2023 ஆம் ஆண்டு கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா..?

Advertisement

2023 Kadagam Rasi Palan

அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் 2023 ஆம் ஆண்டு கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். வரவிருக்கும் 2023 ஆம் ஆண்டு கடக ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன நன்மைகளை செய்ய போகிறது. அவர்களின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறப்போகிறது, அதுபோல வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நடக்கப்போகிறது என்பதை எல்லாம் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். வாங்க நண்பர்களே 2023 ஆம் ஆண்டு கடக ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கை பலனை பற்றி பார்ப்போம்..!

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 2023 ஆம் ஆண்டு இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப் போகிறது..! இதில் உங்கள் ராசி இருக்கா 

2023 கடக ராசி பலன்:

2023 கடக ராசி பலன்

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு சிறந்த ஆண்டாக இருக்க போகிறது. வரபோகும் 2023 ஆம் ஆண்டு நினைத்த காரியங்கள் நிறைவேறும் ஆண்டாக இருக்கும். இருந்தாலும் நீங்கள் ஒவ்வொரு செயல் செய்வதற்கு முன் சிந்தித்து செயல்பட வேண்டும். உங்களின் வாழ்க்கையில் சில நல்ல மாற்றங்கள் ஏற்படும். கடக ராசிக்காரர்களுக்கு சில சவால்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும். அதனால் கவனத்துடன் செயல்பட வேண்டும். அதுபோல இந்த 2023 ஆண்டு உங்களுடைய ஆசைகள் நிறைவேறி மகிழ்ச்சி காண்பீர்கள்.

கடக ராசி தொழில்: 

கடக ராசியில் பிறந்தவர்கள் 2023 ஆம் ஆண்டு தொழிலில் கொடிகட்டி பறப்பார்கள். இவர்கள் தொழிலில் சில நல்ல மாற்றங்கள் ஏற்படும். ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் உங்கள் எட்டாவது வீட்டிற்கு வருவதால் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.

அதுபோல ஏப்ரல் 22 அன்று குரு பகவான் உங்கள் பத்தாவது வீட்டிற்கு வருகிறார். அதனால் உங்கள் வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். குரு பகவானின் அதிர்ஷ்டத்தால் உங்கள் தொழிலில் வளர்ச்சி அடைவீர்கள்.

கடக ராசி காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்:

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு 5 ஆம் வீட்டில் செவ்வாயின் பார்வை படுவதால் காதல் வாழ்க்கையில் சில ஏற்ற இறக்கங்கள் காணப்படும். ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் பல பிரச்சனைகள் இருந்தாலும் குருவின் அருளால் அது நன்மையில் முடியும்.

ஜூன் மாதம் உங்கள் உறவில் சில சந்தோஷமான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். ஆண்டின் கடைசி மாதம் உங்கள் உறவில் காதல் அதிகரிக்கும். அதுபோல திருமணம் தொடர்பான விஷயங்களை பற்றி சிந்திப்பீர்கள்.

2023 ஆம் ஆண்டு விருச்சிக ராசிக்கு இப்படி தான் இருக்குமா?

திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்: 

இந்த 2023 ஆம் ஆண்டில் திருமணம் செய்யும் கடக ராசிக்காரர்கள் பல சவால்களை எதிர் கொள்வீர்கள். ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் உங்கள் ஏழாவது வீட்டில் சுக்கிரனுடன் இருப்பதால் உங்களின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

மே -யிலிருந்து ஜூலை மாதங்களுக்கு இடையில் செவ்வாய் உங்கள் ராசியில் பெயர்ச்சிக்கும் போது, ​​அந்த நேரம் உங்கள் திருமண வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகரிக்கும். இருந்தாலும் உங்களின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்களின் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.

கடக ராசி குடும்ப வாழ்க்கை: 

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து சில ஏற்ற தாழ்வுகள் நிறைந்த ஆண்டாக இருக்கும். ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை கேது 4 மற்றும் 10 ஆம் வீட்டில் இருப்பதால் உங்கள் குடும்ப வாழ்க்கையில் சில சவால்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். அதுபோல அக்டோபர் மாதம் முதல் உங்கள் குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

கடக ராசிக்காரர்களின் ஆரோக்கியம் எப்படி இருக்கும்:

கடக ராசியில் பிறந்தவர்களின் ஆரோக்கியம் தொடக்கத்தில் கொஞ்சம் பலவீனமாக இருக்கும். சனிபகவான் உங்கள் ராசியிலிருந்து எட்டாம் வீட்டிற்கு செல்வதால் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். அதனால் நீங்கள் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டு.!

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement