Sangu Poo Benefits in Tamil
வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் சங்கு பூவினால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம். இது என்ன சங்கு பூ என்று யோசிக்கிறீங்களா.! சங்கு பூ என்றால் வேறொன்றுமில்லை. சங்கு பூவின் வேறொரு பெயர் சொன்னால் எளிதாக உங்களுக்கு தெரியும். அது சங்கு புஷ்பம், மாமூலி, கன்னி கொடி, காக்கணம், காக்கரட்டான் போன்ற பெயர்களில் அழைப்போம். இந்த பெயரிலே காக்கரட்டான் என்பது தான் அனைவரும் அறிந்தது. கிராமத்தில் எல்லாம் காக்கரட்டான் பூ என்று சொன்னால் தான் தெரியும்.
இந்த சங்கு பூ வயல்களில் மற்றும் சாலை ஓரமாக இருக்கும். இந்த பூவை யாரும் வீட்டில் வளர்க்கிறீங்களா.! இந்த பூவெல்லாம் நாம் வளர்க்க மாட்டோம். தலையில் வைக்க கூடிய பூவை மட்டும் தான் வளர்ப்போம் அல்லவா. ஆனால் சங்கு பூவையும் வீட்டில் வளர்க்கலாம் என்பது எத்தனை நபர்கள் அறிந்தது. இதை கடவுளுக்கு சூட்டுவோம். இந்த பூவினால் வேறன்ன நன்மைகள் இருக்கு என்று தானே நினைக்கிறீர்கள். இந்த பதிவிற்கு பிறகாவது தெரிந்துகொள்ளுங்கள். வாங்க சங்கு பூவினால் கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்ப்போம்.
இந்த மரங்களை வீட்டில் வளர்த்தால் நன்மை பெருகும் |
சங்கு பூ வகைகள் | Sangu Poo Vagaigal in Tamil
ஒவ்வொரு பூவும் தனித்தனி மணம் உடையது. அதுமட்டுமில்லாமல் வெவ்வேறு நிறத்தில் ஒரே பூ இருக்கும். எடுத்துக்காட்டாக அந்தி மந்தாரை பூவில் வெள்ளை, ரோஸ் போன்ற நிறத்தில் இருக்கும். அது போல தான் சங்கு பூவும் இரண்டு நிறத்தை உடையது.
- ஊதா நிற பூ
- வெள்ளை நிற பூ
சங்கு பூ செடி இல்லை. கொடியாக வளர கூடியது. நீங்கள் கொஞ்சமாக வைத்தாலே அது படர்ந்துவிடும். இதில் ஊதா நிற பூவை வீட்டில் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்ப்போம்.
நினைத்த காரியம் வெற்றி பெற:
சங்கு பூவை வீட்டின் வாசலில் வைக்க வேண்டும். நீங்கள் வெளியில் செல்லும் போது கடவுளை வணங்கி விட்டு செல்லுவோம். அது போல சங்கு பூவை பார்த்து விட்டு சென்றாலே போதும் நீங்கள் நினைத்த காரியம் வெற்றி அடையும்.
கோபம் குறைய:
பொதுவாக பச்சை நிறம் மன அமைதியை தரும் என்பது அனைவரும் அறிந்தது. அதே போல தான் இந்த ஊதா நிற சங்கு பூவை பார்த்தாலும் மன அமைதியை தரும். அதுமட்டுமில்லாமல் நீங்கள் வீட்டில் எதாவது சண்டை அல்லது பிரச்சனை என்றால் மன குழப்பம் அல்லது கோபம் அடைவீர்கள். அந்த நிலையில் சங்கு பூவை பார்த்தால் போதும் மன அமைதி நிலை அடைந்து கோபம் குறைந்துவிடும்.
சங்கு பூ எந்த கடவுளுக்கு உகந்தது:
ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு பூவை வைத்து வழிபடுவோம். கடவுளுக்கு உகந்த பூவை வழிபடுவது நல்லது என்றும் சொல்வார்கள். அந்த வகையில் சங்கு பூ சிவனுக்கு உகந்தது. சிவனுக்கு சங்கு பூவை வைத்து வழிபடுவதனால் கேட்கும் வரம் கிடைக்கும்.
மருத்துவ பயன்கள்:
இந்த சங்கு பூவுக்கு அதிகப்படியான மருத்துவ குணம் உள்ளது. சங்கு செடியில் உள்ள காற்றை சுவாசித்தால் மூச்சு திணறல், சுவாச கோளாறு, இருதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் தீரும். சங்கு பூ கொடி இருக்கும் இடத்தை சூட்டை தனித்து குளிர்ச்சியான நிலையில் வைத்திருக்கும்.
சங்கு பூவினால் கிடைக்கும் நன்மைகளை படித்து தெரிந்து கொண்டீர்களா.! அடுத்து என்ன செய்ய போகிறீர்கள். சங்கு பூவை வீட்டின் முன் பகுதியில் வைக்க போகிறீர்கள் தானே. இந்த பதிவை படித்த பிறகும் சங்கு பூவை வைக்காமல் இருப்பீர்களா.! சங்கு பூவை வைத்து நன்மைகளை பெற்று வெற்றி அடையுங்கள்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |