உங்கள் வீட்டில் கஷ்டங்கள் நீங்கி ஐஸ்வர்யம் பெருகவேண்டுமா…! அப்போது இந்த பொருளை உபயோகிங்கள்.

Advertisement

வீட்டில் ஐஸ்வர்யம் பெருக:

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பர்களே…!. கஷ்டம்  என்பது எல்லோருடைய வீட்டிலும் இருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கடன் வாங்குவது, வீட்டில் இருக்கும் நகைகளை அடமானம் வைப்பது போன்றவற்றை செய்து வருகிறோம். இனி கவலை வேண்டாம் கஷ்டங்கள் நீங்கி ஐஸ்வர்யம் பெருக உங்களுடைய வீட்டில்  இந்த ஒரே ஒரு பொருளை மட்டும் நீங்கள் உபயோகத்தில் வைத்து இருந்தால் போதும் கஷ்டங்கள் நீங்கி விடும். அப்படி என பொருள் அது என்று யோசிக்கிறீர்களா!. பூஜைக்கு பயன்படக்கூடிய சுத்தமான சந்தன கட்டை எப்போதும் உபயோகத்தில் இருக்க வேண்டும். எனவே அதை எப்படி உபயோக படுத்தவேண்டும் என்று இன்றைய பொதுநலம். காம் பதிவில் விரிவாக பார்த்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!.

இந்த மாதிரி கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்

அதிர்ஷ்டம் தரும் பொருள்:

adhirstam tharum porul in tamil

உங்களுடைய வீட்டில் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய பொருள் பூஜை அறையில்  பயன்படுத்த கூடிய சுத்தமான சந்தன கட்டை தான். சந்தன பவுடரை உபயோகிக்க கூடாது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய சுத்தமான சந்தன கட்டையை தான்  உபயோகிக்க வேண்டும். பூஜை அறையில் மட்டும் தான் உபயோகத்தில் இருக்கவேண்டும் என்று கிடையாது.

வீட்டில் செல்வம் பெருக என்ன செய்யவேண்டும்:

உங்களுடைய வீட்டில் கஷ்டங்கள் நீங்கி செல்வம் பெருக என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி விரிவாக கீழே பார்த்து தெரிந்துகொள்ளாம்.

எதாவது ஒரு அவசர தேவை வந்துவிட்டால் யாராக இருந்தாலும் முதலில் யோசிப்பது வீட்டில் இருக்கும் நகைகளை அடமானம் வைத்து அந்த தேவையை பூர்த்தி செய்துவேண்டும். ஒரு சிலர் உடனே நகைகளை மீட்டு விடுவார்கள். சிலர் நகைகளை மீட்கலாம் என்று நினைக்கும் போது அடுத்த பணத்தேவை வந்துவிடுகிறது.

இதுபோன்று இனி நடக்காமல் இருக்க உங்கள் வீட்டிலின்  பீரோவில் பூஜைக்கு வைக்கும் சந்தன கட்டையை வைப்பதன் மூலம் நீண்ட நாளாக அடமானத்தில் இருந்த நகைகளை மீட்க முடியும். பண கஷ்டங்கள் நீங்கும். மீட்ட நகைகளை மீண்டும் அடமானம் வைக்காமல் இருக்கலாம்.

பணம், நகை இரண்டில் எதுவாக இருந்தாலும் சரி அதன் மேல் படுமாறு சந்தனத்தை வைக்கவேண்டும். அப்படி செய்தால் வீட்டில் கஷ்டங்கள் நீங்கும். அதிர்ஷ்டம் உங்கள் வீட்டை தேடி வரும். அதன் பிறகு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

பூஜை அறையில் வழக்கம்போல் சாமிபடங்களுக்கு மஞ்சள் வைப்பதற்கு பதிலாக இந்த சந்தனத்தை கொஞ்சம் பன்னீரை சேர்த்து குழைத்து பொட்டு வைப்பதன் மூலம் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். வாழ்வில் புது ஒளி பிறக்கும்.

அதேபோல்  சந்தனத்தில் பன்னீரை சேர்த்து வீட்டுவாசலில் தினமும் தெளித்து வாருங்கள்.  இப்படி தெளிப்பதனால் வீட்டில் தெய்வம் வந்து வாசம் செய்யும். அதுமட்டுமில்லாமல் வீட்டில் லட்சுமி கடாச்சம் பெருகும்.

நீங்கள் வியாபாரம் செய்பவராக இருந்தால் கல்லாப்பெட்டியில் சந்தனத்தால் பொட்டு வைத்தால்  நல்ல லாபத்தை பெறலாம். சிறிதளவு சந்தன துண்டினையும் கல்லாப்பெட்டிக்குள் வைப்பது நன்மையை தரும்.

தினமும் குளித்த பின்பு நெற்றியில் சந்தனபொட்டு  வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்  கொள்ளவது நல்லது.

வீட்டில்  லட்சுமி கடாச்சம் பெருகம் இடத்தில் சின்ன சின்ன சந்தன சக்கையினை வைப்பதால் கஷ்டங்கள் நீங்கி, ஐஸ்வர்யம் வரும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement