திருமண பெயர் பொருத்தம் | Name Compatibility For Marriage in Tamil

Name Compatibility For Marriage in Tamil

திருமண பெயர் பொருத்தம் பார்ப்பது எப்படி? | Peyar Porutham For Marriage in Tamil 

வணக்கம் நண்பர்களே முன் ஆன்மீகம் பதிவில் திருமணம் பொருத்தம் பற்றி பார்த்திருப்போம். அதே போல் இந்த பதிவில் திருமணம் பெயர் பொருத்தம் பார்ப்பது பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக திருமணம் பொருத்தம் என்றால் குறைந்தது 5 பொருத்தமாவது இருக்க வேண்டும் என்பது உண்மை. ஒரு சிலர் ஜாதகம் இல்லாதவர்கள் பெயர் பொருத்தம் பார்த்து திருமணம் செய்து கொள்கிறார்கள் அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கிறது. அதனால் இந்த பதிவில் திருமண பொருத்தம் பார்ப்பது பற்றியும் அதன் முறைகளை பற்றியும் பார்ப்போம் வாங்க.

பெயர் பொருத்தம் பார்ப்பது எப்படி:

திருமண பெயர் பொருத்தம் பார்ப்பது எப்படி

Thirumana Peyar Porutham Tami:

  • திருமண பெயர் பொருத்தம் என்பது உங்கள் பெயர்களை பொருத்தம் பார்ப்பது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். உங்களுடைய பெயர்களை வைத்து திருமணம் பொருத்தம் பார்ப்பது தவறு.
  • திருமணம் பொருத்தம் என்பது ஜாதகம் இல்லாதவர்களுக்காக பார்ப்பது ஆகும் அப்படி பார்க்கும் பட்சத்தில் அதில் ஜோதிடர்களுக்கு அதிகம் சந்தேகம் இருக்கிறது. ஜாதகம் பார்க்கும் ஜோதிடர்கள் ஒவ்வொரு விஷயத்தை சரி என்று சொல்வார்கள் இன்னும் சிலர் தவறு என்று சொல்வார்கள்.
  • பெயர் பொருத்தம் என்பது ஜாதகம் இல்லாதவர்களுக்கு பார்ப்பது என்று சொல்லிருக்கிறோம். ஜோதிடர்களை பார்க்கும் வரும் நேரத்தில் திருமணம் செய்துகொள்ளபவர்களுடைய பெயர்களை வைத்து அப்பொழுது அவர்களுக்கு பிரசன்ன ஜாதகம் எடுத்து அவர்களுடைய ஜாதகம் என நினைத்து அவர்களுக்கு பொருத்தம் பார்த்து பலன் சொல்வார்கள். ஆனால் அப்படி பார்ப்பது தவறு.
  • ஏன் அப்படி பார்த்தால் தவறு என்று சொல்கிறார்கள் என்றால் அப்படி பார்க்கும் போது இருவர்க்கும் ஒரே நட்சத்திரம் வரும் இந்த முறையில் பார்ப்பது தவறு. அப்படி பார்த்தால் முக்கிய பொருத்தமான ரஜ்ஜு பொருத்தம் சரியாக அமையாது. பிரசன்னம் என்றால் நம் மனதில் என்ன தோன்றுகிறதோ அதுதான் பிரசன்னம். பிரசன்னத்தில் 36 வகையான பிரசன்னம் இருக்கிறது. பிரசன்னம் பார்க்காமல் எப்படி பொருத்தம் பார்ப்பது.
ராகு கேது தோஷம் நீங்க பரிகாரம்

 

Name Porutham in Tamil:

  • திருமணம் செய்பவர்களுக்கு அவர்களுடைய நட்சத்திரம் ரீதியாக பெயர்கள் வைத்திருப்பார்கள். இல்லையென்றால் அவர்களுடைய தாத்தா, பாட்டி, இல்லையெனில் அவர்களுக்கு மனதிற்கு நெருக்கமான ஒருவருடைய பெயர்களை வைத்திருப்பார்கள். அப்படி தோன்றுவதற்கு காரணம் பிரசன்னம் அப்போ இதுவும் ஒரு விதமான பிரசன்னம் தான்.
  • திருமணம் பெயர் பொருத்தம் பார்க்கும் நபர்களுடைய முதல் எழுத்து எந்த நட்சத்திரத்தை குறிக்கிறதோ அந்த நட்சத்திரத்தை எடுத்து அதன் மூலம் 11 வகையான பொருத்தம் பார்க்கலாம்.
  • அதை ஜென்ம நட்சத்திரமாக நினைத்துக்கொண்டு இந்த நட்சத்திரக்காரர் நட்பா? பகையா இது போல் பல விதமான பொருத்தம் கணிக்க முடியும். இது போல்தான் திருமண பெயர் பொருத்தம் பார்க்கிறார்கள்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்