்ப்பதால் வீட்டில் உள்ள கஷ்டம் நீங்கி செல்வம் சேரும்.
வியாபாரம் செழிக்க வாஸ்து வழிமுறைகள்

மல்லிகை செடி:

மல்லிகை செடி

  • மல்லிகை செடி சுக்கிரனின் அம்சம் பெற்றது என்று கூறுவார்கள்.
  • இந்த மல்லி செடி மிகவும் சிறப்பு வாய்ந்தது.
  • இந்த மல்லிகை செடியை வீட்டின் தெற்கு திசை அல்லது வடக்கு திசையில் வளர்த்து வந்தால் நன்மை உண்டாகும்.
  • மல்லிகை செடி வளர்ப்பதால் வீட்டில் இன்பம் உண்டாகும்.

வாசனை தரும் பூச்செடிகள்: 

  • வாசனை தரும் பூச்செடிகளை வீட்டில் வளர்த்து வருவதால் வீட்டில் நன்மை உண்டாகும்.
  • தெய்வத்திற்கு போடும் பூக்களில் நறுமணம் இருக்க வேண்டும்.
  • அதுபோல வேட்டை சுற்றி வாசனை தரும் பூச்செடிகள் வளர்ப்பதால் நல்ல எண்ணங்கள் உண்டாகும். நன்மை உண்டாகும். செல்வம் சேரும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement