மகா சிவராத்திரி 2022 தேதி | 2022 Maha Shivaratri Date & Time

மகா சிவராத்திரி 2022 எப்போது?

ஆன்மீக நண்பர்களுக்கு அன்பான வணக்கங்கள்.. நாளை மகா சிவராத்திரி சிவபெருமானை வணங்கும் பக்தர்கள் நாளைய நாள் முழுவதும் கண் விழித்து மனமுருக வணங்கி வழிபடுவார்கள். சரி இந்த பதிவில் மஹா சிவராத்திரி அன்று நாம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன. மகா சிவராத்திரி அன்று பூஜை செய்வதினால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை பற்றி படித்தறியலாமா..

மகா சிவராத்திரி வழிபாடு:

இந்த மகா சிவராத்திரி மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி தினத்தில் இந்துக்களால் கொண்டாடப்டும் விழாவாகும். அந்த வகையில் நாளை மகா சிவராத்திரி உலகமுழுவதும் உள்ள சிவபக்தர்கள் நாளை சிவபெருமானை மிகவும் சிறப்பாக வழிபடுவார்கள்.

மகா சிவராத்திரி

இந்த நாளில் நீங்கள் சிவலிங்கத்திற்கு அபிஷேக, அலங்காரம், சிறப்பு பூஜை செய்து வழிபடலாம். இவ்வாறு தங்காளால் செய்ய முடியாவிட்டாலும், அருகில் உள்ள சிவன் ஆலயத்தில், அன்றைய தினம் நடக்கும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்ளுங்கள். பூஜைக்குரிய பொருட்களை வாங்கித் தருவது உத்தமம். அன்றைய தினம் இரவில் தூங்காமல் கண் விழித்து சிவ பெருமானுக்கு நடக்கும் அபிஷேக, அலங்கார, பூஜை ஆராதனைகளைக் கண்டு பயனடையுங்கள்.

மகா சிவராத்திரி எப்போது?

இந்த 2022 ஆண்டு, மகா சிவராத்திரிக்கான உகந்த நாள் மார்ச் 1 செவ்வாய்கிழமை அதிகாலை 3.16 மணிக்கு தொடங்குகிறது. சதுர்த்தசி திதி மார்ச் 2 புதன்கிழமை காலை 10 மணிக்கு முடிவடைகிறது. மகா சிவராத்திரி பூஜை நான்கு கட்டங்களாக அனுசரிக்கப்படுகிறது.

சிவபெருமானை மகா சிவராத்திரி அன்று நான்கு நிலைகளில் வழிபடுவதற்கான மங்களகரமான நேரம்:

முதல் கட்ட பூஜை:

  • மார்ச் 1ஆம் தேதி மாலை 6.21 மணி முதல் இரவு 9.27 மணி வரை

இரண்டாம் கட்ட பூஜை:

  • மார்ச் 1ஆம் இரவு 9.27 முதல் நள்ளிரவு 12.33 வரை

மூன்றாம் கட்ட பூஜை:

  • மார்ச் 2ஆம் தேதி நள்ளிரவு 12:33 மணி முதல் 3.39 மணி வரை

நான்காம் கட்ட பூஜை:

  • மார்ச் 2ஆம் காலை 3:39 முதல் 6:45 வரை

மகா சிவராத்திரி தினத்தில் என்ன செய்ய வேண்டும்?

சிவராத்திரியன்று நாம் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால் நாம் செய்த பாவங்கள் நீங்கி, நமக்கு முக்தி கிடைக்கும் என பக்தர்களினால் நம்பப்படுகிறது.

பிரதோஷம் நாட்கள் 2022
மாத சிவராத்திரி 2022

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்