மகாளய அமாவாசை அன்று மறந்தும் கூட இந்த தவறை செய்யாதீர்கள்..! பின்பு வருந்தாதீர்கள்

mahalaya amavasya 2022 in tamil

அமாவாசை அன்று செய்ய கூடாதவை

ஆன்மீக அன்பு நண்பர்களுக்கும்..! எங்களின் அன்பான நண்பர்களுக்கும் அழகான வணக்கம்..! இன்றைய பதிவில் மகாளய அமாவாசை அன்று சில விஷயங்ககளை செய்து விடுவார்கள். அதேபோல் நிறைய விஷயங்களை சிலர் மஹாளய பட்சம் என்று செய்து விட்டு அதன் மூலம் நிறைய விதமான கஷ்டங்களையும் தோஷங்களையும் பின் விளைவாக பெறுவார்கள். இந்த மாதிரியான விஷயங்களை செய்து விடலாம். இதனை மட்டும் செய்யாதீர்கள் என்று முன்கூட்டியே உங்களுக்கு நியாபகம் செய்து அதனை செய்யாமல் பார்த்துக் கொள்வீர்கள் அல்லவா அதனால் உங்களுக்காக இந்த பதிவு..!

அமாவாசை அன்று செய்ய கூடாதவை:

அமாவாசை இறந்த முன்னோர்கள் வீட்டின் முன் நிற்பார்கள் அப்போது நாம் அவர்களுக்கு எள்ளு தண்ணீர் கொடுத்தால் அவர்கள் மனம் குளிர்ந்து நம்மை ஆசிர்வதித்து செல்வார்கள். அப்படி செய்யவிட்டால் அவர்களின் சாபத்திற்கு ஆளாகுவீர்கள் பித்ரு தோஷம் அடையும்.

அதேபோல் இயற்கையாக மரணம் அடைந்தவரை தவிர கொலை, தற்கொலை, விபத்து மற்றும் அகால மரணங்களுக்கு முறையான கர்ம காரியங்களை செய்யவேண்டும். அப்படி செய்யாமல் விடுவதன் மூலம் பல விதமான தோஷங்கள் ஏற்படுகின்றன. இது ஜாதக கட்டங்களின் அமர்கிறது. இதனால் நம்மை மட்டும் இல்லாமல் நம் வம்சத்தையும் பாதிக்கிறது. அதாவது திருமண தடை, குழந்தையின்மை வேலையின்மை,  தீராத கடன் பிரச்சனை போன்ற நிம்மதியற்ற வாழ்கையாகவே இருக்கும்.

எள்ளு தண்ணீர்:

மகாளய பட்சம் அன்று செய்யக்கூடாதவை

இந்த மஹாளய பட்சத்தில் ஐயரை வைத்து முன்னோர்களை வழிபட்டு எள் தண்ணீர் தர்ப்பணம் கொடுத்தால் குடும்பத்தில் ஏற்படும் பல பிரச்சனைகள் குறையும். அதேபோல் தோஷங்கள் தீர்ந்துவிடும்.

மகாளய பட்சம் பலன்கள்:

  • பிரதமை – செல்வம் சேரும்
  • துவிதியை – ஒழுக்கமான குழந்தைகள் பிறக்கும்
  • திரிதியை – நினைத்த அனைத்தும் நிறைவேறும்
  • சதுர்த்தி – எதிரிகளிடமிருந்து தப்பித்துகொள்வீர்கள்
  • பஞ்சமி – சொத்து சேரும்
  • சஷ்டி – புகழ்ச்சி வந்து சேரும்
  • சப்தமி – பதவி பெறலாம்
  • அஷ்டமி – சமயோசித புத்தி பெறலாம்
  • நவமி – பெண் குழந்தைகள் பிறக்கும், திருமண தடை நீங்கும்.
  • தசமி – நீண்ட நாள் ஆசை நிறைவேறும்
  • ஏகாதசி – கல்வி, கலை வளர்ச்சி, விளையாட்டில் திறன் சிறக்கும்
  • துவாதசி – நகைகள், ஆடைகள் சேரும்
  • திரயோதசி – விவசாயம் செழிக்கும், பசுக்கள் விருத்தியாகும், ஆயுள், அரோக்கியம் கூடும்
  • சதுர்த்தசி – பாவம் நீங்கி, தலைமுறைகளுக்கு நன்மை சேரும்.
  • மகாளய அமாவாசை – முன் சொன்ன அத்தனை பலன்களும் கிடைக்கும்.

அமாவாசை அன்று செய்ய கூடாதவை:

மஹாளய பட்சம் விரதம் இருப்பவர்கள் 15 நாட்கள் விரதம் இருக்கவேண்டும். அதாவது 15 நாட்களும் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

குப்பைகளை சேர்த்து வைத்துக்கொள்ள கூடாது. முக்கியமாக மாமிச உணவுகளை வீட்டிலோ அல்லது விரதம் இருப்பவர்கள் சாப்பிடக்கூடாது செய்யவும் கூடாது.

மஹாளய விரதம் இருப்பவர்கள் தாம்பத்ய உறவில் ஈடுபடக்கூடாது. உணவில் வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்றவற்றை சேர்க்கக்கூடாது. தேவையில்லாத வீண் விவாதம், சண்டைகளை தவிர்க்கவேண்டும். அதன் பின் மஹாளய பட்சம் அன்று முன்னோர்களை நினைத்து வணங்கினால் நிம்மதியும் சந்தோஷமும் நிலைத்திருக்கும்.

மகாளய அமாவாசையில் செய்ய வேண்டிய முக்கிய வழிபாடுகள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்