அபிராமி அந்தாதி பாடல் வரிகள் | Abirami Anthathi Lyrics in Tamil

Advertisement

அபிராமி அந்தாதி பாடல் | Abirami Andhadhi Song Lyrics in Tamil

Abirami Andhadhi Tamil Lyrics – அபிராமி அந்தாதி என்பது தமிழ்நாட்டில் உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சிவன் கோவிலில் அருள்புரியும் அபிராமி தெய்வம் மீது பாடிய கவிதைகளின் தமிழ் தொகுப்பு ஆகும். இந்த அபிராமி அந்தாதியில் மொத்தம் 101 பாடல்கள் இருக்கிறது. ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு பலன்களை அளிக்கின்றது. முழு பாடல்களையும்  உச்சரிக்க முடியாதவர்களுக்கு 101 ஆவது பாடலாக நூற்பயன் பாடல் அமைந்திருக்கிறது.

இந்த ஒரு பாடலை பாடினாலே இந்நூலை முழுவதுமாக படித்த பயன்கிட்டுமாம். ஆகவே தங்களது வேண்டுதல்களுக்கான அபிராமி அந்தாதி பாடல் வரிகளை அன்னையை மனதில் நினைத்து பாடுங்கள். அன்னையின் பரிபூரண அருளை பெறுங்கள். சரி இப்பொழுது 101 அபிராமி அந்தாதி பாடல் வரிகள் ஒவ்வொன்றாக பாடலாம் வாங்க.

அபிராமி அந்தாதி பாடல் வரிகள் – Abirami Anthathi Lyrics in Tamil..!

கணபதி காப்பு:- 

தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை
ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.

அபிராமி அந்தாதி பாடல் 1 (ஞானமும் நல்வித்தையும் பெற)

உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே.

அபிராமி அந்தாதி பாடல் 2 (பிரிந்தவர் ஒன்று சேர)

துணையும் தொழும் தெய்வமும், பெற்றதாயும் சுருதிகளின்
பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும் பனிமலர்பூங்
கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.

அபிராமி அந்தாதி பாடல் வரிகள் 3 (குடும்பக் கவலையிலிருந்து விடுபட)

அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப்
பிறந்தேன் நின்அன்பர் பெருமைஎண்ணாதகரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.

அபிராமி அந்தாதி பாடல் 4 (உயர் பதவிகளை அடைய)

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.

சிவபுராணம் பாடல் வரிகள்

அபிராமி அந்தாதி பாடல் 5 (மனக்கவலை தீர)

பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே.

அபிராமி அந்தாதி பாடல் 6 (மந்திர சித்தி பெற)

சென்னியது உன்பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே!
முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே.

அபிராமி அந்தாதி பாடல் 7 (மலையென வரும் துன்பம் பனியென நீங்க)

ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே.

அபிராமி அந்தாதி பாடல் 8 (பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட)

சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரைஎல்லாம்
வந்தரி; சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி; நீலி; அழியாத கன்னிகை; ஆரணத்தோன்
சுந்தரி; கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.

அபிராமி அந்தாதி பாடல் 9 (அனைத்தும் வசமாக)

கருத்தன, எந்தை தன் கண்ணன், வண்ணக் கனகவெற்பில்
பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்
முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்துஎன்முன் நிற்கவே.

அபிராமி அந்தாதி பாடல் 10 (மோட்ச சாதனம் பெற)

நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement