குரு பெயர்ச்சி 2022 to 2023 எப்போது வருகிறது?

Guru Peyarchi Palangal in Tamil

குரு பெயர்ச்சி பலன்கள் 2022 to 2023 | Guru Peyarchi Palangal 2022 to 2023

Guru Peyarchi Palangal Tamil:- ஆன்மிகம் சார்ந்த விஷயங்களை தெரிந்துகொள்ள விரும்பும் அத்துணை பேருக்கும் எங்களது அன்பான வணக்கங்கள். இன்றைய பதிவில் குரு பெயர்ச்சி 2022 எப்போது வருகிறது என்பதை பற்றி தெரிந்துகொள்வோமா? குருபகவான் பொதுவாக நவகிரகங்களில் பொன்னவன் என்று போற்றப்படுகிறார். ஆகவே குருவின் பொன்னான பார்வை நமது ராசியின் மீது விழும்போது நமக்கு ஏராளமான நன்மைகள் நடக்கும் என்பது பலரால் நம்பப்படுகிறது. ஆகவே 2022-ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் குரு பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் நல்ல பலன்களை பெறப்போகின்றன என்பதை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாமா?

குரு பெயர்ச்சி 2022 to 2023 எப்போது வருகிறது? | 2022 to 2023 Guru Peyarchi Palangal in Tamil

திருக்கணித பஞ்சாங்கம் அடிப்படையில்  குரு பகவான் நிகழும் மங்களகரமான பிலவ ஆண்டு ஆவணி மாதம் 29-ஆம் தேதி செவ்வாய்கிழமை செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி பகல் 02.22 மணியளவில் மகர ராசிக்கு திரும்புகிறார். மகர ராசியில் நேர்கதியில் பயணம் செய்யும் குருபகவான் ஐப்பசி 27-ஆம் தேதி அதாவது நவம்பர் 13-ஆம் தேதி சனிக்கிழமை நேர்கதியில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பயணம் செய்கிறார். சில மாதங்கள் கும்ப ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் பங்குனி மாதம் 29-ஆம் தேதி ஏப்ரல் 14-ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு மீன ராசியில் அதிசாரமாக பயணம் செய்யப் போகிறார். ஆகவே குரு பகவான் மகரம், கும்பம், மீனம் ஆகிய மூன்று ராசிகளில் பயணம் செய்வதால் இந்த பயணத்தின் போது குரு பகவான் பார்வையிடும் ராசிகள் என்னென்ன மற்றும் அந்த ராசிகளுக்கு என்ன அதிர்ஷ்டங்களை வழங்க இருக்கிறார் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

2022 to 2023 Guru Peyarchi Palangal in Tamil

மேஷம்:

குருபகவான் இந்த பெயர்ச்சியின் போது மேஷம் ராசிக்காரர்களுக்கு தொழில் ஸ்தானம், லாப ஸ்தானம், விரைய ஸ்தானங்களில் பயணம் செய்வதால் உங்களது உத்தியோகம் அல்லது தொழிலில் எதிர்பாரா திடீர் மாற்றங்கள் நிகழும். குறிப்பாக தொழிலில் நீங்கள் செய்யும் புதிய முதலீடுகளில் இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும். பணம் வரவு நன்றாக இருந்தாலும் கூடவே திடீர் சுப செலவுகளும் ஏற்படும். அதேபோல் உங்கள் பிள்ளைகளின் உயர் கல்விக்காக செலவு செய்வீர்கள். திருமணம் வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிதாக வீடு கட்டுவீர்கள். தங்களது பொருளாதார நிலை மேம்படும். தங்களது உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் குருபகவானின் பார்வை பலன் உங்கள் ராசியில் விழுவதால் உடனடியாக நோய்கள் குணமாகிவிடும்.

மேஷம் குரு பெயர்ச்சி 2022 to 2023 பலன்களை முழுமையாக தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> மேஷம் குரு பெயர்ச்சி பலன்கள் 2022 -2023

ரிஷபம்:

குருபகவான் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பாக்ய ஸ்தானம், தொழில் ஸ்தானம், லாப ஸ்தானத்தில் இந்த ஆண்டில் குரு பகவான் பயணம் செய்கிறார். ஆகவே தங்களுக்கு திடீர் பணம் வரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறந்து விளங்கும். குருபகவானின் பார்வை தங்களது ராசியில் ராசிக்கு குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானம், ருண ரோக சத்ரு ஸ்தானத்தின் மீது விழுவதால் உங்களது குடும்ப வாழ்க்கை குதூகலமானதாக இருக்கும். ரிஷபம் ராசியில் பிறந்த சிலருக்கு வீடுகட்டும் யோகம் கைகூடும். உங்கள் பிள்ளைகளினால் நிம்மதி நிலைத்திருக்கும். இருப்பினும் நவம்பர் மாதத்திற்குப் பிறகு, வேலை தொழிலில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம் சிலருக்கு வேலையில் திடீர் பிரச்சனைகள் வரலாம். உயரதிகாரிகள் சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது. மேலும் ரிஷபம் ராசிக்காரர்கள் நீங்கள் செயல்படுத்தும் அனைத்து விஷயங்களிலும் பொறுமையாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும்.

ரிஷபம் குரு பெயர்ச்சி 2022 to 2023 பலன்களை முழுமையாக தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> ரிஷபம் குரு பெயர்ச்சி பலன்கள் 2022-2023

மிதுனம்:

மிதுனம் ராசிக்காரர்களுக்கு குருபகவான் எட்டு, ஒன்பது, பத்தாம் வீடுகளில் பயணம் செய்வதால். குருபகவான் சில சமயங்களில் தங்களுக்கு கஷ்டங்களை கொடுத்தாலும். நவம்பர் மாதம் முதல் உங்கள் ராசிக்கு ஒன்பதாவது வீட்டில் குரு நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார் என்பதினால் நவம்பர் மாதத்திற்கு பிறகு குருபகவான் தங்களுக்கு நல்ல பலன்களை தர இருக்கிறார்.

உங்களது உடல் ஆரோக்கியம் சிறந்து விளங்கும். உங்கள் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் அனைத்தும் சரியாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும். குழந்தை இல்லாதவர்க்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திடீர் அதிர்ஷட வாய்ப்புகளும் பணம் வரவும் கிடைக்க கூடும். பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தங்களது பொருளாதார நிலைக்கு எந்த ஒரு பாதகமும் இருக்காது. வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு ஊதியம் உயர்வு கிடைக்கும்.

மிதுனம் குரு பெயர்ச்சி 2022 to 2023 பலன்களை முழுமையாக தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> மிதுனம் குரு பெயர்ச்சி பலன்கள் 2022 – 2023

கடகம்:

குரு பகவான் கடகம் ராசிக்கு களத்திர ஸ்தானம், அஷ்டமத்து ஸ்தானம், பாக்ய ஸ்தானங்களில் பயணம் செய்கிறார. இந்த குருபகவானின் பார்வை பலன் தங்கள் ராசிக்கு சில மாதங்கள் மட்டுந்தான். நவம்பர் மதம் நடைபெற இருக்கும் குருப்பெயச்சியிக்கு பிறகு குருபகவான் தங்கள் ராசிக்கு சில காரியத்தடைகளை உண்டாக்குவார் என்பதினால் இந்த ஆவணி மாதம் முதல் கார்த்திகை மாதத்திற்குள் திருமணம் சார்ந்த விசயங்களுக்கு முக்கிய முடிவுகளை எடுத்துவிட வேண்டும். இல்லையெனில் பங்குனி மாதத்திற்கு பிறகு தான் திருமணம் சார்ந்த விஷயங்களை பேச வேண்டும். நவம்பர் மாதம் குருபெயர்ச்சியின் போது குருபகவான் சில இடையூறுகளை ஏற்படுத்துவார் என்றாலும், உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வரவு செலவும் சரிசமாக இருக்கும். மேலும் நீங்கள் பணிபுரியும் இடத்தில் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். சக ஊழியர்களுடன் எப்போதும் போல இருப்பது நல்லது. வியாபாரத்தில் சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பிள்ளைகள் படிப்பில் மாதமாக இருந்தாலும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பீர்கள்.

கடகம் குரு பெயர்ச்சி 2022 to 2023 பலன்களை முழுமையாக தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> கடகம் குரு பெயர்ச்சி பலன்கள் 2022 -2023

சிம்மம்:

சிம்மம் ராசிக்காரர்களுக்கு குருபகவான் ஆறு, ஏழாம் வீட்டிலும் எட்டாம் வீட்டிலும் பயணம் செய்யும் குருபகவான் சில நேரங்களில் நல்ல பலன்களையும், சில நேரங்களில் கெட்ட பலன்களையும் வழங்க இருக்கிறார். நவம்பர் மாதம் நிகழ இருக்கும் குருபெயற்சியினால் தங்கள் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றங்கள் நிகழ உள்ளது.

உங்களுடைய தொழில் அல்லது வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். வேலை இடத்தில் தங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். இந்த நவம்பர் மாதம் குருபெயர்ச்சியின் போது மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் அதிக சந்தோசமாக இருப்பீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சகிக்கப்படும். கணவன் மனைவி உறவுக்குள் நல்ல புரிதல் இருக்கும். பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தங்களது பொருளாதார நிலை வளர்ச்சிகரமானதாக இருக்கும். வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும்.

சிம்மம் குரு பெயர்ச்சி 2022 to 2023 பலன்களை முழுமையாக தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> சிம்மம் குரு பெயர்ச்சி பலன்கள் 2022-2023

கன்னி:

குரு பகவான் கன்னி ராசிக்கு ஐந்து, ஆறு, ஏழாம் வீடுகளில் பயணம் செய்வதால் உங்களுடைய ராசிக்கு சில மாதங்கள் மட்டுமே குரு பகவானின் பார்வை நன்றாக இருக்கும். அதன் பிறகு நவம்பர் மாதம் நிகழ இருக்கும் குரு பெயர்ச்சியானது உங்களுக்கு சிறந்த பலன்களை கொடுக்காது.  இந்த பெயர்ச்சியின் போது திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படும்.

இந்த காலகட்டத்தில் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தூக்கம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். 2022 ஆண்டு ஏப்ரல் மாதம்  குரு பகவான் அதிசாரமாக பயணம் செய்யும் காலத்தில் குருவின் நேரடி பார்வை காரணமாக. உங்கள் உடல் ஆரோக்கியம் சிறந்து விளங்கும். உத்தியோகத்தில் தங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும். கணவன் மனைவி உறவுக்குள் நல்ல புரிதல் காணப்படும். மாணவர்கள் படிப்பில் முன்னிலையில் இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் இரண்டு மடங்கு அதிகமாக கிடைக்கும்.

ரிஷபம் குரு பெயர்ச்சி 2022 to 2023 பலன்களை முழுமையாக தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> கன்னி குரு பெயர்ச்சி பலன்கள் 2022 -2023

2021-ம் ஆண்டிற்கான குரு வக்ர பெயர்ச்சி பலன்கள்

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு குருபகவான் தங்களது ராசியில் சுக ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம், ருண ரோக சத்ரு ஸ்தானங்களில் பயணம் செய்வதால் உங்களுக்கு பணம் வரவு அதிகமாக கிடைக்க போகிறது. உங்கள் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழப்போகிறது. அதுவும் நவம்பர் மாதம் நிகழ இருக்கும் குரு பெயர்ச்சியின் போது ஏராளமான நன்மைகளை தங்களுக்கு குருபகவான் வழங்க இருக்கிறார்.

நீங்கள் தொழில் அல்லது வியாபாரத்தில் செய்யும் முதலீட்டிற்கு இரண்டு மடங்கு லாபம் குவியும். நீங்கள் பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். சொத்து சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். வயிறு சம்மந்தமாக பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு, அர்த்தாஷ்டம சனியின் பாதிப்பினால் அவதிப்படுபவர்களுக்கும் இந்த குருபெயர்ச்சியால் சந்தோசம் கிடைக்கும்.

துலாம் குரு பெயர்ச்சி 2022 to 2023 பலன்களை முழுமையாக தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> துலாம் குரு பெயர்ச்சி பலன்கள் 2022-2023

விருச்சிகம்:

விருச்சிகம் ராசியில் குருபகவான் சில மாதங்கள் மறைந்திருந்தாலும் சுக ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் குரு பகவான் பயணம் செய்கிறார். நவம்பர் மாதம் குரு பெயர்ச்சியின் போது குருவின் பார்வை உங்கள் ராசியில் 8-ம் வீட்டிலும், தொழில் ஸ்தானமான 10-ம் வீடு, விரைய ஸ்தானமான 12-ம் வீட்டிலும் விழுகிறது. ஆகவே உங்கள் உடல் ஆரோக்கியம் சிறந்து விளங்கும்.

உங்கள் மனதில் இருந்து வந்த கவலைகள் அனைத்தும் நீங்கும். வீட்டில் இருந்து வந்த குழப்பங்கள் அனைத்தும் நீங்கும். வேலை இல்லாதவரக்ளுக்கு நல்ல வேலை கிடைக்கும். விருச்சிகம் ராசியில் பிறந்த சிலருக்கு புரமோஷன் கிடைக்க வாய்ப்புள்ளது. அது உங்கள் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும்.

விருச்சிகம் குரு பெயர்ச்சி 2022 to 2023 பலன்களை முழுமையாக தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> விருச்சிகம் குரு பெயர்ச்சி பலன்கள் 2022-2023

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பகவான் தற்பொழுது உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்திலும், மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்திலும், நான்காம் வீடான சுக ஸ்தானத்திலும் பயணம் செய்கிறார். வரும் நவம்பர் மாதம் உங்கள் ராசி நாதனான குரு பகவான் மூன்றாம் வீட்டிற்கு செல்வதால் சில மனசங்கடங்களை ஏற்படுத்துவார்.

உங்கள் பொருளாதார நிதிநிலையில் சில நெருக்கடிகள் ஏற்படலாம் என்றாலும் குருபகவானின் பார்வை உங்களது ராசியில் ஏழாம் வீடான களத்திர ஸ்தானம், பாக்ய ஸ்தானம், லாப ஸ்தானங்களின் மீது விழுவதால் நீங்கள் செய்யும் தொழில் இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும். கணவன், மனைவி உறவுக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். பாத சனி படுத்தி எடுத்தாலும் இந்த குரு பெயர்ச்சியால் உங்களுக்கு பாதகங்களை விட சாதகமே அதிகம் நடைபெறும் வேலையில் சுறுசுறுப்பும் உற்சாகமும் அதிகரிக்கும்.

தனுசு குரு பெயர்ச்சி 2022 to 2023 பலன்களை முழுமையாக தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> தனுசு குரு பெயர்ச்சி பலன்கள் 2022-2023

மகரம்:

மகரம் ராசிக்காரர்களுக்கு குருபகவான் சில மாதங்கள் உங்கள் ராசியில் பயணம் செய்வார். ஜென்ம குரு மனதில் சில நேரங்களில் சில பாதகங்களை ஏற்படுத்தினாலும் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு சாதகமாகவே இருக்கும். நவம்பர் மாத பெயர்ச்சியின் போது குருபகவான் தங்கள் ராசியில் இரண்டாவது வீட்டிற்கு செல்வதால் பண வரவு நன்றாக இருக்கும்.

வேலை கிடைக்காதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். இந்த பெயர்ச்சியில் குருவின் பார்வை ஆறு, எட்டு, பத்தாம் வீடுகளின் மீது விழுவதால் தங்களது நிதி நெருக்கடிகள் முடிவுக்கு வரும். தங்களுடைய கடன் பிரச்சனைகள் தீரும். தொழில் இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும்.

மகரம் குரு பெயர்ச்சி 2022 to 2023 பலன்களை முழுமையாக தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> மகரம் குரு பெயர்ச்சி பலன்கள் 2022-2023

கும்பம்:

கும்பம் ராசிக்கு 12-ஆம் வீடு, ஜென்ம ராசி, 2-ஆம் வீடான குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்யப் போகிறார். செப்டம்பர் முதல் நேர்கதியில் விரைய ஸ்தானத்தில் பயணிக்கப் போகும் குருபகவான் நவம்பர் மாதம் முதல் இடப்பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு வந்து அமர்கிறார். ஆகவே குருவின் பொன்னான பார்வையால் உங்களுக்கு நல்ல பலன்களை இந்த பெயர்ச்சியில் வழங்குவார்.

புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் இப்பொழுது தொடங்கலாம் என்றாலும் சுய ஜாதகத்தில் உங்களுக்கு என்ன திசை நடைபெறுகிறது என்று பார்த்து தொடங்குவது நல்லது. பணிபுரியும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும்.  வீட்டில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். இருப்பினும் உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கும்பம் குரு பெயர்ச்சி 2022 to 2023 பலன்களை முழுமையாக தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> கும்பம் குரு பெயர்ச்சி பலன்கள் 2022-2023

மீனம்:

குரு பகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உங்கள் ராசிக்கும் வரப்போகிறார். லாப குரு, விரைய குரு, ஜென்ம குரு என இந்த ஆண்டு குருவின் சஞ்சாரம் உங்கள் ராசிக்கு உள்ளது. ஆகவே நீங்கள் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். நீங்கள் தொடுவதெல்லாம் விலகும் குருவின் பார்வை சுக ஸ்தானத்தின் மீதும்,ருண ரோக சத்ரு ஸ்தானத்தின் மீதும், ஆயுள் ஸ்தானத்தின் மீதும் விழுவதால் தங்களது உடல் ஆரோக்கியம் சிறந்து விளங்கும். பொருளாதாரத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. அலுவலகத்தில் மேலதிகாரிகள் சொல்வதை கேட்டு நடந்து கொள்வதன் மூலம் வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

மீனம் குரு பெயர்ச்சி 2022 to 2023 பலன்களை முழுமையாக தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> மீனம் குரு பெயர்ச்சி பலன்கள் 2022-2023

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்