சிவபுராணம் | Sivapuranam in Tamil
Sivapuranam Lyrics in Tamil:- பொதுவாக சிவபக்தர்கள் வீடுகளில் வைத்து வணங்கப்படும் நூல் திருவாசகம். சிவபக்தர்கள் எப்போதும் பாடும் பாடல் சிவபுராணம் பாடல் வரிகள் தான். திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்று கூறுவார்கள். இந்த சிவ புராணம் பாடுவதன் மூலம் நமது வாழ்வில் முன்செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது சிவபக்தர்கள் நம்பிக்கையாகும். சரி சிவபுராணம் பாடல் வரிகளை மனமுருகி ஜபித்து சிவபெருமானின் பரிபூரண அருளை பெறலாம் வாங்க..
சிவபுராணம் தமிழில் – Siva Puranam in Tamil
திருச்சிற்றம்பலம்:-
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்
(திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்)
ஓம் நம சிவாய மந்திரம் மற்றும் சிவனின் 108 போற்றி.. |
சிவபுராணம் – Sivapuranam Lyrics in Tamil
சிவபுராணம் பாடல் வரிகள் – Sivapuranam Lyrics in Tamil
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
நமச்சிவாய இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன்பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரம் குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் குழல் வெல்க
ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி ! சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீர் ஆர் பெருந்துறை நம்தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்
Sivapuranam Paadal Varigal
கண் நுதலான் தன் கருணைக் கண் காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி
விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய்
எண் நிறைந்து எல்லை இலாதானே நின் பெரும் சீர்
பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன்
புல் ஆகிப் பூடு ஆய்ப் புழுஆய் மரம் ஆகிப்
பல் விருகம் ஆகிப் பரவை ஆய் பாம்பு ஆகிக்
கல் ஆய் மனிதர் ஆய்ப் பேய் ஆய்க் கணங்கள் ஆய்
வல் அசுரர் ஆகி முனிவர் ஆய் தேவர் ஆய்ச்
செல்லா அ நின்ற இத்தாவர சங்கமத்துள்
108 நந்தி போற்றி |
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றே
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரம் ஆய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!
வெய்யாய் தணியாய் இயமானன் ஆம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் போய் அகல வந்து அருளி
மெய்ஞானம் வி.மிளிர்கின்ற மெய்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல் விக்கும் நல் அறிவே
Sivapuranam Tamil Lyrics
ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய்! சேயாய் நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
கறந்த பால் கன்னலோடு நெய் கலந்தாற் போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்துடையாய்! விண்ணோர்கள் ஏத்த
மறைந்து இருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டிப்
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய
திருவாசகம் பாடல் வரிகள் – Sivapuranam Paadal Varigal in Tamil
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பு ஆகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன் மேல் வந்து அருளி நீள் கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே!
மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே!
தேசனே தேன் ஆர் அமுதே! சிவபுரனே
பாசம் ஆம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறு
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆர் உயிர் ஆய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே
அன்பருக்கு அன்பனே! யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே! துன் இருளே! தோன்றாப் பெருமையனே
ஆதியனே! அந்தம் நடு ஆகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட் கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின்
சிவபுராணம் தமிழில் வரிகள் – Sivapuranam in Tamil Lyrics
நோக்கு அரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் எம் காவலனே ! காண்பு அரிய பேர் ஒளியே
ஆற்று இன்ப வெள்ளமே ! ஆத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச், சொல்லாத நுண் உணர்வாய்
மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே ! தேற்றத் தெளிவே ! என் சிந்தனையுள்
ஊற்றான உண்ணார் அமுதே! உடையானே
வேற்று விகார விடக்குடம்பின் உட் கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா! அரனே ஓ ! என்று என்று
போற்றிப் புகழ்ந்து இருந்து பொய் கெட்டுமெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப் பிறவி சாராமே
கள்ளப் புலக் குரம்பை கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லையுள் கூத்தனே! தென் பாண்டி நாட்டானே!
அல்லல் பிறவி அறுப்பானே! ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து
திருச்சிற்றம்பலம்… திருச்சிற்றம்பலம்…
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |