மகாளய அமாவாசையில் செய்ய வேண்டிய முக்கிய வழிபாடுகள் | Mahalaya Patcham 2022 Tamil

Mahalaya Amavasya 2022 in Tamil

மகாளய அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும்? | Mahalaya Amavasya 2022 in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய ஆன்மிகம் பகுதியில் மஹாளய அமாவசை எப்போது மற்றும் அதற்கான வழிபாடு முறையை பற்றி தெரிந்து கொள்வோம். நம் முன்னோர்களை வணங்குவதற்கு மிக முக்கியமான நாள் என்றால் அமாவசை அதிலும் குறிப்பாக ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்றும் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இப்போது வரவிருக்கும் மஹாளய அமாவசை எப்போது மற்றும் அந்த நாளில் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க.

மகாளய பட்சம் 2022:

முன்னோர்களின் வழிபாடுகளுக்கு மிக முக்கியமான நாளான மஹாளய அமாவசை 11.09.2022-ம் தேதி முதல் 25.09.2022-ம் தேதி வரை மகாளய பட்சம் இருக்கும்.

மகாளய பட்சம் என்றால் என்ன?

 • ‘மகாளயம்’ என்றால் ‘பெரிய கூட்டம் என்று பொருள்’.  நம் பித்ருக்கள் மொத்தமாக நம் இல்லத்தில் வந்து இருப்பதையே மகாளய பட்சம் என்கிறோம். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். முன்னோர் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாள்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும்.
 • ஆவணி பெளர்ணமிக்கு அடுத்த நாள் முதல் புரட்டாசி அமாவாசை வரையிலான 15 நாட்களே மகாளய பட்சம் என அழைக்கப்படுகிறது.
 • இந்த 15 நாட்களான புண்ணிய தினத்தில் எந்த நாட்களில் வேண்டுமானாலும் தர்ப்பணம் கொடுக்கலாம். இதனால் நம் முன்னோர்களின் ஆசி மற்றும் இறைவனின் ஆசி கிடைப்பது நிச்சயம். நம்முடைய பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வாக இந்த வழிபாடு இருக்கும்.

மகாளய அமாவாசை வழிபாடு

தண்ணீர்:

mahalaya amavasya in tamil

Mahalaya Amavasya in Tamil: உங்கள் வீட்டின் வாசலில் தண்ணீர் வைக்க வேண்டும். இந்த தண்ணீரை நீங்கள் பதினைந்து நாட்களும் மாற்ற வேண்டும். காலையில் வைக்கும் தண்ணீரை மறுநாள் செடிக்கு ஊற்றி விடலாம். தாகத்தில் இருப்பவர்களுக்கும் தண்ணீர் கொடுப்பது நல்லது.

முன்னோர்களின் சாபம் நீங்க பரிகாரம்..!

தானம் அளித்தல்: 

மகாளய அமாவாசை 2022

 • கருப்பு உளுந்து, கருப்பு எள், உப்பு, உடைகள், வெல்லம், பார்லி போன்ற உணவு பொருட்களை மற்றவர்களுக்கு தானம் கொடுத்தால் நல்லது, இதனால் நம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.
 • பசு, நாய், பூனை, காகம் மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்தால் நல்லது நடக்கும். நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தீர்வதற்கு உதவியாக இருக்கும்.

முன்னோர்களை வணங்குவது:

மஹாளய பட்சம் தர்ப்பணம்

 • குல தெய்வ வழிபாடு, இறைவனை வழிபட வேண்டும். அதே போல் முன்னோர்களை வணங்கி தர்ப்பணம் கொடுப்பது மிகவும் நல்லது. நம் வாழ்க்கை வளம் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.
 • முன்னோர்களின் படம் வைத்து விளக்கு ஏற்றி வழிபட்டால் உங்களுக்கு மன அமைதியும், ஆசீர்வாதமும் கிடைக்கும்.

மகாளய பட்சம் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்:

 1. தினமும் குளித்து சுத்தமாக இருக்க வேண்டும்.
 2. முன்னோர்களை வழிபட்ட பின்னரே, பூஜைகளை செய்ய வேண்டும்.
 3. உணவில் பூண்டு, வெங்காயம், சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
 4. சைவ உணவை மட்டுமே சாப்பிட வேண்டும்.
 5. தாம்பத்யம் வைத்துக் கொள்ளக் கூடாது.
 6. மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்கள் நம்முடன் வசிப்பதால் கேளிக்கை
 7. நிகழ்வுகளை தவிர்த்து, அவர்களை நினைவு கூற வேண்டும்.
 8. தினமும் தர்ப்பணம் செய்த பின்னர் பூஜைக்கான விளக்கை ஏற்றி வழிபட்டு அன்றாட
 9. பணிகளை தொடங்க வேண்டும்.
அமாவாசை நாட்கள் நேரம்

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்