புரட்டாசி மாதம் முதல் நாள் இந்த வழிபாடு செய்தால் அனைத்து செல்வங்களையும் அளித்தருகிறார் பெருமாள்

Advertisement

புரட்டாசி முதல் நாள் | Purattasi 1st Day Worship Method in Tamil

நண்பர்களே வணக்கம்.. இன்றைய ஆன்மீக பதிவில் புரட்டாசி மாதம் விரதம் பற்றி தெரிந்திருப்போம்..! இன்று புரட்டாசி முதல் நாள் என்ன வழிபாடு செய்யவேண்டும் என்று தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக புரட்டாசி முதல் சனிக்கிழமையில் தான் வழிபாடு செய்வார்கள். அது என்ன புரட்டாசி முதல் நாள் வழிபாடு..! அப்படி என்ன இதற்கு இருக்கிறது இதை ஏன் செய்ய வேண்டும் இதற்கு என்ன பலன் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க..!

புரட்டாசி முதல் நாள் வழிபாடு:

  • புரட்டாசி மாதம் அனைவருமே பெருமாளை வழிபடுவார்கள். அந்தக்காலத்தில் மன்னர்கள் வழிபடுவது என்பது வித்தியாசமாக இருக்கும். அப்போது தொண்டைமான் என்ற மன்னர் பெருமாளை தினம் தோறும் பூஜித்து வந்தார். சாதாரண மனிதன் அனைவரும் பூக்களை மாலையாக செய்து பெருமாளை வழிப்பட்டு வருவார்கள், என்றால் மன்னர் எப்படி வழிபாடு செய்வார்கள் என்று யோசித்து பாருங்கள்.
  • தொண்டைமான் அன்றாடம் செய்கிற பூஜையில் அனைத்துவிதமான பூக்களையும் வைத்து வழிபாடு செய்கிறார் அதேபோல் தங்கம், வெள்ளி, ஐம்பொன் போன்றவற்றால் செய்த மலர்களை வைத்து தினம் தோறும் வழிபட்டு வந்தார்.
  • தினம் தோறும் தங்கத்தால் செய்த பூக்களை பெருமாளுடைய காலடியில் வைத்து வழிபாடு செய்யும் போது களிமண்ணால் செய்த பூக்கள் வந்து கீழ் விழுகிறது. அப்போது தொண்டைமானுக்கு ஒரே குழப்பம் வருகிறது, அன்று பூஜையை முடித்துவிட்டு பெருமாளிடம் நான் என்ன தவறு செய்தேன் எதற்காக இதுபோல் செய்தாய் என்று கேட்டு முறையிட்டார். எனக்கு பதில் கூறு இல்லையென்றால் கனவில் வந்தாவது கூறிவிடு என்று சொல்லிவிட்டு உறங்குகிறார்.
  • அவருடைய கனவில் வந்து உன்னுடைய பூஜையில் எந்த ஒரு தவறும் இல்லை. உன்னைப்போல் ஒருவருடைய பூஜையில் உள்ள பூக்கள் வந்த விழுந்தது. வேண்டுமென்றால் அங்கு சென்று தெரிந்துகொள் சொல்லிவிட்டார் அவரும் தூக்கத்திலிருந்து எழுந்துவிட்டார்.
  • மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த மனிதனை பார்க்க செல்கிறான். அப்போது அங்க இருந்த குயவன் அவனுடைய பெயர் பீமன், அவனுடைய மனைவி இருவரும் பெருமாளுக்கு களிமண்ணால் செய்த பூக்களை செய்து மனம் உறுகி உன்னை பார்க்க  எங்களுக்கு எப்போது அருள் தரப்போகிறாய் என்று நினைத்து வணங்கிவிட்டு அவருடைய அன்றாட வேலைகளை பார்க்க செல்கிறார்கள். அப்போது அங்கு மன்னர் வருகிறார். இதனை கண்ட மன்னர் இதற்கு தான் அப்படி செய்தயா என்று நினைத்துவிட்டு இருக்கும்போதே.
  • வானத்திலிருந்து விமானம் போல் ஒன்று வருகிறது அதிலிருந்து வந்த தேவர் எம்பெருமாளை பார்க்க வைகுண்டத்திற்கு அழைக்கிறார் என்று சொல்லிவிட்டு அழைத்து செல்கிறார். உடனே மன்னர் என்னையும் உன்னை பார்க்க அழைக்க மாட்டாயா? என்று கேட்டார்.
  • அதற்கு பெருமாள் காட்சியளித்து. உனக்கான நேரம் வரும் போது உனக்கு அழைப்பு வரும் அதுவரை உன்னுடைய கடமைகளை செய் என்று சொன்னார்.
  • இதன் வாயிலாக பெருமாளுக்கு தேவையானது பொருட்கள் அல்ல அன்பும், பக்தியும் தான் என்று மன்னர் அறிந்தார்.
  • ஆகவே நாம் வீட்டில் புரட்டாசி மாதம் பூஜைக்கு பூக்களை கொண்டு அவருக்கு பிடித்ததை வாங்கிவைத்து மனம் உருகி வழிபட்டால் பெருமாளுடைய அருள் கிடைக்கும். ஏதும் இல்லையென்றால். சிறிது கல்கண்டு வைத்து வழிபட்டால் போதும். நிச்சயம் உங்களுக்கு பெருமாளுடைய அருள் கிடைக்கும்.

புரட்டாசி மாதத்தில் எந்தெந்த காரியங்கள் செய்யலாம், செய்ய கூடாது என்று தெரியுமா.?

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement