தேங்காய் உடைப்பதன் தத்துவம்
அனைத்து நல்ல உள்ளம் கொண்ட என் அன்பு நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் தேங்காயை உடைப்பதற்கு முன் குடுமியை பிரித்துவிட்டால் என்ன ஆகும் என்பது தான் இந்த பதிவும். முன் இருந்த காலத்தில் யார் தேங்காய் உடைத்தாலும் அதில் உள்ள குடுமியை பிறக்க மாட்டார்கள். அதனை இரண்டாக உடைத்தால் மட்டுமே அதன் பின் தனியாக பிரிப்பார்கள். ஆனால் இப்போது இருக்கின்ற காலகட்டத்தில் யார் தேங்காய் உடைக்கும் முன்பே பிரித்து தூக்கி வீசி விடுவார்கள். ஆனால் அது தவறு இனி யாரும் அப்படி செய்யமாட்டார்கள். இந்த பதிவை படித்து பாருங்கள் இனி யாரும் அப்படி செய்ய மாட்டிர்கள்.
தேங்காயின் ஏன் குடுமியை பிரிப்பதில்லை தெரியுமா:
தேங்காயின் குடுமி பிற்காததிற்கு நிறைய கேள்விகள் உள்ளது அதில் முக்கியமாக சொல்வது ஒன்று தான் தேங்காய் நீண்டநாட்கள் வரை இருக்க வேண்டும் என்பதற்காக தேங்காய் நாரை பிரிக்கமாட்டார்களாம் என்ற காரணமும் உள்ளது அதேபோல் தேங்காயின் நார்களை பிரித்துவிட்டு பார்த்தால் அதில் உள்ள மூன்று துளைகள் காணப்படும்.
அது அப்படி வெளியில் காணப்பட்டால் விரையில் கெட்டுப்போகவும் வழிசெய்கிறது. அதேபோல் தென்னை மரத்திலிருந்து கீழ் விழும் போது நார்கள் இல்லையென்றால் தேங்காய் சிதறி விடும். அதனாலும் அப்படி உள்ளது என்று சொல்கிறார்கள். அனைத்துமே இயற்கையின் விசித்திரம் தான் காரணம்.
தேங்காய் உடைக்கும்போது எப்படி உடைந்தால் என்ன பலன் தெரியுமா.?
எந்த கடைகளிலும் தேங்காயை குடுமில்லாமல் பார்த்திருக்க வாய்ப்புகள் இல்லை இதற்கு இரண்டு காரணம் மேற்கூறப்பட்டுள்ளது. அதேபோல் இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது. கிராமபுறத்தில் அல்லது பாட்டி தாத்தா இருவரும் அல்லது நமக்கு பெரியவர்கள் நாம் தேங்காய் உடைக்கும் போது குடுமியை பிரித்துவிட்டு தேங்காயை உடைத்து விட்டோம் என்றால் அவ்வளவு தான் உடனே நமக்கு அவ்வளவு திட்டு விழும் என்று அதனை வாங்கி கொண்டவர்களுக்கு மட்டுமே தெரியும்.
அதற்கு காரணம் அப்படி மூன்று துளைகள் கொண்டு யாரும் பூஜைக்கு படைக்க மாட்டார்கள். அதேபோல் அப்படி பார்த்தால் அது கெட்ட சகுனம் என்று சொல்வார்கள்.இனியாரும் அப்படி செய்ய மாட்டிர்கள் என்று நம்புகிறேன். தேங்காய் குடுமி பிரிக்கலாம் ஆனால் அது தேங்காயை இரண்டாக உடைத்த பின் மட்டுமே அப்படி செய்ய வேண்டும். ஓகே நன்பர்களே அடுத்து பயனுள்ள தகவல்களோடு உங்களை சந்திக்கிறேன்.
ஏதேனும் ஆன்மீக தகவலை தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தேங்காய் எண்ணெய் நீண்ட காலம் கெடாமல் சேமித்து வைப்பதற்கான டிப்ஸ்..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |