பாவம் செய்தவர்களுக்கு சிவனிடம் மன்னிப்பு கிடையாது
பொதுநலம்.காம் வாசகர்களே வணக்கம் இன்று ஆன்மீக பதிவில் பாவம் செய்தவர்களுக்கு சிவனிடம் மன்னிப்பு இல்லை என்பதை பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக பாவம் பண்ணியவர்கள் அந்த காலத்தில் அடுத்த ஜென்மத்தில் பிறந்து இந்த காலத்தில் செய்யும் பாவங்களை அனுபவிப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால் இந்த காலத்தில் உடனே அதற்கான விளைவுகளை பார்க்கிறோம். நீ தெரியாமல் செய்யும் தவறுகளை உனக்கே மறுமுறை அது போல் விளைவதை பார்க்கிறோம் கண் முன்னாடி. முற்பகல் செய்யும் பிற்பகல் விளையும் என்பது அடிக்கடி வீட்டில் சொல்ல கேட்டிருப்போம். அது போல் இது மாதிரியான பாவத்திற்கு சிவனிடம் மன்னிப்பு இல்லை என்பார்கள் அதனை பற்றி இப்போது பார்க்கலாம்.
சிவன் தமிழ் பெயர்கள் |
பாவம் செய்தால் என்ன:

- அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்பட்டு அவரை இழிவாக பேசி பணத்தை அடைவது. அவரின் சொத்துக்களை வாங்கிக்கொள்வது மகா பாவத்தில் அடங்கும்.
- ஒரு பெண்ணின் மீது அவள் உரிமை இல்லாமல் ஆசை படுவது தவறு. அதை விட இன்னொருவர் மனைவி மீது ஆசை படுவது தவறு மிகவும் பெரிய தவறு என்று சொல்கிறார்கள் இதற்கு சிவனிடம் மன்னிப்பே இல்லை.
- உங்களின் சுயநலத்திற்காக ஏழை மனிதர்களின் கனவை அளிப்பது, அவர்கள் மீது இல்லாத குற்றத்தை சொல்வது செய்யாத குற்றத்திற்காக தண்டனை அனுபவிப்பது இது போன்ற தவறுகளை செய்பவர்களை சிவனின் மூன்றாவது கண்களிருந்து தப்பிக்க முடியாது.
- பெண்கள் மாதவிடாய் நாட்களில் அவர்களை தவறுதலான வார்த்தைகளில் பேசுவது, கர்ப்பிணி பெண்களிடம் கொடுமை படுத்துவது அவர்களின் ஆசையை அவமதிப்பது போன்ற பாவத்தை செய்பவர்களுக்கு மன்னிப்பு கிடையாது.
- பேசுவதற்கு சங்கடமான செய்திகளை அனைவரிடத்திலும் சொல்வது. தவறான செய்திகளை மற்றவர்களிடம் சொல்வது இந்து போன்ற செயல்களை செய்பவர்களை சிவனின் கடுமையான கோவத்திற்கு ஆளாகுவார்.
- ஒருவரின் சாதாரண செயலாக இருந்தாலும் அதன் மூலம் இன்னொருவரின் வாழ்க்கை நாசமாக ஆகும். அது பெரிய பாவத்தில் சேரும். இது மன்னிக்க முடியாத குற்றத்தில் சேரும்.
- சில உயிரினங்களை சாப்பிடக்கூடாது என்று இந்து சமயம் சொல்கிறது அதனையும் மீறி சாப்பிடுவது. உதாரணமாக மாட்டை சாப்பிடுவது இது போன்ற உயிரினங்களை சாப்பிடுவது பெரிய பாவம் என்று சொல்கிறது இதற்கு மன்னிப்பு இல்லை.
- குழந்தைகள் என்று பாராமல் கொடுமைபடுத்துவது, அவர்களிடம் அவைமுறையில் ஈடுபடுவது. அவர்களை எதிரியாக பார்ப்பது. பெண்களுக்கு எதிராக செய்யக்கூடிய பாவத்திற்கு மன்னிப்பே இல்லை என்று கூறப்படுகிறது.
- பெரியவர்கள், தாய், தந்தை ஆசிரியர்களிடம் தரம் குறைந்து நடந்துகொள்வது அவர்களிடம் மரியாதையின்றி நடந்துகொள்வது, அவர்களை துன்புறுத்துவது போன்ற செயல்களை செய்தவருக்கு சிவனின் கடும் கோவத்திற்கு ஆளாகுவீர்கள்.
- தவறான வழியில் பணம் மற்றும் சொத்துக்களை சேர்ப்பது தானமாக கொடுத்ததை மீண்டும் பெற்றுக்கொள்வது சிவனின் பாவ கணக்கில் அடங்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |