மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம் | Mangalya Dosham Pariharam

Advertisement

மாங்கல்ய தோஷம் | Mangalya Dosham Pariharam

Mangalya Dosham Pariharam in Tamil: தோஷங்கள் ஏற்படுவதால் வாழ்க்கையில் நாம் பல இன்னல்களை சந்திக்கின்றோம். தோஷங்களில் களத்திர தோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம், ராகு, கேது தோஷம், மாங்கல்ய தோஷம் என பல தோஷங்கள் இருக்கின்றன. அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? அது எதனால் ஏற்படுகிறது? மாங்கல்ய தோஷத்தை நீக்குவதற்கான பரிகாரங்களை பற்றியெல்லாம் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க.

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? – Mangalya Dosham Effects in Tamil:

மாங்கல்ய தோஷம்

 • நாம் போன ஜென்மத்தில் பிறருக்கு செய்த துன்பம் தான் மற்றொரு ஜென்மத்தில் தோஷமாக வருகிறது.
 • பெண்களுக்கு சரியான வயதில் திருமணம் ஏற்படாமல் தடையை ஏற்படுத்தும் ஜாதகத்தின் நிலைகளையே மாங்கல்ய தோஷம் என்று கூறுகிறார்கள். மாங்கல்ய தோஷம் ஆணுக்கு ஏற்படுவதில்லை, பெண்களுக்கு மட்டுமே ஏற்படுகிறது.
 • பெண் திருமணமாகி இறந்து அந்த பெண்ணிற்கு சுமங்கலி பூஜை செய்யாமல் இருந்தாலும் மாங்கல்ய தோஷம் ஏற்படும்.
 • பெண்ணின் ஜாதகத்தில் எட்டாம் லக்னத்தில் இருப்பது மாங்கல்ய இடம். அந்த இடத்தில் ஞாயிறு, செவ்வாய், காரி (சனி), ராகு, கேது போன்ற கிரகங்கள் இருப்பதால் மாங்கல்ய தோஷம் ஏற்படுகிறது.
 • எட்டாம் இடத்தில் சுப கிரகங்கள் அல்லது குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி குறையும்.

மாங்கல்ய தோஷம் – மாங்கல்ய தோஷம் நிவர்த்தி:

 • மாங்கல்ய தோஷம் இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சி இருக்காது. மருமகள் மற்றும் மாமியார் இருவருக்கும் பிரச்சனைகள் ஏற்படும்.
 • பெண்ணின் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருந்து அந்த தோஷத்தை நிவர்த்தி செய்யாமல் இருந்தால் கணவனின் உயிருக்கு ஆபத்து நேரலாம்.
 • மாங்கல்ய தோஷம் திருமண தடையை ஏற்படுத்தி கொண்டே இருக்கும்.

Mangalya Dosham Pariharam – மாங்கல்ய தோஷம் எதனால் ஏற்படுகிறது?

 • இந்த தோஷம் உள்ளவர்கள் வீட்டில் அல்லது கோவில்களில் வெள்ளிக்கிழமை அன்று மஹாலக்ஷ்மி பூஜை செய்து திருமணம் ஆன சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், சீப்பு, பூ, பழம், வெற்றிலைப் பாக்கு, சந்தனம், ஜாக்கெட் போன்றவற்றை கொடுத்து, உணவளித்து அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும்.
 • சிறந்த பலன்களை பெறுவதற்கு வீட்டில் அல்லது கோயிலில் மிருத்யுஞ்சய ஹோமமும், ஜெபமும் செய்யலாம்.

மாங்கல்ய தோஷம் பரிகாரம் – Mangalya Dosham Pariharam:

 • சுமங்கலி பூஜை செய்தும் மாங்கல்ய தோஷத்தை நிவர்த்தி செய்யலாம். சுமங்கலி பூஜையை வீட்டிலோ அல்லது கோவிலிலோ செய்யலாம். இந்த பூஜைக்கு ஒரு புதிய தாலி வாங்கி அதனை மஞ்சள் கயிற்றில் கோர்த்து பூஜை செய்து பின் அந்த மாங்கல்யத்தை திருமணம் ஆன சுமங்கலி பெண் மாங்கல்ய தோஷம் உள்ள பெண்ணிற்கு கட்ட வேண்டும்.
 • இரண்டு மணி நேரம் அந்த தாலியை போட்டிருக்க வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து மாங்கல்யத்தை கழட்ட வேண்டும் (எந்த பெண் தாலியை கட்டினார்களோ அந்த பெண்ணே மீண்டும் தாலியை கழட்ட வேண்டும்)
 • தாலியை கழட்டிய பெண் குளித்து விட்டு உடுத்தி இருந்த உடையை வீசி விட்டு புதிய ஆடை அணிந்து கொள்ள வேண்டும்.
 • பின் மாங்கல்ய தோஷம் உள்ள பெண் அணிந்திருந்த தாலியை, மஞ்சள், குங்குமம், சீப்பு, பூ, பழம், வெற்றிலைப் பாக்கு, சந்தனம், புடவை வைத்து சீர்வரிசையாக குலதெய்வ கோவில் அல்லது உங்களுக்கு பிடித்த பெண் கடவுளுக்கு கொடுக்க வேண்டும். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை, அஷ்டமி, நவமி இல்லாத நாட்களில் செய்ய வேண்டும்.
 • திருமணம் செய்வதற்கு முன்னர் அல்லது திருமணம் ஆன பின்னர் ஏதும் தோஷங்கள் இருந்தால் அதை பரிகாரம் செய்து தீர்த்து விடுவது நல்லது.
சுக்கிர தோஷம் நீங்க பரிகாரங்கள்!!!

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement