ஆயில்யம் நட்சத்திரம் பிறந்த குழந்தைகளின் வாழ்க்கை இப்படியா இருக்கனும்..!

Advertisement

ஆயில்யம் நட்சத்திரம் ஆண் குழந்தை பிறந்தால் நல்லதா?

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அனைவருமே ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை எப்படி உள்ளது என்று தெரிந்துகொள்ளுங்கள். அனைவருமே இந்த நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் வாழ்க்கை நன்றாக இருக்காது. மிகவும் கஷ்டப்படுவார்கள். முக்கியமாக பெண்களாக இருந்தால் மாமியாருக்கு ஆகாது. அப்படி திருமணம் செய்துகொண்டால் மாமியார் உயிருக்கு ஆபத்து என்று நிறைய சொல்லி அந்த குழந்தையை பெற்ற பெற்றோர்களுக்கு பெரிய அச்சத்தை ஏற்படுத்திவிடுவார்கள். அப்படி யாரும் யோசித்தவர்கள் இந்த பதிவை படித்தால் உங்களுக்கு நன்மையை அளிக்குமா இல்லையா என்று தெரிந்துகொள்ளுங்கள்..!

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்:

இந்த நட்சத்திரக்காரர்கள் தாய் தந்தை மீது மிகுந்த பாசம் கொண்டவராக இருப்பார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. அதேபோல் இவருக்கு பிறப்பு முதல் 57 வயது வரை கண்டங்கள் இருந்துகொண்டு தான் இருக்குமாம். ஆனாலும் இவருக்கு 90 வயது வரை வாழக்கூடியவராக இருப்பார்கள்.

இவர்களுக்கு நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், அதேபோல் எலும்பு சம்பந்தப்பட்டநோய்கள்  வர வாய்ப்புகள் ஏற்படும்.  சிறுவயதில் பேசிச்சி வராது அதேபோல் காது தொண்டை பிரச்சனைகள் 10 வயது வரை ஏற்படக்கூடும். அதுமட்டுமில்லாமல் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திக்கி திக்கி பேசக்கூடியவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் அதிகம் ஆன்மீகத்தில் ஈடுபாடுடன் இருப்பார்கள். அதிக தெய்வ நம்பிக்கை கொண்டவராக இருப்பார்கள். இவர்கள் எதிரிகளையும் நேசிகூடியவராக இருப்பார்கள். அனைத்து ஆசைகளையும் அனுபவிக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.

இவர்களை நம்பி வந்தவர்களை எந்த விதத்திலும் கைவிட மாட்டார்கள். அதேபோல் விசுவாசத்திற்கு இவர்களே உதாரணம். எந்த வேலைகளிலும் அதிகம் தைரியத்துடன் செய்வார்கள்.

பெற்றோர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க அனைத்தையும் செய்வார்கள்.  மற்றவர்களை ஏமாற்றவேண்டும், துப்புறுத்த வேண்டும், கஷ்டப்படுத்தகூடுது அவர்களுக்கு எந்த விதத்திலும் இடையூறாக இருக்க கூடாது என்று நினைப்பார்கள்.

எந்த ஒரு கெட்ட செயல்களிலும் இவர்கள் ஈடுபட மாட்டார்கள், அந்த விஷயத்திலிருந்து கொஞ்சம் தள்ளியே இருப்பார்கள்.

நிறைய பணத்தை செலவு செய்வார்கள். குடும்பத்தின் மீது அதிக  பற்றுவைத்திருப்பார்கள். இவர்கள் 5 அடி ஒருசிலர் இருப்பார்கள் என்று உறுதியுடன் சொல்ல முடியும். மற்றவர்கள் 5 அடிக்குள் இருப்பார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகான உடல் அமைப்பை கொண்டவராக இருப்பார்கள். மென்மையான மனம் கொண்டவர்கள். காதலிக்க வேண்டும் என்ற ஆசைகொண்டவராக இருப்பார்கள்.

ஒரு சிலருக்கு காதல் திருமணம் ஆகும். ஒருசிலருக்கு காதலில்  தோல்வியை அடைவார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெண்கள் மீதி மிகவும் அன்பு கொண்டவராக இருப்பார்கள்.

ஒரு சிலருக்கு இரண்டு திருமணம் ஆகும். ஆண் பெண் இருபாலருக்குமே இரண்டு திருமணம் நடக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இவர்களுக்கு கொஞ்சம் சோம்பேறியாக இருப்பார்கள். எந்த காரியத்தையும் விரைவில் செய்து முடிக்கமாட்டார்கள். அதுபோல் அவர்களுடைய தேவையை மட்டும் விரைவில் பூர்த்தி செய்துகொள்வார்கள்.

இவர்கள் அதிகமாக வெளிநாடுகளில் மட்டுமே வாழக்கூடியவராக இருப்பார்கள். இவர்கள் குடும்பத்தில் மூத்தவராக இருக்கமாட்டார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகளவு கல்வி தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. படிப்பதில் பல குழப்பங்களை பெற்று படிப்பில் கர்வத்தை செலுத்த மாட்டார்கள். அதேபோல் இவர்கள் என்ன வேலை செய்தால் நன்றாக இருப்பார்கள் என்றால். அவருடைய அப்பாவின் தொழிலை செய்தால் நல்ல முன்னேற்றம் அடைய முடியும்.

ஆயில்யம் நட்சத்திரம் பெண் திருமணம்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement