Janma Sani Effects in Tamil
ஆன்மீக நண்பர்களுக்கு எங்களது அன்பான வணக்கங்கள். இன்றைய பதிவில் ஜென்ம சனி என்றால் என்ன என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம். பொதுவாக சனி பகவான் ஒரு பெயர்ச்சியின் போது ஒரு ராசியில் சராசரியாக இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பார். ஒருவரது ராசியில் இருந்து 12-ம் ராசியில் சனிபகவான் சஞ்சாரிக்கும் போது விரய சனிகாலம் என்றும், ஜென்ம ராசியில் அதாவது ஒன்றாம் ராசியில் சஞ்சரிப்பதை ஜென்ம சனி என்றும் இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கும்போது பாத சனி என்றும் ஏழரை ஆண்டு சனி காலம் உள்ளது. அப்படி சனி பகவான் ஒரு ராசியில் அமர்ந்திருக்கக்கூடிய அமைப்பு ஜென்ம சனி என்றழைக்கப்படும். ஜென்ம சனி எப்படிப்பட்ட பலனை அந்த ராசியினருக்கு அளிப்பார் என்பதை இந்த பதிவின் மூலம் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
சனி பெயர்ச்சி 2020 – 2023 |
ஜென்ம சனி என்றால் என்ன?
ஜோதிடம் ரீதியாக ஒரு ராசிக்கு ஒன்றாம் இடத்தில் சனி அமர்ந்திருப்பின் அதற்கு ஜென்ம சனி என்று பெயர். ஒரு ராசிக்காரர்க்கு ஜென்ம சனி நடக்கும் காலத்தில் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும்.
குரு பெயர்ச்சி 2022 எப்போது வருகிறது? |
ஜென்ம சனி பலன்கள்:
வீட்டில்:
ஜென்ம சனி நடக்கும் காலத்தில் ஒருவர் எவ்வளவு பிரபலமானவராக, சமூகத்தில் மிகவும் மதிக்கத்தக்கவராக இருந்தவர்கள் கூட பலவகையான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். வீட்டில் உள்ளவர்களுடன் சில பிரச்சனைகள் ஏற்படுத்தும். குடும்பத்தில் நிம்மதி இருக்காது.
அலுவலகம்:
அலுவலகத்தில் உயர்ந்த நிலையில் பணிபுரிபவர்களுக்கு கூட பல சருக்கல்கள் ஏற்படக்கூடும். மேலதிகாரிகளுடன் சில மோதல்கள் ஏற்படலாம். உங்களுடன் பணிபுரியும் சக பணியாளர்களுடன் ஒத்துழைப்பு குறைந்து காணப்படும்.
தொழில்/ வியாபாரம்:
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குப் பெரியளவு லாபம் கிடைக்காமல் போகலாம். உற்பத்தி குறைவு ஏற்படலாம். பல்வேறு வகையில் தேக்க நிலையும், லாபமின்மையும், மனக்கசப்பும் ஏற்படலாம்.
கண்டக சனி என்ன செய்யும் |
வேலை:
நன்கு படித்தவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்காமல் மிகவும் அல்லல்படுவார்கள்.
உடல் ஆரோக்கியம்:
ஒருவரது ராசியில் சனிபகவான் ஆட்சி செய்யும் போது அவரது உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்காது. சுறுசுறுப்பின்மையால் உடல் மந்த நிலையில் இருக்கும்.
சனிபகவான் ஒருவரது ராசியில் இருக்கும் போது நல்ல பலன்களை வழங்கமாட்டார். ஆகவே நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் அத்தகைய காலகட்டத்தில் நன்கு யோசித்து செய்லபட வேண்டும். எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது பொறுமையாக அனைத்து விஷயங்களையும் கடைபிடிக்க வேண்டும். மேலும் சனிபகவான் வழங்கும் இத்தகைய துன்பங்களில் இருந்து விடுபட பரிகாரங்கள் மற்றும் மந்திரங்களை ஜெபிக்கலாம்.
பரிகாரம்:
- ராகு கேதுவுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.
சிறப்பு பரிகாரம்:
- வியாழக்கிழமை தோறும் தக்ஷிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் சத்குருவே நம” என்ற மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லவும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |