சித்திரை மாதத்தின் சிறப்புகள் | Chithirai Month Special in Tamil
தமிழ்நாட்டில் சித்திரை மாதத்தை வைத்தே வருடம் கணக்கிடப்பட்டது. அப்படி உள்ள ஆன்மீகத்தில் சித்திரையை முதல் மாதமாகவும், பங்குனியை கடை மாதம் என்றும் கூறுவார்கள். உயிரினம் வளர்வதற்குக் காரணமான பல முக்கிய அவதாரங்களும் சித்திரையில் தான் நடந்தன என்பது சித்திரையின் சிறப்பை மேலும் உறுதி செய்கிறது. ஒவ்வொரு ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது ஒரு மாதம் தொடங்கும். அந்த வகையில் சூரிய பகவான் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலம் தான் சித்திரை மாதமாகும். நாம் இன்றைய ஆன்மீக பதிவில் சித்திரை மாதத்தின் சிறப்புகளை படித்து தெரிந்துக்கொள்ளலாம்..
சித்திரை மாத சிறப்புகள்:
- சித்திரை மாதத்தின் தொடக்கத்தில் சூரியனை வழிபடக்கூடிய சிறப்புமிக்க நாளாக கொண்டாடப்படுகிறது.
- வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்துவது போல நம்முடைய முன்னோர்கள் இந்த தமிழ் வருடப்பிறப்பு நன்னாளில் வேப்பம் பூ பச்சடி செய்வது வழக்கம்.
- இந்த வேப்பம் பூவுடன் வெல்லம், புளி போன்றவை சேர்த்து செய்யப்படும் இது இனிப்பு, கசப்பு, புளிப்புடன் இருக்கும்.
- சித்திரையின் வளர்பிறை துவிதியையில் கிருத யுகம் பிறந்தது.
- சித்திரையின் வளர்பிறை சப்தமியில் கங்கை நதி பிறந்தது.
- சித்திரையின் வளர்பிறை திரயோதசியில் மத்ஸ்ய அவதாரம் நடந்தது.
- சித்திரையின் தேய்பிறைப் பஞ்சமியில் வராஹ அவதாரம் நடந்தது.
சித்திரை மாத திருவிழாக்கள்:
சித்திரை மாதம் என்றாலே கோவில் திருவிழாக்கள் தான் முதலில் நம் நினைவிற்கு வரும். அதிலும் குறிப்பாக சித்திரை திருவிழா என்றாலே மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா தான்.
இந்த திருவிழா கிட்டத்தட்ட 12 நாட்கள் நடைபெறும். இந்த திருவிழாவில் மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை, வைகையாற்றில் இறங்கும் நிகழ்வும், தசாவதாரம் போன்ற விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
தை மாத சிறப்புகள் |
சித்திரை பௌர்ணமி:
சித்திரை மாதத்தில் வரக்கூடிய ‘சித்ரா பெளர்ணமி’ மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த சித்ரா பௌர்ணமி அன்று நிலவின் முழு வெளிச்சத்தால் பூமியின் சில பகுதியில் ஒரு வகை உப்பு வெளிவரும், அது பூமி நாதம் என சித்தர்கள் அழைப்பார்கள். இது மருத்துவ துறையில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது.
அட்சய திருதியை:
- எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் அது பல மடங்கு பலன் தரக்கூடிய நாளாக விளங்குவது அட்சய திருதியை.
- இந்த நன்னாள் சித்திரை மாதத்தில் தான் வருகிறது.
- இந்த தினத்தில் அரிசி, கோதுமை, தானியங்கள். பழங்கள். தயிர், மோர், ஆடைகள் உள்ளிட்டவற்றை ஏழைகளுக்கு தானம் செய்வதால் நமக்கு மன அமைதியும், செல்வமும் பெருகும்.
- சித்திரை மாதத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடப்பது வழக்கம்.
சித்திரை மாதம் பிறந்தவர்களின் பொதுவான குணம்:
- சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் அனைவராலும் விரும்பக்கூடிய நபர்களாக இருப்பார்கள்.
- ஒரு செயலை தொடங்கினால் அதில் வெற்றி பெறுவதற்கு முழு முயற்சியினை செய்வார்கள்.
- சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் அறிவியல் மற்றும் காவல் துறையிலும் சிறந்து விளங்குவார்கள்.
- எதிலும் எதிர்த்து போராட கூடியவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை வேலை வாங்கும் ஆற்றலையும் கொண்டிருப்பார்கள்.
- எந்த காரியத்தையும் ஒதுக்கும் குணம் இவர்களிடம் இருக்காது.
- சில நேரத்தில் அதிக உணர்ச்சிவசப்பட கூடியவர்களாகவும், கோபம் கொண்ட நபர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் டென்சன், நரம்புதளர்ச்சி உடையவர்களாக இருப்பார்கள்.
- சூரியனை போன்று எப்போதும் பிரகாசமாக இருக்கக்கூடியவர்கள்.
- சித்திரை மாதத்தில் பிறந்த பெண்கள் தன்னை அழகாக காட்டிக்கொள்வதற்கு தன்னுடைய நடை, உடை, பாவனையில் அதிகமாக கவனம் செலுத்துவார்கள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |