
ஓணான் விழும் பலன்
தலையில் பல்லி விழுந்தால் ஒரு பலன், காகம் உட்கார்ந்தால் ஒரு பலன் என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கிறது. பல்லி தலையிலோ அல்லது வேறு இடத்திலோ விழுந்துவிட்டால் சகுனம் சரியில்லை என்று பெரியவர்கள் கூறுவார்கள். அந்த வகையில் நம் உடம்பில் ஓணான் விழுந்தால் என்ன பலன் என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
ஓணான் விழும் பலன்கள்:
- ஓணான் தலையில் விழுந்தால் கூடிய விரைவில் மரணம் நிகழப்போகிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது.
- முகத்தில் நெற்றி, மூக்கு ,காது, கை போன்ற உறுப்புகளில் விழுந்தால் தங்களுக்கு நான்கு மாதங்களில் ஏதோ ஒரு துயர சம்பவம் நடக்கப்போகிறது என்பதை உணர்த்துகிறது.
- புட்டம் மற்றும் மார்பு பகுதியில் ஓணான் விழுந்தால் ஒரு ஒரு மாதத்தில் துயர சம்பவம் நடக்கப்போகிறது என்பதை குறிக்கிறது.
- புஜம் மற்றும் தோல் பகுதிகளில் ஓணான் விழுந்தால் தங்களுக்கு இரண்டு மாதங்களில் துயர சம்பவம் ஏற்படலாம் என்பதை முன்கூட்டியே உணர்த்துகிறது.
- முழங்கால், கணுக்கால், பாதத்தில் விழுந்தால் துயர செய்தி கூடிய சீக்கிரத்தில் நிகழப்போகிறது என்பதை குறிக்கிறது.
- வயிற்று பகுதி, தொடைகளில் ஓணான் விழுந்தால் மனைவிக்கு ஏதோ தடங்கல் ஏற்பட போகிறது என்பதை குறிக்கிறது.
பரிகாரம்:
- ஓணான் உடலில் எந்த இடத்தில் விழுந்தாலும் தோஷமாகத்தான் கூறப்பட்டிருக்கிறது.
- ஓணான் விழுந்த அன்றைய நாளில் மயில் கழித்து ஸ்னாநம் செய்ய வேண்டும்.
- ஓணான் தலையில் விழுந்தால் நல்ல வேதியரை கொண்டு சாந்தி பூஜை செய்ய வேண்டும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
ஆன்மிக தகவல்கள் |