Advertisement
சிங்கபல்லின் நன்மைகள் | Singapallin Nanmaigal in Tamil
நம் உடலில் பயன்படுத்தக்கூடிய உறுப்புகளில் ஒன்றுதான் பல். பற்கள் நமக்கு மெல்லுவதற்கும், சாப்பிடுவதற்கும் என பல வகைகளில் பயன்படுகிறது. ஒரு பல் மட்டும் எல்லாருக்கும் இருக்காது சிலருக்கு மட்டும் தான் இருக்கும் அது என்ன பல் என்று தெரியுமா.? அது தான் சிங்கப்பல். சிங்கப்பல் இருந்தால் எவ்வளவு பலன்கள் இருக்கு என்று உங்களுக்கு தெரியாதுஅல்லவா..! சரி வாங்க சிங்கப்பல்லில் இருக்கும் அற்புதங்களை பற்றி காண்போம்.
பற்களின் பெயர்கள்:
- வெட்டுப்பற்கள் – 04
- கோரைப்பற்கள் – 02
- முன்கடவாய்ப்பற்கள் – 04
- கடவாய்ப்பற்கள் – 06
- மேல்தாடையில் உள்ள பல் , கீழ்த்தாடையில் உள்ள பல் என சேர்த்து 32 பற்கள் உள்ளன.
கைரேகை பலன்கள் |
பற்கள் வகைகள்:
பற்கள் இரண்டு வகைப்படும் அவை:
- மேல்தாடைப்பற்கள்
- கீழ்த்தாடை பற்கள்
சிங்கப்பல் பலன்கள்:
- மனிதர்களின் மேல்தாடையில் நிறைய பற்கள் இருக்கும் . அதில் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொருவருக்கும் வித்தியாசாமாக பற்கள் முளைக்கும் அதில் ஒரு சிலருக்கு சிங்க பற்கள் இருக்கும். அந்த சிங்கப்பற்கள் உடையவர்கள் சிரித்தாள் அழகாக இருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் அந்த பற்கள் உடையவர்கள் தனி குணம் உடையவர்களாக இருப்பார்கள். அதனை பற்றி இப்போது படித்து தெரிந்துகொள்வோம்.
- சிங்க பல் உள்ளவர்கள் எந்த ஒரு துன்பத்தையும் எளிதாக கடந்துவிடுவார்கள். அந்த துன்பத்தையெல்லாம் அவர்கள் கஷ்டமாகவே பார்க்கமாட்டார்கள்.
- மனிதர்கள் அனைவருமே கோவப்படும் குணம் உடையவர்களாக தான் இருப்பார்கள். ஆனால் சிங்கப்பல் உடையவர்களும் கோவப்படுவார்கள் ஆனால் கோவப்பட்டாலும் அந்த மனிதரிடம் அன்பை காட்டுவார்கள்.
- நாம் எல்லோரும் அறிந்த பழமொழிதான் ஒன்று அது என்னவென்றால் அடிக்கிற கைதான் அணைக்கும் என்ற பழமொழிக்கேற்று குணம் உடையவர்களாக இருப்பார்கள்.
- பொதுவாக மனிதர்கள் கஷ்டம் வந்தாலே என்ன வாழ்க்கை என்று சோர்ந்துவிடுவார்கள். ஆனால் சிங்கப்பல் உடையவர்கள் எப்படிப்பட்ட துன்பம் வந்தாலும் அதனை நம்பிக்கையுடன் கடந்து விடுவார்கள்.
- சிங்கப்பல் உள்ளவர்கள் பேசும் வார்த்தைகள் நீண்ட வாக்கியமாக இல்லாமல் வெட்டு ஒன்று துண்டு ஒன்று சொல்லிவிடுவார்கள். அதுமட்டுமில்லாமல் நேர்கொண்ட குணம் உடையவர்களாக இருப்பார்கள்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.Com |
Advertisement