அறுபடை வீடு | Murugan Arupadai Veedu List

Advertisement

முருகனின் ஆறுபடை வீடு எவை | Arupadai Veedu Murugan Temple List in Tamil

Arupadai Veedu in Tamil: இந்து சமய கடவுள்களில் தமிழ் கடவுளாக கருத்துப்படுபவர் முருகப்பெருமான். முருகனுக்கு 6 கோவில்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் முருகனின் படைவீடு என்று சொல்லப்படுகிறது. முருகன் என்றாலே நம் நினைவிற்கு வருவது அழகும், அறிவும் சேர்ந்தது தான். முருகப்பெருமானின் ஒவ்வொரு படைவீடுகளும் தனி தனி பெருமைகளை கொண்டிருக்கிறது. முருகனின் திருவிளையாடலும், அவர் தோற்றமும் மக்கள் அவர்களுடைய வாழ்க்கைக்கு ஏற்ற தத்துவங்களை உணர்த்துவதாக அமைந்துள்ளது. இந்த பதிவில் முருகனின் அறுபடை வீடுகளின் சிறப்புகளையும் அவை எங்கெங்கு இடம் பெற்றுள்ளது என்பதை பற்றி விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு

முருகன் முதல் படை வீடு:

முருகன் முதல் படை வீடுமுருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடானது திருப்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமான் போரில் சூரபத்மனை தோற்கடித்து வெற்றியடைந்த பிறகு முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொள்கிறார். திருப்பரங்குன்றத்தில் தெய்வானையுடன் திருமண கோலத்தில் முருகன் காட்சி தருகிறார்.

முருகனின் இரண்டாம் படைவீடு:

முருகனின் இரண்டாம் படைவீடுமுருகப்பெருமானின் இரண்டாம் படைவீடானது திருச்செந்தூர் கடலோர பகுதியில் கோவில் அமைந்துள்ளது. இரண்டாம் படைவீடான திருச்செந்தூரை திருச்சீலைவாய் என்றும், ஜயந்திபுரம் என்றும் வேறு பெயரால் அழைக்கிறார்கள். இந்த இடத்தில் முருகன் சூரபத்மனை கொன்றதாக கந்த புராணத்தில் கூறுகிறது.

முருகனின் மூன்றாம் படை வீடு:

முருகனின் மூன்றாம் படை வீடுமுருகனுக்கு பழனி மூன்றாம் படை வீடாகும். சித்தர்கள் அனைவரும் வாழ்ந்து வந்தது பழனியில் தான். நாரதர் சிவனுக்கு அளித்த ஞானப்பழம் தனக்கு கிடைக்காததால், பிள்ளையாருடன் கோபப்பட்டு பழனியில் தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார்.

முருகன் நான்காம் வீடு:

முருகன் நான்காம் வீடு முருகனின் நான்காவது படைவீடு சுவாமிமலை. தனது பிள்ளையின்வாயினால்  பிரணவ மந்திரத்தினுடைய பொருளைக் கேட்க பிள்ளையை குருவாக ஏற்று, தான் சீடனாக அமர்ந்து குருவின் விளக்கத்தை கேட்ட இடம் தான் நான்காம் வீடான சுவாமி மலை.

முருகனின் ஐந்தாம் வீடு:

முருகனின் ஐந்தாம் வீடுமுருகப்பெருமானின் ஐந்தாம் படைவீடு திருத்தணி. திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த காரணத்தினால் முருகன் திருத்தணிக்கு சென்று தன் கோபத்தை குறைத்து கொண்டு சாந்தமானதால், அந்த ஊருக்கு தணிகை என்று பெயர் வந்தது. மேலும் வேடர் குலத்தில் பிறந்த வள்ளியை, முருகனின் அண்ணன் கணேசனின் உதவியுடன் வள்ளியை காதல் திருமணம் செய்து கொண்ட இடம் திருத்தணி ஆகும்.

முருகனின் ஆறாம் வீடு:

முருகனின் ஆறாம் வீடுமுருகனின் அறுபடை வீடுகளில் கடைசியாக உள்ளது பழமுதிர்சோலை மலையாகும். இந்த மலையில் முருகன் ஒளவை பாட்டியிடம் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டதும் முருகனின் ஞான திறமையை கண்டு நீ சாதாரண மானிடராக இருக்க முடியாது என ஒளவை புரிந்து கொண்டார். இந்த புனிதமான திருத்தலத்தில் உலக வாழ்கைக்கு தேவை கல்வி அறிவு மட்டும் போதாது இறைவனின் அருள் என்ற மெய் அறிவை அனைவரும் உணர வேண்டும் என்பதை தன் திருவிளையாடலால் உணர்த்திய இடம் தான் இந்த மலை.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Aanmeega Thagaval in Tamil   
Advertisement