களத்திர தோஷம் நீங்க பரிகாரம் | Kalathra Dosham

Advertisement

களத்திர தோஷம் | Kalathra Dosham in Tamil

Kalathra Dosham Pariharam in Tamil: ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலை சரியில்லமால் இருப்பதாலும், நாம் முன் ஜென்மத்தில் செய்த வினைகளாலும் ஏற்படுவது தான் தோஷம். இந்த தோஷங்களில் நிறைய வகைகள் இருக்கிறது. அப்படிப்பட்ட தோஷங்களில் ஒன்று தான் இந்த களத்திர தோஷம். சிலருக்கு நீண்ட நாளாக இருக்கும் திருமண தடைக்கான முக்கிய காரணம் இந்த களத்திர தோஷம் தான்.

இந்த தோஷத்தை சரி செய்தால் திருமணம் கைக்கூடி வரும். அதனால் இந்த பதிவில் களத்திர தோஷம் என்றால் என்ன? அதற்கான பரிகார கோயில் போன்ற பல தகவல்களை அறிந்து கொள்வோம்.

களத்திர தோஷம் என்றால் என்ன?

களத்திர தோஷம் நீங்க

  • லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து ஜாதகத்தில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் அல்லது ஒன்றாக சேர்ந்து இருந்தாலோ அது களத்திர தோஷம் எனப்படும்.
  • திருமணம் நடைபெற்ற பெண்ணுக்கு கணவனையும், திருமணமான ஆணுக்கு மனைவியையும் குறிப்பது களத்திர தோஷம். லக்னத்திற்கு 7-வது இடத்தை குறிப்பது களத்திர ஸ்தானம்.

களத்திர தோஷம் – Kalathra Dosham Pariharam in Tamil:

  • சனி, செவ்வாய், ராகு அல்லது கேது 4-ம் இடத்தில் சேர்ந்து இருந்தாலும், 2,7-ம் இடத்தின் அதிபதிகளும், 6,8,12-ம் இடத்தில் சுக்கிரனும் கூடி பாவக் கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலும் களத்திர தோஷம் உள்ளது என்பதை கண்டறியலாம்.
  • ராகு, கேதுவுடன் ஒன்றாக இருந்தாலும் அல்லது சுக்கிரனுடன் சூரியன், சனி ஒன்றாக இருந்தாலும், சுக்கிரன் 7-ம் இடத்தில் பாவ கிரகங்களின் வீட்டில் இருந்தாலும் களத்திர தோஷம் உள்ளது என்பதை கண்டறியலாம்.

களத்திர தோஷம் ஏற்படுவதற்கான காரணம்:

  • நாம் முன் ஜென்மத்தில் செய்த தவறுகளாலும், வினைகளாலும் இந்த தோஷம் ஏற்படுகிறது.

களத்திர தோஷம் என்ன செய்யும்? 

  • இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். சில சமயம் திருமணம் நடைபெறாமல் போவதற்கான வாய்ப்பும் உள்ளது.
  • திருமணம் நடைப்பெற்றாலும் அதிக பிரச்சனைகள் ஏற்படும். கணவன் மனைவி உறவுக்குள் ஒற்றுமை காணப்படாது.

களத்திர தோஷம் நீங்க – Kalathra Dosham Pariharam in Tamil:

  • இந்த தோஷம் உள்ளவர்கள் களத்திர தோஷம் கொண்ட ஒரே ஜாதகத்தில் உள்ள (ஆண்/ பெண்) இருவரும் திருமணம் செய்து கொள்வது நல்லது.
  • அடிக்கடி உங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று முறைப்படி பூஜை செய்து வர வேண்டும் அப்பொழுதுதான் இந்த தோஷம் விரைவாக நீங்கும்.

Kalathra Dosham in Tamil – களத்திர தோஷம் நீங்க:

  • நீண்ட நாள் திருமணம் ஆகாமல் இருக்கும் (ஆண்/ பெண்) சுக்கிர பகவானின் இருப்பிடமான ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் சேர்த்தி சேவையை கும்பிட்டு வர திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
  • சுமங்கலி பூஜை வீட்டில் செய்வதன் மூலம் நல்ல பலன்களை அடையலாம்.

களத்திர தோஷம் பரிகாரம் | களத்திர தோஷம் பரிகாரம் கோயில்:

  •  குரு ஆதிக்கம் அதிக அளவு நிறைந்த புனித ஸ்தலங்களுக்கு சென்று வந்தால் திருமணத்தடை விலகும், மேலும் வீட்டில் வளங்களை சேர்க்கும். கும்பகோணம் ஆடுதுறை அருகில் உள்ள திருமணஞ்சேரி கோவிலுக்கு சென்று வழிப்பட்டால் களத்திர தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். 
செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> ஆன்மிக தகவல்கள் 
Advertisement