2023 Meenam Rasi Palan in Tamil
அனைத்து ஆன்மிக நண்பர்களுக்கும் இனிய வணக்கங்கள்..! இன்றைய பதிவில் 2023-ஆம் ஆண்டு மீன ராசிகர்களுக்கு எப்படி அமையும் என்று பார்க்க இருக்கின்றோம். வரவிருக்கும் 2023 -ஆம் ஆண்டு மீன ராசிகாரர்களின் வாழ்க்கையில் என்னென்ன நல்ல பலன்கள் கிடைக்க போகின்றது. மேலும் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட போகின்றது. அந்த மாற்றங்கள் நன்மைகளை அளிக்குமா.! தீமையை அளிக்குமா.! என்பதை பற்றியெல்லாம் இந்த பதிவில் விரிவாக காணலாம். சரி வாங்க நண்பர்களே 2023 -ஆம் ஆண்டு மீன ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கை பலனை பற்றி விரிவாக பார்க்கலாம்.
2023 ஆம் ஆண்டு இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப் போகிறது இதில் உங்கள் ராசி இருக்கா
2023 Meena Rasi Palan in Tamil:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு பல நன்மைகள் மற்றும் பல நல்ல பலன்களை அளிக்கக்கூடிய ஆண்டாக இந்த 2023-ஆம் ஆண்டு அமையும். வரவிருக்கும் 2023-ஆம் ஆண்டு நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். மேலும் வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும்.
நல்ல பலன்கள் எவ்வளவு அளவிற்கு நடக்கிறதோ அதே அளவிற்கு சில சவால்களையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும். அதனால் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.
மீன ராசி தொழில் எப்படி இருக்கும்:
2023-ஆம் ஆண்டு மீன ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். ஆண்டின் ஆரம்பம் சிறப்பாக இருக்கும் உங்கள் துறையில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலும் உங்களின் வேலையைப் பார்த்து உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
மே முதல் ஜூலை வரை வேலை இழப்பு அல்லது வேலை மாற்றம் ஏற்படலாம். எனவே, சற்று கவனம் தேவை. நீங்கள் ஒரு புதிய வேலையைப் பெற விரும்பினால் இந்த நேரத்தில் அது கைகூடும்.
மீன ராசி காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு சனி மற்றும் சுக்கிரனின் கூட்டுப் பலன் காரணமாக ஐந்தாவது வீடு சுறுசுறுப்பாக இருக்கும் எனவே உங்களுக்கும் உங்கள் காதலிக்கும் இடையே இடைவெளி உருவாகும். ஆனாலும் ஒருவருக்கொருவர் இடையேயான நம்பிக்கை அதிகரிக்கும்.
ஏப்ரல் 22, 2023 க்குள், குரு உங்கள் சொந்த ராசியில் இருந்து உங்கள் ஐந்தாவது, ஏழாவது மற்றும் ஒன்பதாம் வீட்டைப் பார்க்கிறார். எனவே நீங்கள் யாரையாவது விரும்பினால் அல்லது திருமணம் செய்ய விரும்பினால் இந்த காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
2023 ஆம் ஆண்டு விருச்சிக ராசிக்கு இப்படி தான் இருக்குமா
மீன ராசி திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்:
2023-ம் ஆண்டில் சுமாரான பலன் தரும் திருமண வாழ்க்கையே அமையும் வாய்ப்புகள் உள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் 11-ஆம் வீட்டில் சனியும் மற்றும் 10-ஆம் வீட்டில் சூரியனும் மற்றும் முதல் வீட்டில் குருவும் பெயர்ச்சிப்பது உங்கள் திருமண வாழ்க்கையை அழகாக மாற்றும். மேலும் உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும்.
ஆனால் குரு 2ம் வீட்டில் மற்றும் சனி பன்னிரண்டாம் வீட்டிற்கு பெயர்ச்சித்த பிறகு கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் ஏற்படும்.
மீன ராசி குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்:
மீன ராசிக்காரர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான நேரங்களை அனுபவிப்பார்கள். ஏப்ரல் 22 வரை அனைத்தையும் குரு பகவான் பார்த்துக் கொள்வார்.
அதன் பிறகு குரு சண்டாள தோஷத்தின் தாக்கத்தால் உங்கள் குடும்பத்தில் பிரச்சனைகள் தொடங்கும். மேலும் குரு உங்கள் இரண்டாவது வீட்டில் ராகுவுடன் இணைவார். அப்போது தனிப்பட்ட தகராறுகள் ஏற்படலாம்.
மீன ராசிக்காரர்களின் ஆரோக்கியம் எப்படி இருக்கும்:
மீன ராசிக்காரர்களின் ஆரோக்கியம் ஆண்டின் தொடக்கத்தில் நன்றாகத்தான் இருக்கும். அதன் பிறகு ஜனவரி 17 ஆம் தேதி சனி உங்கள் பன்னிரண்டாம் வீட்டிற்கு வந்து அங்கிருந்து உங்கள் இரண்டாவது வீட்டைப் பார்க்கும்போது இந்த நிலைமை உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
அதனால் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
2023 ஆம் ஆண்டு கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |