சித்ரா பௌர்ணமி 2022 | Chitra Pournami 2022 in Tamil

Advertisement

சித்ரா பௌர்ணமி சிறப்பு | Chitra Pournami in Tamil

மற்ற நாட்டவர்கள் வருட கணக்கை அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே நம் முன்னோர்கள் சூரியன் மற்றும் சந்திரனின் அசைவுகளை வைத்து மாதங்களை கணக்கிட்டு வந்தனர். அப்படி கணக்கிடப்பட 12 மாதங்களில் மேஷ ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதமான சித்திரை மாதத்தை முதல் மாதமாக கருதினார்கள். இந்த மாதத்தில் எல்லாமே மிக சிறப்பு வாய்ந்தவை தான் அதிலும், சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு தனி சிறப்பு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். நாம் இந்த பதிவில் சித்ரா பௌர்ணமி அன்று என்ன செய்ய வேண்டும் மற்றும் அதன் சிறப்புகளை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

சித்ரா பௌர்ணமி 2022:

  • சித்ரா பௌர்ணமி ஏப்ரல் மாதம் 16-ம் தேதி வருகிறது (16.04.2022)

Chitra Pournami 2022 Time in Tamil:

கிழமை  தேதி  நேரம் 
சனிக்கிழமை  16.04.2022 Pournami Tithi Begins – 02:25 AM on Apr 16, 2022
Pournami Tithi Ends – 12:24 AM on Apr 17, 2022

சித்ரா பௌர்ணமி சிறப்பு:

  • Chitra Pournami Benefits in Tamil: மற்ற பௌர்ணமியில் சிறு களங்கத்துடன் தோன்றும் சந்திரன் சித்திரா பௌர்ணமியன்று சுபிட்சமான கலைகளுடன் பூமிக்கு மிக அருகில் தோன்றும். இந்த தினத்தில் நவகிரகங்களில் ஒன்றான சூரியன் மற்றும் சந்திரன் இருவரும் உச்ச நிலையை அடைந்து இருப்பார்கள்.
  • இதில் சூரியன் உடலுக்கு காரகனாகவும், சந்திரன் ஆத்மாவிற்கு காரகனாகவும் இருப்பார். மேலும் மும்மூர்த்திகளான சிவன், பார்வதி மற்றும் தேவி சூரிய சந்திரனின் அம்சமாக திகழ்வார்கள். அதனால் தான் சித்திரா பௌர்ணமி அன்று பூஜைகள் மற்றும் வழிபாடுகள் சிவன் ஆலயங்களில் சிறப்பாக இருக்கும்.
  • சிவன் ஆலயங்கள் மட்டும் இன்றி அனைத்து கோவில்களிலும் பூஜைகள் சிறப்பானதாக இருக்கும்.

சித்ரா பவுர்ணமி விரதம்:

  • Chitra Pournami Viratham in Tamil: சித்ரா பௌர்ணமி அன்று உணவு எதுவும் உண்ணாமல் காலை முதல் மாலை வரை விரதம் மேற்கொண்டு இறைவனை வழிபட்டால் நீங்கள் வேண்டிய அனைத்தும் நிறைவேறும்.
  • கிரிவலம் மேற்கொண்டு இறைவனை வழிபட்டு தான தர்மம் செய்தால் உங்கள் வாழ்வில் நன்மைகள் நடக்கும். பித்ரு தோஷங்கள், சாபங்கள் நீங்கும் மேலும் பெரியோர்களின் ஆசியும் அருளும் கிடைக்கும்.
  • எமதர்மனின் கணக்காளராக இருக்கும் சித்ரகுப்தன் தான் பூமியில் வாழும் மக்களின் நன்மை, தீமைகளை கணக்கிட்டு சொர்க்கமா, நரகமா என்பதை தீர்மானிப்பார். இந்த சிறப்பு வாய்ந்த சித்ரா பௌர்ணமி அன்று சித்ரகுப்தனை வழிபட்டால் உடல் நலத்தில் எவ்வித குறையும் இல்லாமல் நீண்ட நாள் வாழலாம்.
  • உங்களின் பாவ புண்ணியங்கள் நீங்குவதற்கு பக்தர்களுக்கு அன்னதானம் செய்வது நல்லது. இதன் மூலம் உங்களின் பாவங்கள் நீங்கி புண்ணியங்கள் கிடைக்கும்.

சித்ரா பவுர்ணமி பூஜை:

  • இந்த தினத்தில் அம்பாளுக்கு உடை, அணிகலன், மாலை அணிவித்து வழிபாடு செய்வது நல்லது. மஞ்சள் கலந்த சாதம் படைத்து, பானகம், கிராம்பு, ஏலம், பச்சைக் கற்பூரம் சேர்த்த தாம்பூலம் அடங்கிய நைவேத்தியத்தைப் படைக்க வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பௌர்ணமி சிறப்புகள்

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement