இறந்த திதி பலன்கள் | Irantha Thithi Palangal

Advertisement

இறந்த திதி பலன் | Irantha Thithi Palangal

ஹாய் பிரண்ட்ஸ்.. வணக்கம் இன்றிய பதிவில் இறந்தவர்களின் திதி பலன்களை பற்றி பார்க்க போகிறோம். திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். திதி என்பது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். சரி முதலில் திதி என்றால் என்ன?, திதி ஏன் கொடுக்க வேண்டும் ?, திதியின் நண்மை தீமை என்ன? போன்ற தகவல்களை நாம் இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

திதி என்றால் என்ன? நட்சத்திரம் எனறால் என்ன?

ஒரு மனிதன் பிறந்த தேர்த்தியை வைத்து அவர்களுக்கு ராசி நட்சத்திரம் கணிக்கப்படுகிறது. அது போல் ஒருவர் இறந்த நாளை திதி என்று கொண்டாடுகின்றோம். ஒருவர் நீண்ட ஆயிலோடு இருக்க வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் அவர்களது நட்சத்திர நாளை பூஜித்து வர வேண்டும்.

அதேபோல் இறந்த ஒரு நபர் மோட்சத்தை அடைய வேண்டும் என்றால் அவர்களது திதியை கணக்கிட்டு பூஜை செய்து வந்தால் இறந்த ஆன்மா சாந்தி அடையுமாம். இதன் காரணமாக தான் இறந்தவர்களுக்கு திதி கொடுக்க வேண்டும் என்று கூறுகின்றன.

இறந்த ஆன்மா அவர்களது சந்ததியினர் திதி கொடுத்தால் தான் அவர்களது ஆத்மா சாந்தியடையுமாம். அவர்களது சந்ததியினர் இல்லாமல் வேறு யாராவது திதி கொடுத்தால். அந்த திதியை இறந்த ஆன்மா ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே இனியாவது இறந்தவர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிடாதீர்கள்.

திதி கணக்கிடுவது எப்படி?

ஒருவர் இறந்த நாள், இறந்த மாதம், வருடம் இவற்றை கணக்கிட்டு, எந்த நேரத்தில் இறந்தார் என்பதையும் கணித்து. அந்த நேரத்தில் என்ன திதி நடந்துகொண்டிருந்தது அது வளர்பிறை திதியா அல்லது தேய்பிறை திதியா? என்பதை அறிந்துகொண்டு அந்த திதியினை இறந்தவரின் அடுத்த வருடம் அதே மாதத்தில், அதே திதியில் அதாவது வளர்பிறை திதி என்றால் வளர்பிறை திதியில், அல்லது தேய்பிறை திதி என்றால் தேய்பிறை திதியில் கணக்கிட்டு இறந்தவர்களுக்கு திதி கொடுக்க வேண்டும்.

இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்..!

எப்படி திதி கொடுக்க வேண்டும்?

பொதுவாக திதி கொடுக்க நினைப்பவர்கள் காலையில் பூஜையும், மதியம் 12 மணிக்குள் படையலிட்டு அவர்களது ஆன்மாவிற்கு சாந்தி செய்ய வேண்டும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement