மல்லிகை பூ ஒன்று போதும் உங்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரும்..!

malligai poo parikaram

பணம் வரவை அதிகரிக்க மல்லிகை பூ பரிகாரம்

பணம் இல்லாத உலகத்தைப் பற்றி நினைப்பது கடினம். மனித வாழ்க்கையின் அனைத்து சம்பவங்களையும் பணம் எனும் காகிதமே நிர்ணயிக்கிறது. மனித வாழ்வின் அன்றாட தேவைகளான உணவு, உடை இருப்பிடம் போன்ற அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யும் வாழ்வாதார சக்தியாக பணம் விளங்குகிறது. அதனால் தான் “பணம் பத்தும் செய்யும் ” என்று கூறி வைத்தார்கள்.

இதன் காரணமாகவே ஆன்மிகம் ரீதியாக பலர் பணம் வரவை அதிகரிக்க பலவகையான பரிகாரங்களை செய்து வருகின்றன. பணம் வரவை அதிகரிக்க ஒரு ரகசியத்தை பற்றி தான் இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்ள போகிறோம். அந்த பரிகாரம் வேறு ஒன்று இல்லை மல்லிகை பூவை வைத்து தான் செய்ய போகிறோம். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரும் சரி வாங்க அதனை எப்படி செய்யலாம் என்று இப்பொழுது பார்க்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மிளகுடன் இந்த பொருளை சேர்த்து வீட்டில் வைய்யுங்கள்.! கோடி கடனும் எளிதில் அடையும்.!

மல்லிகை பூ பரிகாரம்:

மல்லிகை பூ என்பது மிகவும் நறுமணம் வாய்ந்தது, குறிப்பாக அனைவரையும் மயக்கக்கூடிய வாசம் என்றும் சொல்லலாம்.

பொதுவாக எல்லாம் இருக்கிறது இருப்பினும் சரியான நேரம் வரவில்லை, சரியான சுக்கிரன் திசை வரவில்லை என்று சொல்வார்கள் இதற்கு என்ன காரணம் என்றால் நமது கைகளில் உள்ள சக்கரம் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஆக நாம் நினைக்கும் காரியங்கள் நிறைவேற, செல்வ வளம் அதிகரிக்க, கோடீஸ்வர யோகம் கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

உங்களுடைய இடது கையில் மல்லிகை பூவை வைத்து கொள்ளுங்கள் அந்த மல்லிகை பூவின் மேல் பணம் அல்லது வெள்ளி அல்லது தங்கம் அல்லது உங்கள் மனதில் உள்ள காரியம் நிறைவேற வேண்டும் என்று மா இலையில் அல்லது வெள்ளை காகிதத்தில் ஊதா நிற இங்கில் எழுதி மல்லிகை பூவின் மேல் வைக்கவும்.

பின் உங்கள் வலதுகையை வைத்து மூடிக்கொண்டு கண்களை மூடி உங்களுக்கு என்ன காரியம் நிறைவேற வேண்டுமோ அந்த விஷயம் நிறைவேற வேண்டும் என்று கண்களை மூடி வெறும் மூன்று நிமிடங்கள் வேண்டிக்கொள்ளுங்கள்.

இவ்வாறு தினமும் செய்து வர நல்ல மாற்றம் உங்களுக்கே தெரியும். இது தவிர ஒரு சுத்தமான கண்ணாடி பவுலில் பணம் அல்லது காசு ஏதாவது ஒன்றை போட்டு அதன் மேல் மல்லிகை பூவை நிரப்பி உங்கள் வீட்டில் உள்ள பூஜை அறையில் வைக்கவும். இந்த மல்லிகை பூவை வாரத்தில் ஒரு முறை மட்டும் மாற்றினால் போதும். இவ்வாறு செய்து வர வீட்டில் செல்வவளம் அதிகரிக்கும். மேலும் உங்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வீட்டில் நீல நிற சங்கு பூ அல்லது வெள்ளை நிற சங்கு பூ இருந்தால் என்ன பலன்?

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்