பணம் பெருக பரிகாரம்
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. வசம்பு பொதுவாக வாசனை நிறைந்த பொருள். இதனை நமது வீட்டில் வைத்திருந்தாலே எதிர்மறை ஆற்றல்கள் விலகி நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கும். மேலும் மாட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். சரி இந்த வசம்புடன் சில பொருட்களை சேர்த்து அரிசி வைக்கும் பானையில் வைப்பதன் மூலம்.
நமது வீட்டில் இதன் மூலம் நமது வீட்டில் தானிய விருத்தி அதிகரிக்கும், தானிய விருத்தி அதிகரித்தால் அதன் பிறகு தனவிருத்தி அதிகரிக்கும், தனவிருத்தி அதிகரித்தால் நமது வீட்டில் ஐஸ்வரியம் பெருகும். மேலும் இதனால் பணம் வரவும் அதிகரிக்கும். ஆக இப்பொழுது சொல்ல இருக்கும் பரிகாரத்தை மட்டும் செய்தால் போதும் அதன் பிறகு ஒரு சில வாரங்களிலேயே நீங்கள் அதற்கான பலன்களை கண்கூட உணர்வீர்கள்.
செல்வம் பெருக பரிகாரம்:
தேவையான பொருட்கள்:
- வசம்பு – ஒரு துண்டு
- கல் உப்பு – ஒரு கைப்பிடியளவு
- கொட்டை பாக்கு – 18
- ஏலக்காய் – 18
- ஒரு ரூபாய் நாணயம் – 18
- வெள்ளை துணி – 1
பணம் பெருக பரிகாரம் செய்முறை:
ஒரு சுத்தமான வெள்ளை துணியை விரித்துக்கொள்ளுங்கள், அவற்றில் மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் வைத்து ஒரு மூட்டை போல் கட்டிக்கொள்ளுங்கள்.
பிறகு நாத மூட்டைக்கு மஞ்சள் குங்குமம் இடவேண்டும்.
பிறகு அந்த மூட்டையை பூஜை அறைக்கு எடுத்து செல்லுங்கள், இப்பொழுது பூஜை அறையில் இரு இடத்தில் வைத்து உங்கள் விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என்று உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வங்களில்டம் வேண்டி கொள்ளுங்கள், இறுதியக குபேரரை மனதில் நினைத்து வீட்டில் செல்வம் வளம் பெருக வேண்டும் என வேண்டிக்கொள்ளுங்கள். பின் அதற்கு சாம்பிராணி காட்டுங்கள். இவ்வாறு பத்து நாட்கள் இந்த மூட்டையை பூஜை அறையில் வைத்து வேண்ட வேண்டும்.
பத்து நாள் கழித்து இந்த மூட்டையை அரசி கொட்டிக்கிவைக்கும் பானையின் அடிபக்கத்தில் வைத்துவிடுங்கள்.
அவ்வளவு தான் இந்த பரிகாரத்தை செய்த ஒரு 2 மாதங்களுக்குள் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க கூடும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |