சனி அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?
ஆன்மிக நண்பர்களுக்கு வணக்கம் ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி வருகிறது. அந்த திதி அன்று நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது என்று சிலருக்கு தெரிந்திருக்கும். சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அந்த வகையில் இந்த பதிவில் அமாவாசை நாளன்று நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன விஷயங்களை செய்ய கூடாது என்று தெரிந்து கொள்ள இப்பதிவு தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் படித்து அதன்படி செயல்படுங்கள் நன்றி..
அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும்?
பொதுவாக அமாவாசை திதியன்று முன்னோர்களையும், பெரியோர்களையும் வழிபட மிக சிறந்த நாள். மேலும் அன்று இறந்தவர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்கலாம்.
மேலும் அமாவாசை நாளன்று நீங்கள் குலதெய்வத்தை வழிபாடு செய்யலாம். குறிப்பாக அன்றைய நாளில் அம்மன் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
அமாவாசை குலதெய்வ வழிபாடு |
குலதெய்வம் தெரியாதவர்கள் அதை தெரிந்து கொள்வது எப்படி? |
நாளை சனி அமாவாசை என்பதினால் நாய்க்கு உணவு கொடுக்க வேண்டும், எண்ணெயில் முகம் பார்த்த பிறகு, அதை தானம் செய்யலாம். சனி பகவான் சனி அமாவாசை நாளில் தேவைப்படும் ஒருவருக்கு உதவுவதன் மூலம் மகிழ்ச்சியடைந்து, ஆசிகளை வழங்குகிறார் என ஆன்மீக நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன.
அமாவாசை அன்று செய்ய கூடாதவை?
அமாவாசை அன்று வீட்டின் வாசல் பகுதியில் கோலம் போடக் கூடாது. எதற்காக இப்படி செய்ய கூடாது என்றால் நமது முன்னோர்கள் அமாவாசை அன்று பூமியை நோக்கி வருவதாக இந்து மதத்தில் ஒரு ஐதீகம் இருக்கிறது. அவ்வாறு வரும் பொழுது வாசலில் நாம் கோலம் போட்டு இருந்தால் உறவினர்கள் நமக்கு வழிபாடு செய்யவில்லை என்று நினைத்து திரும்பி சென்று விடுவார்களாம், பின் நமது வழிபாட்டினை நமது முன்னோர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்களாம் இதன் காரணமாக தான் அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது என்று சொல்லப்படுகிறது.
மேலும் அன்றைய தினத்தில் மிகக் கடினமான வேலைகள் உடல் ரீதியான வேலைகள் எதுவும் செய்யாதீர்கள். அவ்வாறு செய்யும் போது தவறி அடிப்பட்டால் ரத்தக் காயம் ஏற்படும். அடிப்பட்ட வீரியம் அதிகமாக இருக்கும் சீக்கிரம் ஆறாது.
அமாவாசையன்று பதட்டமும், கோபமும் ஏற்பட்டால் முடிந்த அளவுக்கு மௌனத்தை கடைப்பிடியுங்கள். அமாவாசையன்று மௌன விரதம் இருப்பது மிகவும் சிறப்பு. உங்களை நீங்களே உணர வைப்பதற்கான விரதமாய் மௌன விரதம் இருக்கும்.
அன்றைய நாள் உங்களால் முடிந்த அளவுக்கு தானம், தர்மம் செய்வது ஐஸ்வர்யத்தை பெருக்கும். தேவையற்ற முடிவுகளை அமாவாசையில் எடுப்பதைத் தவிர்க்கலாம்.
அமாவாசை நாட்கள் நேரம் |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |