தீட்சை பெறுவது எப்படி? | Theetchai Peruvathu Eppadi

Theetchai Peruvathu Eppadi

தீட்சை வகைகள் | Types of Theetchai in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய ஆன்மீக பகுதியில் தீட்சை என்றால் என்ன? தீட்சை வகைகள் எத்தனை உள்ளது என்று படித்து தெரிந்துக்கொள்ளலாம். தீட்சை என்பது சிவாகமங்களில் கூறப்பட்ட சைவக் கிரியைகளில் ஒன்று. சிவபெருமானைத் தியானித்து விதிப்படி வழிபடுவதற்கு நமக்குத் தகுதியளிப்பது தீட்சை ஆகும். வாங்க தீட்சை பற்றி மேலும் விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

பலன் தரும் பதிகங்கள்

தீட்சை என்றால் என்ன?

தீட்சையென்றால் அறியாமையை போக்கி நல்லறிவை தருவது தீட்சை என்று அர்த்தமாகும். நல்ல அறிவினை உடையவர்களே இன்பமாய் வாழ்வதற்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. தீய பழக்கம் உள்ளவர்களிடம் இறைவனின் அருள் எப்போதும் கிடைக்காது.

நல்ல குருநாதரிடம் உபதேசம் பெற்று இறை வழிபாடு செய்பவர்களுக்கு மட்டுமே அறியாமை நீங்கி நல்லறிவும், இறையருளும் கிடைக்கும். இதற்கு பெயர் தான் தீட்சை பெறுவது.

தீட்சை பெறுவதற்கான அடிப்படை தகுதிகள் தீய பழக்கங்களை விட்டொழிதல், தீய செயல்களை செய்யாமல் இருத்தல் போன்றது.

தீட்சை பொருள்:

தீ என்றால் நெருப்பு. இதனை தான் கடவுள் என்று கூறுகிறார்கள். சிவத்தில் என்ற வார்த்தையில் சி என்பது நெருப்பினை குறிக்கிறது. சக்தியின் பார்வையில் கடைசி எழுத்துக்கள் நெருப்பினை குறிக்கிறது.

நெருப்பு மட்டும் இல்லையென்றால் இந்த உலகில் எந்த உயிர்களும் தோன்றாது. தீட்சை என்பதற்கு நெருப்பால் செய்யப்படும் செய்முறை என்று பொருளாகும்.

தீட்சை விளக்கம்:

தச தீட்சை, முப்பு தீட்சை, சிவ தீட்சை இவை அனைத்தும் தீயை பயன்படுத்தி செய்யப்படும் செய்முறைகள் என அகத்தியர் பெருமான் கூறுகிறார்.

மனிதன் இறைநிலையை அடைவதற்கு மந்திரக்கலை, தந்திரக்கலை, உபதேசக்கலை போன்ற மூன்று படிநிலைகள் இருக்கிறது.

முத்திரைகளையும், யந்திரங்களையும் செய்யும் பயிற்சிகள் தந்திரக்கலை ஆகும். இதை போதிக்கும் குருமார்கள் ஞானகுரு ஆவார்கள். இந்த ஞானகுருக்கள் தான் தன்னுடைய சீடர்களுக்கு உண்மையான தீட்சைகளை வழங்குகிறார்கள்.

சுப யோகங்கள் மற்றும் அவற்றின் பலன்கள்

தீட்சை வகைகள்:

  • பரிச தீட்சை
  • நயன தீட்சை
  • பாவனா தீட்சை
  • வாக்கு தீட்சை
  • யோக தீட்சை
  • நூல் தீட்சை

பரிச தீட்சை:

ஞானகுரு தனது திருக்கரத்தினால் தன் சீடருடைய நெற்றியில் தொட்டு, மூலதாரத்தில் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி ஆற்றலை மேல் நிலையில்– புருவ மத்தியிலும், தலை உச்சியிலும் – நிலை நிறுத்துவதே பரிச தீட்சையாகும்.

நயன தீட்சை:

ஞானகுரு தன்னுடைய திருக்கண்களால் சீடரின் கண்களைப் பார்த்து புறத்தில் செல்லக்கூடிய சீடரின் மனத்தை, அகத்தில் பார்க்க அருளுவதே நயன தீட்சையாகும்.

பாவனா தீட்சை:

ஞானகுரு தன்னுடைய சீடர்களையும் தன்னை போன்றே உடல் உணர்வு நிலையை விட்டு, உயிர் உணர்வில் நிலைக்கச் செய்து, எண்ணமற்ற மோனநிலையாம் ஆனந்தப் பெருவெளியில் நிலைக்க வைப்பதே பாவனா தீட்சை ஆகும்.

யோக தீட்சை:

ஞானகுரு தன் அருளால் அகார, உகார, மகார, சிகார, வகார நிலைகளை உணர்த்துவதே யோக தீட்சையாகும்.

வாக்கு தீட்சை:

ஞானகுரு, ஞானிகள் அருளிய திருமறைக் கருத்துகளையும், தான் தனக்குள் மெய்ஞான அனுபவமாக உணர்ந்ததையும், இறைத்தன்மையில் நிலைத்து நின்று, உள்ளன்போடு கேட்கும் சீடர்களுக்குச் சொல்லி, அவர்தம் உணர்வில், உயிரில், ஆன்மாவில் கலந்து, ஞான அதிர்வுகளை உருவாக்கி, என்றென்றைக்கும் வழிநடத்துவது வாக்கு தீட்சையாகும்.

நூல் தீட்சை:

நூல் தீட்சையானது சரியை, கிரியை, யோக மார்க்க நூல்களை அகற்றி, ஞானத்திற்காக மட்டும் மெய் உணர்ந்த அருள் ஞானிகள் அருளிய திருமறைகளையும், அவர்கள் அனுபவித்த பேரானந்த அனுபவங்களையும், அதன் வழி நடக்கும் போது ஏற்படும் நிறைவான அனுபவ கருத்துக்களையும் நூலாக்கி சீடர்களுக்கு வழிகாட்டும் நூலாக அருள்வது நூல் தீட்சையாகும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்